states

img

திரிபுரா தேர்தல் முறைகேடுகளை கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்

திரிபுராவில் நடைபெற்ற தேர்தல் முறைகேடு தொடர்பான சிபிஎம் திரிபுரா மாநிலக்குழு அளித்த புகார்கள் மீது உடனடி நடுவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் உள்ள 2 மக்களவை தொகுதிகளுக்கும், காலியாக இருந்த ராம்நகர் சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த 3 தொகுதிகளிலும் இடதுசாரிகள் - காங்கிரஸ் அடங்கிய “இந்தியா” கூட்டணி களமிறங்கியுள்ள நிலையில், திரிபுரா மேற்கு மக்களவை தொகுதிக்கும், ராம்நகர் சட்டமன்ற தொகுதிக்கும் ஏப்ரல் 19 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வெள்ளியன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் திரிபுரா கிழக்கு (பழங்குடி) மக்களவைத் தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல்கட்ட வாக்குப்பதிவிலும், இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்திலும் பாஜகவினர் தேர்தல் ஆணைய விதிகளை மீறி பல்வேறு இழிவான செயல்களில் ஈடுபட்டனர்.

“இந்தியா” கூட்டணி முகவர்கள் மீதும், பொதுமக்கள் மீதும் தாக்குதல்

ஏப்ரல் 19 அன்று நடை பெற்ற முதல்கட்ட வாக்  குப் பதிவில் தோல்வி பயத்தில் உள்ள ஆளும் பாஜக,  “இந்தியா” கூட்டணி வேட்பா ளர்களுக்கு வாக்குச்சாவடி முகவராக யாரும் பணியாற்றக்  கூடாது என இடதுசாரிகள் மற்  றும் காங்கிரஸ் ஊழியர்கள் மீது தனது கட்சி குண்டர்களை  வைத்து பாஜகவினர் வீடு புகுந்து தாக்குதல்கள் நடத்தி னர். முக்கியமாக தங்களுக்கு வாக்களிக்க மாட்டர்கள் என  வாக்காளர்களை முன்கூட்  டியே அடையாளம் கண்டு அவர்களது வீட்டிற்குச் சென்று  மிரட்டியும், வீடுகளை விட்டு வெளியே வரவிடாமல் அடைத்  தும், உடல் ரீதியான சித்ரவதை களையும் நிகழ்த்தி பாஜக குண்  டர்கள் இழிவான அரசியல் சூழ்ச்சியில் ஈடுபட்டனர். மிரட்ட லுக்கு அஞ்சாமல் வாக்குச்சாவ டிக்கு வந்த வாக்காளர்களை, வாக்குச் சாவடியிலேயே போலீ சார் முன்னிலையில் பாஜக  குண்டர்கள் தாக்குதல் நடத்தி யுள்ளனர். இது போக தொகு திக்கு சம்பந்தம் இல்லாத வெளி யாட்களை திரட்டி பாஜக குண்  டர்கள் மூலம் வாக்களிக்காமல்  இருந்த வாக்காளர்களின் பெய ரில் கள்ள ஓட்டையும் போட  வைத்தனர். இத்தகைய பாசிச  செயல்பாடுகளால் திரிபுரா மேற்கு மக்களவை தொகுதிக்கும்,  ராம்நகர் சட்டமன்ற தொகுதிக்  கும் மே 7 அன்று நடைபெறும்  மூன்றாம் கட்டத் தேர்தலில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்  டும் என மாநில தேர்தல் ஆணை யத்திடம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திரிபுரா மாநி லக் குழு கடிதம் மூலம் கோரிக்கை  வைத்தது. இந்த கடிதத்திற்கு  மாநில தேர்தல் ஆணையம்  இன்னும் எவ்வித பதிலும் அளிக்கவில்லை.

109% வாக்குகள் பதிவானது எப்படி?

