headlines

img

துருப்பிடித்த பிரம்மாஸ்திரம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்த காணொலி சமூக வலைதளங்களில் பரவி யது தொடர்பான  வழக்கில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை தில்லி காவல்துறை யினர் விசாரணைக்காக அழைத்துள்ளனர். மேலும் பாஜக ஆளும் அசாம் மாநில காவல் துறையும் அந்த காணொலி போலியானது என்று கூறி கைது நடவடிக்கையில் இறங்கியுள்ளது. பாஜகவிடமிருந்து புகார் என்றவுடன் தேர்தல் ஆணையம் விறுவிறுப்பாக செயல்படத் தொடங்கியுள்ளது.

உண்மையில் போலியான காணொலி, பொய்யான குற்றச்சாட்டுகள், சமூகத்தில் பதற் றத்தை ஏற்படுத்தும் கருத்துக்கள் ஆகியவற் றுக்காக நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும் என்றால் முதலில் பிரதமர் நரேந்திர மோடியை கைதுசெய்திருக்கவேண்டும். குஜராத் மாநிலத் தில் புதனன்று பேசும்போது ராகுல் காந்தியை பிரதம ராக்க பாகிஸ்தான் விரும்புவதாக ஆதாரமில்லாத ஒரு தகவலை கூறியிருக்கிறார். சிறுபான்மை மக்க ளுக்கு நீதி கேட்டால் மற்ற கட்சிகளை‘வாக்கு வங்கி அரசியல்’ என்று சிறுமைப்படுத்தும் பிரதமர், இப்படி பேசி எந்த வாங்கு வங்கியை கைப் பற்றப் பார்க்கிறார்?

இன்னும் 5 கட்ட வாக்குப்பதிவு நடைபெற வேண்டிய நிலையில் வட இந்திய மாநிலங்க ளில் அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று வரு கிறது. பாஜகவின் நம்பிக்கையில் மண்ணை அள்ளிப்போடும் அளவுக்கு அவர்களுக்கு ஆதரவாக இருந்த மாநிலங்களில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. எனவே தான் பிரதமர் ஆத்திரத்தில் எதிர்க்கட்சித் தலை வர்கள் மீது அவதூறை அள்ளிக் கொட்டு கிறார்.  இந்துக்களின் செல்வத்தை பறித்து ஊடுருவல்காரர்களுக்கு வழங்க காங்கிரஸ் முயற்சிப்பதாக ஆதாரமில்லாத ஒரு குற்றச் சாட்டை தெரிவித்தார். ‘அதிக குழந்தைகளை பெறுபவர்கள்’ என்று இஸ்லாமியர்களை இழிவு படுத்தினார். இதற்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் கடும் எதிர்வினைகள் வந்தபோ தும் பிரதமர் தனது பிரச்சாரத்தை மாற்றிக் கொள்ளவில்லை. 

கடந்த பத்தாண்டுகளில் மக்களின் வாழ்வா தாரம் மிகப்பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வேலையின்மை, வறுமை, விலைவாசி உயர் வால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் எதிர்க்கட்சி களின் இடைவிடாத பிரச்சாரத்தால் தற்போது தான் உண்மை நிலையை உணரத் தொடங்கி யுள்ளனர். இது பாஜகவின் வாக்கு வங்கியை அரித்துக்கொண்டிருக்கிறது. இதனால் தனது ஆட்சி அதிகாரம் ஆட்டம் காணத் தொ டங்கியுள்ளதை எண்ணி பதறிப்போயுள்ள பிரதமர் உளறிக்கொட்டுகிறார். இந்த நாட்டில் இந்துக்கள் மிகவும் ஆபத்தில் உள்ளனர் என்ற ஆர்எஸ்எஸ்சின் வகுப்புவாத நிகழ்ச்சி நிரலை கடைசி அஸ்திரமாக மோடி கையில் எடுத் திருக்கிறார்.  ஆனால் நிலைமை எல்லையை மீறி போய்விட்டது. இனி பாஜகவை யாராலும் காப்பாற்ற முடியாது.

 

;