headlines

img

தேர்தல் ஆணையமே, விழித்துப் பார்!

ராஜஸ்தான் பிரச்சாரத்தில் ஏப்ரல் 21 அன்று, சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி எப்படி அப்பட்டமாக விஷம் கக்கினாரோ அதே வார்த்தைகளை பாஜகவின் முக்கியப் பிரச்சாரகர்களில் ஒரு வரும், ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சருமான அனுராக் தாக்கூரும் பேசியுள் ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்துக்க ளின் செல்வங்களை எல்லாம் பறித்து முஸ்லிம்க ளிடம் ஒப்படைத்து விடுவார்கள் என்றும், இந்து பெண்களின் தாலியை பறித்து விடுவார்கள் என்றும் மோடி பேசிய பேச்சை அவர் அப்படியே எதிரொலித்துள்ளார். 

மோடி தூண்டிவிட்ட வெறுப்பு பேச்சை பாஜக வின் அனைத்து நபர்களும் இப்போது  வேகமாக பேசவும், பரப்பவும் துவங்கியுள்ளனர். ஒட்டு மொத்த இஸ்லாமிய மக்கள் மீதான வெறுப்பு பிரச்சாரம் தேர்தல் பிரச்சாரக் களத்தில் தீவிர மாக விசிறிவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, அடுத்து பல்வேறு கட்டங்களில்  வாக்குப்பதிவை சந்திக் கவுள்ள வட மாநிலங்களில் பாஜக இந்தப் பிரச்சா ரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக உடனடியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு, தலைமை தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. ஆனால் தேர்தல் ஆணை யத்தின் செயல்பாடு கவலை தரத்தக்கதாகவும், கடும் கண்டனத்திற்கு உரியதாகவும் உள்ளது. ராஜஸ்தானில் மோடி பேசிய வெறுப்பு பேச்சு தொடர்பான புகார் மீது, அவருக்கு நோட்டீஸ் அனுப்புவதற்கு பதிலாக அவரது கட்சியின் தலைவரான ஜே.பி.நட்டாவுக்கு நோட்டீஸ் அனுப்பி, மோடியை பகைத்துக் கொள்ளாமல் நழுவியது தேர்தல் ஆணையம்.

இதுபோன்ற அப்பட்டமான வெறுப்புப் பேச்சுகள் மீது தேர்தல் ஆணையம் எந்த நடவ டிக்கையும் எடுக்கப் போவதில்லை என்பது தெரிந்துதான், பாஜகவின் அடுத்தடுத்த தலை வர்கள் மோடியின் அதே விஷத்தை தாங்களும் உமிழத் துவங்கியிருக்கிறார்கள். 

தேர்தல் பிரச்சாரத்தில் மதவெறுப்பை வெளிப் படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் அப் பட்டமான தேர்தல் விதிமீறல் ஆகும். அரசியல மைப்புச் சட்டத்திற்கும் விரோதமானதாகும். ஆனால் அதை பிரதமரே மீறுகிறார்; அவரது அமைச்சர் படையும் மீறுகிறது. முற்றிலும் அரசி யல் சட்டத்திற்கு விரோதமாக பேசும் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

மோடியின் ராஜஸ்தான் பேச்சுக்கு கண்ட னம் தெரிவித்து தில்லியில் உடனடியாக போ ராட்டம் நடத்தியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலை யில், மோடி மீதும் அனுராக் தாக்கூர் மீதும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் விதிகளின் படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி எழுதியுள்ள புகார் கடிதத்திற்கு இப்போதேனும் செவி சாய்க்குமா தேர்தல் ஆணையம்? 

;