districts

img

மீனாட்சி அம்மன் கோவில் செங்கோலும், நாடாளுமன்ற செங்கோலும்...

மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில் திருக்கல் யாண விழாவும், அழகர் ஆற்றில் இறங்கும் விழாவும் மிக வும் புகழ் பெற்றவை. லட்சக்க ணக்கான மக்களை ஈர்க்கக் கூடி யவை. மதுரை மீனாட்சியம்மன் கோவில் 8-ஆவது நாள் விழாவில் பட்டாபிஷேகம் நடைபெறும் அன்று செங்கோல் வழங்கும் நிகழ்  வும் நடைபெறும்.

நீதிமன்றம் சென்ற பழமை வாதம்!

மதுரையைச் சேர்ந்த தினகரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். “பட்டாபிஷேக நாளன்று செங்கோல், மீனாட்சியம்மன் கை களில் ஒப்படைக்கப்படும்; அந்த செங்கோலை அறங்காவலர் குழுத் தலைவர் பெற்றுக் கொள்  வார்; ஆகம விதியின் படி திரு மணம் ஆகாதவர்கள், கணவன்  அல்லது மனைவியை இழந்த வர்கள் செங்கோலைப் பெற்றுக்  கொள்ள இயலாது; மீனாட்சியம்  மன் கோவிலில் அறங்காவலர் குழுத் தலைவராக இருப்பவர் ருக்மணி பழனிவேல்ராஜன்; அவர்  கணவரை இழந்தவர்; எனவே, அவ ரிடம் செங்கோலை வழங்கக் கூடாது;  வேறு தகுதியான நபரிடம் செங் கோலை வழங்க வேண்டும்” என்று  மனுவில் கூறப்பட்டுள்ளது.

கேள்விகளால் துளைத்த நீதிபதிகள்!
ஏற்கனவே இதேபோன்ற மனு  தாக்கல் செய்யப்பட்டு இரண்டு நீதி பதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி  செய்துள்ளது என்பது அரசு தரப் பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த  மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற  நீதிபதி சரவணன், ‘விதவை செங்  கோலை வாங்கக் கூடாது என ஆகம விதியில் எங்கு உள்ளது?’ என்று கேள்வி எழுப்பி, மனுதாரரைக் கண்  டனம் செய்துள்ளார். மேலும், ‘கோவி லுக்குள் இந்துக்கள் அனைவரும் தானே செல்கிறார்கள்.. செங்  கோல் வாங்குபவரும் இந்து தானே.. இந்த காலத்திலும் இதே  போல கருத்துகளை முன்வைப் பது ஏற்கத்தக்கதல்ல!’ என குறிப்  பிட்டு மனுவைத் தள்ளுபடி செய் துள்ளார்.

மனுதாரரின் மனுவில் ஒளிந்  திருப்பது, மனு சாஸ்திர வக்கிரமே  அன்றி வேறல்ல. ‘கோவில்களை  இந்துசமய அறநிலையத்துறை யிடம் இருந்து விடுவிப்போம்’ என்று  அண்ணாலை உள்ளிட்ட பாஜக வினர் கொக்கரித்து வருகின்றனர். கோவில்கள் அரசு நிர்வாகத்தில் இருக்கும்போதே ‘ஆகமம்’ என்ற  பெயரில், இப்படி அடாவடி வழக்கு கள் தொடர முடியும் என்றால் தனி யார் வசம் கோவில்கள் போனால் என்னவாகும் என்று நினைத்து பார்க்கவே முடியவில்லை.

நீண்ட நெடிய சமூகநீதிப் போராட்டம்!
இதே மீனாட்சியம்மன் கோவி லில் 1939-ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வைத்தியநாத அய்யர் தலைமையில் பட்டியலின மற்றும் நாடார் சமூக மக்கள் ஆலய பிர வேசம் செய்தனர். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் இந்த போராட்டத்திற்கு துணை நின்றார். கோவிலில் நிர்வாக அதிகாரியாக இருந்த ஆர்.எஸ். நாயுடுவுக்கும் இதில் பெரும் பங்கு உண்டு. 

ஆலயப்பிரவேசம் நடைபெற போவதை அறிந்த வர்ணாசிரம ஸ்வராஜ்ய சங்கத்தை சேர்ந்தவர் கள் ஜூலை 9-ஆம் தேதியே கோவி லைப் பூட்டி விட முயன்றனர். ஆனால், ஜூலை 10-ஆம் தேதிக்கான அர்ச்சக  முறைக்காரர் சாமிநாத பட்டர் இதற்கு இணங்கவில்லை. ஆல யப்பிரவேசம் நடந்து முடிந்ததால் ஆத்திரமடைந்தவர்கள், மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீட்டுப் பட்டு விட்டதாகவும், மீனாட்சி அம்  மன் சக்தியை இழந்து விட்டதாக வும் கூறி மதுரைக்கு உள்ளேயே வேறொரு இடத்தில் சிலையை வைத்து இது தான் உண்மையான மீனாட்சி அம்மன் என்று கொஞ்ச காலம் கும்மியடித்தனர். ஆனால்,  அவர்கள் முயற்சி வெற்றிபெற வில்லை.

