states

மோடியின் பேச்சை விமர்சித்த பாஜக சிறுபான்மை பிரிவின் தலைவர் கைது

ஜெய்ப்பூர், ஏப்.28- ராஜஸ்தானில் மோடியின் முஸ்  லிம் விரோத வெறுப்புப் பேச்சை  விமர்சித்து பாஜகவால் வெளியேற் றப்பட்ட சிறுபான்மை மோர்ச்சா தலைவர் உஸ்மான் கனி கைது செய்யப்பட்டார்.        ராஜஸ்தான் காவல்துறையின் இந்த நடவடிக்கை அமைதியை சீர்  குலைப்பதாக குற்றம் சாட்டப்பட் டுள்ளது. ராஜஸ்தானில், பாஜக வில் சிறுபான்மையினரின் குரலாக  இருந்த சிறுபான்மை மோர்ச்சாவின்  பிகானிர் மாவட்டத் தலைவராக கனி  இருந்தார். மோடியின் முஸ்லிம் விரோத வெறுப்புப் பேச்சை இவர் விமர்சித்  தார். அதற்காக கனியை பாஜக  புதன்கிழமை நீக்கியது. கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி யதாக பாஜக தலைவர் ஓங்கர் சிங் தெரிவித்தார். கட்சி ஒழுக்கத்தை மீறியதாகக் கூறி, பாஜகவின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து கனி ஆறு ஆண்டுகளுக்கு நீக்கம் செய்யப்பட்டார். ராஜஸ்தானின் பன்ஸ்வாராவில்  நடந்த பேரணியில், மோடியின் முஸ்  லிம் விரோதப் பேச்சை கனி விமர்  சித்தார். முஸ்லிம்கள் ஊடுருவி அதிக குழந்தைகளை பெற்றெடுக்கி றார்கள் என்றும், இந்துக்களின் சொத்துகளை திருடி முஸ்லிம்க ளுக்கு கொடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாகவும் மோடி, பன்ஸ் வாராவில் பேசியிருந்தார். ஒரு முஸ்  லிம் என்ற முறையில், மோடியின்  பேச்சால் தான் ஏமாற்றமடைந்ததாக ஒரு தொலைக்காட்சியில் கனி கூறி னார். பாஜகவுக்கு வாக்களிக்குமாறு முஸ்லிம் வாக்காளர்களை தாம் சந்  திக்கும்போது, பிரதமரின் பேச்சு குறித்து அவர்கள் கேள்வி எழுப்பு வதாகவும், அதற்குப் பதில் அளிக்க  முடியவில்லை எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இதன் கார ணமாக ராஜஸ்தானில் பாஜக மூன்று முதல், நான்கு இடங்களை இழக்கும் என்றும் அவர் கூறினார். அதன் பின்  னர் கைது நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது.

;