states

அந்தப் பெருமை மோடியையே சாரும்!

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுகிறதோ இல்லையோ, பழம்பெருமைகளைப் பேசிக்கொண்டு தற்காலத்திய உலகைக் கவனிக்கத் தவறுவது, ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு  உதவுவதில்லை. ஆனால், அதைத்தான் கடந்த  10 ஆண்டுகளாக மோடி அரசு செய்துகொண்டி ருக்கிறது. அதனால், இதே காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் ஏற்படத் தொடங்கியுள்ள தொழில்துறை இடப்பெயர்ச்சியின் பலன்களைப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை இந்தியா தவறவிட்டுள்ளது. தொழில்துறை மற்றும் உழைப்பின் இடப்பெயர்ச்சி என்பது, குறைவான கூலி  உள்ளிட்ட காரணங்களால் கூடுதல் லாபத்திற்கு வாய்ப்புள்ள நாடுகளில் தங்களது உற்பத்தி நிலை யங்களைப் பெரிய நிறுவனங்கள் நிறுவிக்கொள் வதாகும். வளர்ந்த நாடுகளில் நிலவும் அதிகமான  கூலிக்கு மாற்றாக, குறைவான கூலி இருக்கக் கூடிய வளரும் (பின்தங்கிய) நாடுகளில் உற்பத்தி நிலையங்களை அமைத்துக்கொள்ளும் என்று நமக்குத் தெரியும். ஆனால், அப்படி அமைத்துக்கொண்ட நாடுகளிலிருந்து உற்பத்திப் பொருட்களை எடுத்துச் செல்வதில் கோவிட் பெருந்தொற்று, ரஷ்யா-உக்ரைன் போர் என்று சரக்கை எடுத்துச் செல்வதற்கு இடையூறுகள் வரும்போது, தங்கள் நாட்டிலேயோ, அருகிலுள்ள  நாடுகளிலேயோ உற்பத்தி செய்து கொள்வது தான் நல்லது என்ற நிலைக்கு பெரிய நிறுவனங்கள் வருகின்றன.  இவற்றையெல்லாம்விட, வளரும் நாடுகளிலும் கூலி உயருகிறது. உதாரணமாக சீனா, கிழக்கு ஐரோப்பிய, மத்திய ஆசிய நாடு களில், 2000-2010 காலகட்டத்தில் கூலி மூன்று மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஆனால், வளர்ந்த நாடுகளில் கூலி தேக்கமடைந்த நிலை யில் உள்ளது. அதனால், தங்கள் நாடுகளிலேயே உற்பத்தி செய்துகொள்ளலாம் என்று பெரு நிறுவனங்கள் முடிவுக்கு வருகின்றன. அண்மைய ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியடைந்து வரும் ரோபோட்டிக்ஸ் துறை அதற்குத் துணை புரிகிறது. 

நாடுகளை தேடும் நிறுவனங்கள்...

மிகக்குறைவான தொழிலாளர்களை நியமித்து, பெரும்பகுதிப் பணிகளை எந்திரங்கள் மூலம் செய்யும்போது, தங்கள் நாட்டில் நிலவும் அதிகக் கூலி என்பது இடையூறாக இல்லாமல் போய்விடுகிறது. ரோபோவுக்கான மின் கட்டணம், உழைப்பாளிக்கான கூலி, இவற்றில் எது குறைவோ அதைத்தான் முதலாளித்துவம் தேர்ந்தெடுக்கும் என்பது தெரியாததல்ல. ஆனால், ரோபோக் களை நிறுவுவது தொடக்கத்தில் மிகப்பெரிய செலவை ஏற்படுத்தி விடுகிறது. அது மட்டுமின்றி,  வளர்ந்த நாடுகளில் அப்படித் தேக்கமடைந்த கூலியே மிக அதிகம். உதாரணமாக அமெரிக்கா வில் நிலவும் கூலி, ஃபிலிப்பைன்சைப் போல 20  மடங்கு. அதனால், இன்றும் கூலி குறைவான வேறு  நாடுகளை அத்தகைய நிறுவனங்கள் தேடு கின்றன.  2018இல் சீன - அமெரிக்க உறவில் ஏற்பட்ட விரிசலும் நிறுவனங்களுக்கு நெருக்கடியைக் கொடுத்த நிலையில், முதலீடுகள் சீனாவுக்குச் செல்வதைத் தடுக்க அரசியல் நெருக்கடிகளும் கொடுக்கப்படுவதால், ஆசியாவிலேயே வேறு நாடுகளை அந்நிறுவனங்கள் தேடுகின்றன. சீனத் தொழிலாளர்களின் கூலி, இந்தியத் தொழிலாளர் களின் கூலியைப் போல இருமடங்கு என்ப தால், அப்படியான நிறுவனங்கள் இந்தியா விற்கு வரவேண்டும். ஆனால், அவை வியட்நாம், இந்தோனேஷியா போன்ற நாடுகளுக்குத்தான் செல்கின்றன. ஏனென்றால், இந்தியத் தொழி லாளர்களின் உற்பத்தித் திறன் குறைவாக இருக்கிறது. உதாரணமாக, இந்தியத் தொழி லாளர்களைப் போல இரு மடங்கு கூலி பெறும் சீனத் தொழிலாளர்களின் உற்பத்தித் திறன், இந்தியத் தொழிலாளர்களைப் போல 5 மடங்கு என்கிறார்கள். இந்தியாவில் வளர்ச்சிக்கான ஆய்வுகளில்(ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட்) முத லீடு குறைவாக இருப்பதே, இங்கு உற்பத்தித் திறன் குறைவாக இருப்பதற்குக் காரணம் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

ஆறும் நாற்பதும்...

அப்படி முதலீடு குறைவாக இருக்கக் காரணம் தனி மனித நுகர்வு குறைவாக இருப்பது என்றும், தனி மனித ஜிடிபி குறைவாக இருப்ப தாலேயே நுகர்வு குறைவு என்றும் ஆய்வுகள் கூறு கின்றன. கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவின் தனிமனித ஜிடிபி 6 மடங்கு வளர்ந்திருக்கிறது. ஆனால், சீனாவில் அது 40 மடங்கு வளர்ந்திருக் கிறது. அதிலும் குறிப்பாக, கடந்த பத்தாண்டில் இந்தியா மிகப்பெரிய தேக்க நிலையில் இருக்கிறது. அதே காலகட்டத்தில் வியட்நாம் போன்ற நாடுகள் மிகப்பெரிய பாய்ச்சலைச் சந்தித்திருக்கின்றன. அதனால்தான், ஆசியா விலேயே வேறு நாடுகளில் உற்பத்தி செய்து கொள்ள முயற்சிக்கிற நிறுவனங்களைக் கூட  ஈர்க்க முடியாத நிலையில் இந்தியா இருக்கிறது.  (உற்பத்தியின்) ‘மிகப்பெரிய இடமாற்ற தசாப்தம்’ என்று பல்வேறு ஆய்வு நிறுவனங்களும் குறிப்பிடு கிற காலத்தில், அதன் பலனை அடைய முடியாத அளவு இந்தியா முடமாக்கப்பட்டுள்ளது என்றால் அந்தப் பெருமை மோடியையே சாரும்! புராண காலத்திய பெருமை பேசுவது மக்களை ஏமாற்ற மட்டும்தான் பயன்படும். நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது. பல ஆயிரம் கோடி செலவில் செய்யப்படுகிற வெற்று விளம்பரங் களும் அப்படித்தான். அவற்றை மட்டும்தான் மோடி அரசு செய்துகொண்டிருக்கிறது! - அறிவுக்கடல்

 

;