states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பிலிப்பைன்ஸ்  தீவில் அமெரிக்காவின்  ஏவுகணை:  சீனா கடும் எதிர்ப்பு

பெய்ஜிங், ஏப்.20- பிலிப்பைன்ஸ் நாட்டுடனான கூட்டு இராணுவப் பயிற்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்கா பிலிப்பைன்ஸுக்குச் சொந்தமான லூசன் தீவில் நடுத்தரத் தூர ஏவுகணை செலுத்தும் அமைப்பை நிலைநிறுத்தியுள்ளது. இது குறித்து, சீன வெளியுறவு அமைச் சகத்தின் செய்தித்தொடர்பாளர் லின் ஜியன் வியாழனன்று செய்தியாளர்க ளிடம் பேசுகையில், “இது குறித்து சீனத் தரப்பு ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. ஒரு சார்பு இராணுவ ஆதாயத்தை நிலைநாட்டுவதற்காக அமெரிக்கா ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் நடுத்தர தூர ஏவுகணைகளை நிலைநிறுத்து வதை சீனா எப்போதும் உறுதியுடன் எதிர்க்கின்றது. சீனாவின் வீட்டுக் கதவு முன்னால் இராணுவப் பரவலை வலுப் படுத்துவது போன்ற அமெரிக்காவின் இச்செயல், பிராந்தியத்தின் பதற்ற நிலையைத் தீவிரமாக்கியுள்ளது என்று தெரிவித்தார். ஆத்திரமூட்டக் கூடியஇராணுவச் செயல்பாட்டை நிறுத்தவும், பிராந்தி யத்தின் அமைதி மற்றும் நிலைத்தன்மை யைச் சீர்குலைப்பதை நிறுத்தவும் சீனத் தரப்பு அமெரிக்காவிடம் வலியுறுத்தி யுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் புயல் மழை  87 பேர் பலி

 இஸ்லாமாபாத், ஏப். 20- கடந்த ஒரு வாரத்தில் பாகிஸ்தானில் தொடர்ச்சியான புயல் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பாதிப்புகளால் குறைந்தது 87 பேர் உயிரிழந்தனர். 82 பேர் காயமுற்றனர். நாடளவில் 2715 வீடுகள் சேதமடைந்தன.  மேலும், சில பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் நிலச்சரிவின் காரணமாக சீர்குலைந்தன என்று அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெள்ளியன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உள்ளிட்ட மத்திய மற்றும் உள்ளூர் அரசு நிர்வாகங்கள் முழு முயற்சி யுடன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மக்க ளுக்கு அவசர உதவியளித்து, பல்வேறு இடங்களில் சீர் கலைந்த நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்களைச் செப்ப னிட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் வெள்ளியன்று உத்தரவிட்டார்.

பாலஸ்தீனம் ஐ.நா. உறுப்பு நாடாகும் தீர்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

அமெரிக்காவின் நிலைபாட்டுக்கு சீனா ஏமாற்றம்

ஐ.நா, ஏப்.20- ஐ.நாவின் அதிகாரப்பூர்வ உறுப்பு நாடுகளில் ஒன்றாகப் பாலஸ் தீனத்தைச் சேர்ப்பது குறித்து, ஐ.நா  பாதுகாப்பு சபை ஏப்ரல் 18 வியாழ னன்று வாக்கெடுப்பு நடத்தியது. ஐ.நா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடான அமெரிக்கா இதில் எதிர்ப்பு வாக்கு அளித்ததன் காரண மாக, இந்த வரைவுத் தீர்மானம் நேரடி யாக நிராகரிக்கப்பட்டது. இந்த வாக்கெடுப்பில், பாலஸ்தீனத்து க்கு ஆதரவாக 12 நாடுகள் வாக்களித் தன. பிரிட்டன் மற்றும் ஸ்விட்சர்லா ந்து பங்கெடுக்கவில்லை. அமெரிக்கா மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தது. சுதந்திர நாடு : பாலஸ்தீன மக்கள் உரிமை இதுபற்றி ஐ.நாவிற்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ஃபூசொங் கூறு கையில், அமெரிக்காவின் முடிவு குறித்து சீனா ஏமாற்றம் அடைவதாக வும், சுதந்திர நாட்டை உருவாக்கு வது, பாலஸ்தீன மக்களின் பறிக் கப்பட முடியாத உரிமையாகும் என்றும் தெரிவித்தார். மேலும், ஐ.நாவின் உறுப்பு நாடாக பாலஸ் தீனம் விளங்குவது, பாலஸ்தீன-இஸ்ரேல் பேச்சுவார்த்தைக்கு நிபந்த னையை உருவாக்குவதற்குத் துணை புரியும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே, பாலஸ்தீன ஹமாஸ் இயக்கம் வெள்ளியன்று வெளியிட்ட அறிக்கையில், அமெ ரிக்காவின் நிலைபாட்டுக்குக் கண்ட னம் தெரிவித்துள்ளது.

‘சர்வதேச சட்டத்தைப் பின்பற்றுவதில் அமெரிக்காவுக்கு தனிச்சலுகை கிடையாது’

பெய்ஜிங், ஏப். 20- சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ ஜகர்தாவில் இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர் ரைடேனொ வுடன்  வியாழனன்று பேச்சுவார்த்தை  நடத்தினார். அதன் பிறகு கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தார்.  காசா பிரச்சனையில் சீனாவில் நிலைப்பாடு பற்றி செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளிக்கையில், காசா மோதல் அரை ஆண்டாக நீடித்துள்ளது.  சர்வதேச சமூகத்தின் வேண்டுகோளின் படி காசா மோதல் நிறுத்தம் பற்றிய தீர்மானங்களை ஐ.நா பாதுகாப்பு சபை தொடர்ந்து பரிசீலனை செய்து வருகிறது. ஆனால், அமெரிக்கா தனது ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரித்து வருகிறது என்று வாங்யீ தெரிவித்தார். சர்வதேச சட்டத்தைப் பின்பற்று வதில் ஐ.நாவுக்கும், அமெரிக்கா வுக்கும் தனிச்சலுகை ஏதுமில்லை. அமெரிக்கா தனது சர்வதேச பொறுப்பை ஏற்று, 2728ஆவது தீர்மா னத்துக்கு ஆதரவு அளித்து, காசா வில் வெகுவிரைவில் முழுமையாக போர் நிறுத்தத்தை நனவாக்க வேண்டும் என்றும் வாங்யீ வேண்டு கோள் விடுத்தார்.

 

;