மீண்டும் மீண்டும் வருணாசிரம வம்படி!
செத்துப்போகாத அந்த சித்  தாந்தத்தின் வாரிசுகள் எல்லாம்  இப்போதும் ஒரு கைம்பெண்ணி டம் செங்கோலை தரக்கூடாது என்று  வம்படி வழக்குகள் செய்கின்றனர்.

காஞ்சி சங்கராச்சாரியார் சந்திர சேகரரை, இந்திரா காந்தி அம்மை யார் சந்திக்க வந்தபோது அவர்  ‘கைம்பெண்’ என்பதால், கிணற் றுக்கு அப்பால் அமர வைத்து பேசி யதாக ஒரு தகவல் உண்டு. வர்ணா சிரமம், மனு சாஸ்திரம் என்கிற பெய ரில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல.  அந்தக் காலத்தில் 5 வயதுக்குள் ளேயே பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்து விடு வார்கள். அவ்வாறு திருமணம் செய்த ஆண் குழந்தை இறந்து விட்டால், திருமணம் செய்துவிக்கப்பட்ட பெண் குழந்தை 80 வயது வரை வாழ்ந்தாலும் அந்த பெண்ணுக்கு மொட்டை அடித்து வெள்ளைச் சேலை உடுத்தி, உப்புப் போடாத சோறிட்டு பாயில் கூட படுக்க கூடாது  என வெறும் தரையில் உறங்க வைத்த கொடுமைகள் நடந்தன.

கணவன் இறந்ததை அறிந்த உடனேயே மனைவியும் இறந்தால் அது தலைக்கற்பு என்றும், உடன் கட்டை ஏறி இறந்தால் அது இடைக்  கற்பு என்றும், விதவை கோலம் பூண்டு வாழ்ந்தால் கடைக்கற்பு என்  றும் கதைத்தது வர்ணாசிரமம்.

கற்பு என்ற பெயரில் காலந்தோறும் அநீதி!

மானாமதுரைக்கு தந்தை பெரி யார் ஒரு முறை பேச வந்தபோது  வைகை ஆற்றுக்குள் அமைக்கப் பட்டிருந்த மேடையை ஆணா திக்க சாதிய மேலாதிக்க எண்ணம்  கொண்டோர் தீயிட்டு எரித்ததோடு  ‘ராமசாமி ஒழிக’ என கோஷமிட்டுள்  ளனர். எனினும், அதே இடத்தில்  பேசிய பெரியார், கோஷமிட்டவர் களைப் பார்த்து, ‘நீங்கள் என்னை ஒழிக! என்று சொன்னாலும் உங்  கள் வீட்டில் மொட்டை அடிக்கப் பட்டு வெள்ளைச் சேலை உடுத்திக் கொண்டு விதவை என்ற பெயரில் நரகத்தில் உழலும் சகோதரிகள், நான் சொல்வது சரிதான் என்று  ஒப்புக் கொள்வார்கள். அது போதும் எனக்கு’ என்றாராம்.

சிதம்பரம் தீட்சிதர்கள் சிலர்  இப்போதும் கூட குழந்தை திரு மண முறையை பின்பற்றுவது குறித்து வழக்கு பதியப்பட்டுள்ளது.  அவர்கள் அதை ‘தங்கள் உரிமை’ என்று கருதுகின்ற கொடுமையும் நடக்கிறது. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூட அவர்களுக்கு வக் காலத்து வாங்குகிறார்.

சித்தாந்த யுத்தத்தில் வெற்றி பெறுவோம்!

குழந்தைத் திருமணங்கள் தடுப்பும், விதவை மறுமணமும் சமூக சீர்திருத்த சாதனைகள். அண்ணல் அம்பேத்கர் உருவாக்  கிய அரசியல் சாசனத்தால் இத்த கைய கொடுமைகள் தடை செய் யப்பட்டுள்ளன.

ஆர்.எஸ்.எஸ். உருவாக்க விரும்புகிற, ‘இந்து ராஷ்டிரம்’ மனு நீதியை அடிப்படையாகக் கொண்டது. எனவே, அது பெண்  களுக்கு எதிரானது. இப்போது  நடைபெற்று கொண்டிருப்பது ஜன நாயகத்தை பாதுகாப்பதற்கான தேர்தல் மட்டுமல்ல. ஒரு சித்தாந்த  யுத்தமும் ஆகும். நாடாளுமன்றத் தில் வைக்கப்பட்ட செங்கோல் பிற்  போக்குத் தனமான மன்னர் ஆட்சிக்  காலத்தின் மிச்ச சொச்சமாகும். ‘மக்  களே மன்னர்கள்’ என்பது நிலை நிறுத்தப்பட்டால் தான் சீர்திருத்த இயக்கங்களால் உருவான பயன் களை தக்க வைக்க முடியும். கவ னம்... கவனம்...

;