india

img

உ.பியில் கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக, வெறிநாய் கடி தடுப்பூசி!

உத்திரபிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி எடுக்கச் சென்ற வயதான மூன்று பெண்களுக்கு வெறிநாய் கடி தடுப்பூசி செலுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலம், ஷாம்லியில் உள்ள காந்தலா சமூக சுகாதார மையத்தில் நேற்று (வியாழக்கிழமை) சரோஜ் (70), அனார்கலி (72), சத்தியாவதி (60), ஆகிய வயதான மூன்று பெண்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
பின்னர், தடுப்பூசி செலுத்திக் கொண்டதில், ஒரு பெண்ணுக்கு உடல்நிலை மோசமடையத் தொடங்கியதால் அவரை சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்நிலையில், சுகாதார மையத்தில் அந்த பெண்ணிடம் வழங்கப்பட்ட மருந்துக் குறிப்பில் வெறிநாய் கடி தடுப்பூசி செலுத்தப்பட்டதாக குறிப்பிருந்ததைக் கண்டு மருத்துவர் அதிர்ச்சியடைந்தார்.
இச்சம்பவம் குறித்து, கோட்டாட்சியர் மற்றும் கூடுதல் தலைமை மருத்துவ அதிகாரி ஆகியோர் தங்கள் அறிக்கையை மாலைக்குள் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

;