headlines

img

ஆயிரமாண்டு பின்னோக்கி...

பத்தாண்டு காலஆட்சி பறிபோய்விடும் என்ற பதற்றத்தில் உள்ளனர் பாஜகவும் பிரதமர் நரேந்திர மோடியும் என்பது தெளிவாகத் தெரி கிறது. அதனால் நாள் ஒரு பொய்யும் பொழு தொரு புரட்டுமாக மோடி முதல் ‘கோடி மீடியா’ வரை தேர்தல் பிரச்சாரத்தில் விதவிதமாய்ப் பேசி வருகின்றனர்.

இதில் முன்னணியில் இருப்பது பிரதமர் மோடிதான். முதலில் முஸ்லிம்கள் மீது ஊடுரு வல்காரர்கள், அதிகப் பிள்ளை பெறுபவர்கள், இந்துக்களின் சொத்துக்களை - பெண்களின் தாலி உள்பட - பறித்து அவர்களுக்கு காங்கிரஸ் தந்துவிடும் என்று வெறுப்பை விஷமாகக் கக்கி னார். இப்போது மூன்றாம் கட்டத் தேர்தலுக் காக, முஸ்லிம் மக்களை பகடைக்காயாக காங்கி ரசும் இந்தியா கூட்டணியும் பயன்படுத்துகின் றன; அதனால் பாஜகவை நோக்கி முஸ்லிம் கள் வருகிறார்கள் என்று பிளேட்டை திருப்பிப் போட்டிருக்கிறார் மோடி. 

இந்துக்களின் வாக்குகளைக் குறிவைத்தே ராமர் கோவிலைக் கட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன என்று கூறினார் மோடி; இப்போது உத்தரப்பிரதேசத்தில் கூட அது பயன் படாது என்று கருதி, முதல்வர் ஆதித்யநாத், எனக்கும் மோடிக்கும் குழந்தைகள் இல்லை; உங்களுக்குத் தான் பாடுபடுகிறோம் என்று பேசி யிருக்கிறார்.

இவர்களின் இதயம் துடிப்பது அம்பானி, அதானிகளுக்கு தான் என்பது நன்றாகத் தெரிந்ததே. இதை நாடறியும்; உலகறியும். ஹிண் டன்பர்க் அறிக்கை வந்தபோது, நாடாளு மன்றத்தில் அது பற்றி எதிர்க்கட்சிகளைப் பேச விடாமல் செய்ததும் யாருடைய குழந்தைகளுக் காக இவர்கள் பணியாற்றுகின்றனர் என்பதும் தெளிவாகத் தெரிந்ததே.

அரச குடும்பங்களின் வாரிசுகள் மட்டுமே பிரதமராக முடியும் என்ற தீய வழக்கத்தை தேநீர் வியாபாரியான நான் முறியடித்து விட்டேன் என்று தனக்குத்தானே சபாஷ் போட்டுக் கொள்கிறார் மோடி. ஆனால் 50 ஆண்டு இந்திய வரலாறு, எத்தனை புதிய பிரதமர்களை கண்டி ருக்கிறது, இவருக்கு முன் என்பதை மறைத்து ஏதோ புதிய சாதனை படைத்ததாகக் கூறுகிறார். ஆனால் இவர் மட்டும் மூன்றாவது முறை பிரதம ராக வேண்டுமாம். இவரது பத்தாண்டு வேத னையை சகித்துக் கொண்ட மக்கள் இனியும் பொறுக்க மாட்டார்கள் என்பது புரிந்ததால் கெஞ்சிக் கேட்கிறார்.

அதனால்தான், நான் இருக்கிறோனோ இல்லையோ, இந்த நாடு நிலைத்திருக்கும் என்கி றார். அதுமட்டுமின்றி ஆயிரம் ஆண்டுக்கான அடித்தளம் அமைத்து வருவதாகக் கூறுகிறார். இவர் மூன்றாவது முறை பிரதமரானால் நாடு ஆயிரம் ஆண்டு காலம் பின்னோக்கிப் போய் விடும்.இன்றைய ஜனநாயக, மதச்சார்பற்ற, சமூக நீதிக் கொள்கைகள் குழி தோண்டி புதைக் கப்படும். மீண்டும் மநுஅநீதி ஆட்சியே கோலோச் சும். எனவே நரேந்திர மோடியை - பாஜகவை  மக்கள் தோற்கடிப்பது உறுதி.

;