election2021

img

அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் தமிழுக்குப் பதிலாக இந்தியே முன்னிறுத்தப்படும்.... டி.கே.ரங்கராஜன் எச்சரிக்கை....

கந்தர்வகோட்டை:
தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் தமிழுக்குப்பதிலாக இந்தியும், பொங்கலுக்குப் பதிலாக ஹோலிப் பண்டிகையுமே முன்னிறுத்தப்படும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதியில் போட்டியிடும்சிபிஎம் வேட்பாளர் எம்.சின்னத்துரை யை ஆதரித்து கறம்பக்குடியில் வியாழக்கிழமை அவர் பேசியது:இந்திய நாட்டின் அரசியல் சாசன சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் பெரும் மிகப்பெரிய ஆபத்து சூழ்ந்துள்ளது. பாஜக என்பது ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒரு பிரிவுதானே தவிர, அது ஒரு அரசியல் கட்சி அல்ல. ஆர்எஸ்எஸ் அமைப்பு சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காதது மட்டுமல்ல. நாடு சுதந்திரம் அடைந்ததைகூட  அவர்களால்ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

நாட்டின் முக்கியப் பிரச்சனையாக இருந்து வரும் விலைவாசி உயர்வு, விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கு ஏற்பட்டு வரும் நெருக்கடி குறித்து பாஜகவினர் பேசுவதே இல்லை. மதம், சாதிகுறித்துப் பேசி மக்களை துண்டாடுவதிலேயே அவர்கள் குறியாக இருக்கின்றனர். ஒருநாடு, ஒரு தேர்தல் என்கிறார் பிரதமர் மோடி. அப்படி நடக்கு மெனில் ஏதோ ஒரு காரணத்துக்காக ஒருமாநில அரசு கலைக்கப்பட்டால் அடுத்தஆட்சி முடியும்வரை கவர்னரே ஆட்சி செய்வார். இதன் முதல்படியாக யூனியன் பிரதேசங்களின் அதிகாரங்கள் தற்பொழுது குறைக்கப்பட்டுள்ளது.

பாஜக கூறுவது போல எல்லாவற்றையும் ஒன்றாக்கினால் தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்குப் பதிலாக ஹோலிப் பண்டிகையும், தமிழுக்குப் பதிலாக இந்தியும்தான் முதன்மையாக்கப்படும். இந்தத் தேர்தல்ஆபத்தை சந்தித்து வரும் ஜனநாயகம், அரசியல் சாசன சட்டம், சாதிமதஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டியதருணம் என்பதால் மிக முக்கியமான தாகப் பார்க்கப்படுகிறது. இவ்வாறு டி.கே.ரங்கராஜன் பேசினார். 
 

;