headlines

img

மகிழ்ச்சியும் கவலையும்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில்  நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு களில் 91.55விழுக்காடு மாணவ, மாணவியர் தேர்ச்சியடைந்திருப்பது மகிழ்ச்சியான செய்தி.  அதே நேரத்தில் பொதுத் தேர்வில்  வெற்றி வாய்ப்பை இழந்த மாணவர்கள் அடுத்த மாதமே நடத்தப்படவுள்ள துணைத் தேர்வில் பங்கேற்று தேர்ச்சியடைவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் கவலைப்படத்தேவையில்லை.  

வழக்கம்போல் இந்தாண்டும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவிகள் அதிக எண்ணிக் கையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.58 விழுக்காடும், மாணவிகள்  94.53 விழுக்கா டும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றுள்ள போதிலும் மேல்நிலைக் கல்விக்கு செல்லும் மாணவிக ளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. பெண் கல்வியை ஊக்கப்படுத்தவேண்டும் என்ப தற்காக தமிழ்நாடு ஏராளமான நலத்திட்டங் களை செயல்படுத்துகிறது. எனவே பெண் குழந் தைகள் 10 அல்லது 12 ஆம் வகுப்போடு வீட்டில் முடங்கிவிடாமல் உயர்கல்விக்கு செல்ல வேண்டும். பெற்றோர்களும் தங்களது பெண் குழந் தைகள் உயர் கல்வி கற்று  சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய பக்கபலமாக இருக்க வேண்டும். 

இந்தாண்டு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி விகி தத்தில் முதல் முறையாக அரியலூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்திருப்பதும், சிவகங்கை இரண் டாமிடமும் இராமநாதபுரம் மூன்றாமிடமும் பிடித்திருப்பதும் பின்தங்கிய விழுப்புரம் மாவட்டம் முதன்முறையாக 10ஆம் இடத்தை பிடித்திருப்பதும் வரவேற்கத்தக்கது.   

 இருப்பினும் தேர்ச்சி விகிதங்களில் இந்த ஆண்டும் வட மாவட்டங்கள் தான் கடைசி இடங் களைப் பிடித்துள்ளன.  மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களில் வேலூர் மாவட்டம்  கடைசி இடத் தில் உள்ளது. தேர்ச்சி விகிதங்களில் பல மாவட்டங் கள் பின்னடைவை சந்தித்திருப்பது குறித்தும்  பல ஆண்டுகளாக வேலூர் மாவட்டம் கடைசி இடத்தில் இருப்பது குறித்தும் தீவிரமான ஆய்வு க்கு உட்படுத்தப்பட வேண்டும்.12 ஆம் வகுப்பு பொதுத் தேர்விலும்  கடைசி 15 இடங்களில் 10 மாவட் டங்கள் வட மாவட்டங்களே. 35 ஆண்டுகளுக் கும் மேலாக நீடிக்கும் இந்த  மோசமான நிலைமைக்கு என்ன  காரணம் என்பதை பள்ளிக் கல்வித்துறை ஆராய வேண்டும்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக ளில் ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும். அனைத்துப் பள்ளிகளி லும் கழிப்பறை, குடிநீர், பாதுகாப்பான கல்வி கற்கும் சூழலை உறுதிப்படுத்துவது அவசியம். இவை தவிர சமூக, பொருளாதாரக் காரணிகள் இருந்தால் அதை மாநில அரசு கவனிக்க வேண்டும். கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரி யர்கள், மக்கள் பிரதிநிதிகளை அழைத்துப்பேசி பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை அதி கரிக்க தடையாக உள்ள காரணிகளை அரசு களையவேண்டும்.

 

;