india

img

2024 மக்களவைத் தேர்தல்: மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத், கர்நாடகா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், கோவா, பீகார், சத்திஸ்கர், மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
2024 மக்களவைக்கான தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கடந்த மார்ச் 16 அன்று அறிவிப்பு வெளியிட்டார்.  இதன்படி முதல்கட்டமாக தமிழ்நாடு, புதுச் சேரி உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல்19 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து ஏப்ரல் 26 அன்று கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் என 89 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில், மூன்றாவது கட்டமாக அசாம் (4), பீகார் (5), சத்தீஸ்கர் (7), கோவா  (2), குஜராத் (26), கர்நாடகா (14), மத்தியப்பிர தேசம் (9), மகாராஷ்டிரா (11), உத்தரப்பிரதேசம் (10), மேற்கு வங்கம் (4) ஆகிய மாநிலங்கள் மற்றும் தாத்ரா-நாகர் ஹவேலி (2) மற்றும் டாமன்-டையூ (1), ஜம்மு-காஷ்மீர் (1) ஆகிய 3  யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில், மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகின்றது.
9 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் 10.57% வாக்குகள் பதிவு. அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 14.22% வாக்குகளும்,  குறைந்தபட்சமாக மகாராஷ்டிராவில் 6.64% வாக்குகளும் பதிவு.

;