states

img

கேரளாவில் பாஜக எந்த தொகுதியிலும் வெற்றி பெறாது: எம்.வி.கோவிந்தன்

கேரளாவில் எந்த தொகுதியிலும்  பாஜக வெற்றி பெறாது என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கேரள மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் தெரி வித்துள்ளார். செய்தியாளர்களி டம் அவர் மேலும் கூறு  கையில், “திருவனந்த புரமும் சாத்திய மில்லை, திருச்சூரிலும் பாஜகவுக்கு சாத்தியமில்லை. திருவனந்தபுரம் மற்றும் திருச்சூரில் இடதுசாரி ஜனநாயக முன் னணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். இரண்  டிலும் பாஜக தோற்கும். மக்களவைத் தேர்தலில் ஓட்டுப்பதிவு  சதவீதம் நன்றாக உள்ளது. சதவீதத்தைப்  பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று தெரிகிறது. கட்சிக்கான புள்ளி விவ ரங்கள் எதுவும் இதுவரை வரவில்லை. அனைத்து தொகுதிகளிலும் எல்.டி.எப்  வெற்றி பெற வாய்ப்புள்ளது. திருச்சூர் மற்றும் திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரிதாக செய்ய வில்லை என்ற பிரச்சாரங்கள் ஜூன் 4 ஆம் தேதி வரை மட்டுமே நீடிக்கும். கவ லைப்பட ஒன்றுமில்லை” என்றார்.

;