india

விசாரணையை தாமதப்படுத்த அமலாக்கத்துறை முயற்சி

புதுதில்லி, ஏப். 29 - சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14 அன்று அமலாக்கத்துறை கைது  செய்தது. 35 முறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜி தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, உச்ச நீதி மன்றத்தில் மீண்டும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

முன்னதாக, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், அவருக்கு எதிரான வழக்கு விசாரணையை, மூன்று மாதங்களில் முடிக்க முதன்மை சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தர வுக்கு எதிராகவும் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீது பதிலளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில், செந்தில் பாலாஜி யின் ஜாமீன் மேல்முறையீட்டு மனு  மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அபய் எஸ். ஓஹா தலைமை யிலான அமர்வில் திங்களன்று வந்தது.

அப்போது அமலாக்கத்துறை வேண்டும் என்றே வழக்கை தாமதப் படுத்துகிறது என்று செந்தில் பாலாஜி தரப்பில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. நீதிமன்றம் இத்தனை நாட்கள் அவ காசம் கொடுத்தும், வழக்கு இன்று விசாரணைக்கு வரும் நிலையில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல்  செய்துள்ளது. வழக்கைப் பொறுத்த வரை, அது சில நபர்களுக்கு நடந்த கொடுக்கல் வாங்கல் விவகாரம். ஆனால் இதனை நிறுவனங்களுடன் சம்பந்தப்பட்ட மோசடியாக அம லாக்கத்துறை கட்டமைக்கிறது. மிகத் தாமதமாக பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இதன்மூலம், வழக்கின் விசாரணையை தாமதப்படுத்த அமலாக்கத்துறை முயற்சிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. செந்தில்  பாலாஜி 320 நாட்களுக்கு மேலாக சிறை யில் இருப்பதுவும் சுட்டிக்காட்டப் பட்டது. தொடர்ந்து மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் விசாரணையை மே 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
செந்தில் பாலாஜியின் குற்றச்சாட்டு க்குப் பதிலளித்த அமலாக்கத்துறை, “நாங்கள் இந்த வழக்கில் தாமத மாக பதில் அளித்ததற்கு மன்னிப்பு  கேட்டுக்கொள்கிறோம். வேண்டும் என்றே நாங்கள் தாமதம் செய்ய வில்லை” என்று சமாளித்தது. 

;