வாக்குப்பதிவு நடைபெற்ற 2 நாட்களுக்குப் பிறகு வெளி  யான தகவல் மேலும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியது. அதாவது திரி புரா மேற்கு மக்களவைத் தொகுதி யில் உள்ள மஜ்லிஸ்பூர், கயார்பூர்,  மோகன்பூர் உள்ளிட்ட 3 சட்டமன்ற  தொகுதிகளில் உள்ள 4 வாக்  குச்சாவடிகளில் வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கையை விட  அதிக எண்ணிக்கையிலான, அதா வது 100%க்கும் மேலாக வாக்குப்  பதிவு நடைபெற்றதாக மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி புள்ளிவிபர ஆதா ரத்துடன் தகவல் அறிக்கை வெளி யிட்டது. தொடர்ந்து அதே புள்ளி விபர அறிக்கையுடன் திரிபுரா  மேற்கு மக்களவை தொகுதியில் 100% க்கும் மேலாக வாக்குப்பதிவா னது தொடர்பாக நடவடிக்கை எடுக்க  வேண்டும் என ஏப்ரல் 22 அன்று  இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சிபிஎம் திரிபுரா மாநிலக் குழு புகார் கடிதம்  மூலம் கோரிக்கை விடுத்தது. 

இந்த புகார் கடிதத்திற்கும் இந்  திய தேர்தல் ஆணையம் நடவ டிக்கை எடுப்பதாக எவ்வித பதிலும் அனுப்பவில்லை.

திரிபுரா மேற்கு மக்களவைத் தொகுதியில் 
100% மேலாக வாக்குப் பதிவு நடைபெற்ற வாக்குச்சாவடிகள்

மஜ்லிஸ்பூர் - வாக்குச் சாவடி எண் : 44 
மொத்த வாக்குகள் - 545
பதிவான வாக்குகள் - 574
வாக்கு சதவீதம் : 105%
காயர்பூர் - வாக்குச் சாவடி எண் : 25
மொத்த வாக்குகள் - 820
பதிவான வாக்குகள் - 830
வாக்கு சதவீதம் : 101%
காயர்பூர் - வாக்குச் சாவடி எண் : 44
மொத்த வாக்குகள் - 1290
பதிவான வாக்குகள் - 1292
வாக்கு சதவீதம் : 101%
மோகன்பூர் - வாக்குச் சாவடி எண் : 38
மொத்த வாக்குகள் - 451
பதிவான வாக்குகள் - 492
வாக்கு சதவீதம் : 109%

 

18-ஆவது மக்களவைத் தேர்தலில் “இந் தியா” கூட்டணி அபார வெற்றி பெற்று  ஆட்சியைப் பிடிக்கும் என “கோடி மீடியா”  ஊடகங்களை தவிர்த்து மற்ற பெரும் பாலான ஊடகங்கள் கருத்துக்கணிப்பை வெளியிட்டு வருகிறது. இதனால் கலக்கம டைந்துள்ள பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக வினர் இஸ்லாமிய மக்களை இழிவுபடுத்தி யும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டையும் வெறுப்புப் பேச்சுகளாக கக்கியுள்ளனர்.

இந்நிலையில், திரிபுரா மாநிலத்தில் பாஜகவினர் வரம்பு மீறி வெறுப்புப் பேச்சு மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்ததாக சிபிஎம்  திரிபுரா மாநிலச் செயலாளர் ஜிதேந்திர  சவுத்ரி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு  கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “திரிபுரா கிழக்கு (பழங்குடி) பாஜக வேட்பா ளர் கிருத்தி சிங் தேப்பர்மன் தேர்தல் பிரச்சா ரத்தின் பொழுது,”சிபிஎம் ஒரு மனிதக் கொலையாளிகளின் கட்சி” என்று கூறியுள்ளார்.

இதே போல திரிபுரா மேற்கு பாஜக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான பிப்லப் குமார் தேப், திரிபுரா கிழக்கு தொகுதி பாஜக வேட்பாளரான கிருத்தி சிங் தேப்பர்  மனை ஆதரித்து கல்யாண்பூரில் நடைபெற்ற  பிரச்சாரக் கூட்டத்தில், “கம்யூனிஸ்டுகள் ரத்தவெறி பிடித்தவர்கள். ஏழைகளின் ரத்தத்தை விற்று கிடைக்கும் வருமானத்தை கம்யூனிஸ்டுகள் சாப்பிடுவார்கள். ஏழை களை விற்று வாழ்வதே இவர்களின் தொழில்.  ஏழைகளின் வாழ்க்கையையும் பறிக்கிறார் கள்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். (ஆதாரம் : டிஜிட்டல் செய்தி இணைப்பு: https://syandanpatrika.in/rajya/article-46821) 

மேலும் ஏப்ரல் 22 அன்று பிப்லப் குமார் தேப், டெலியமுராவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுதிப் ராய் பர்மனை குறிவைத்தும் சர்ச்  சைக்குரிய வகையில் தனிப்பட்ட தாக்குதலு டன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

ரூ.2 லட்சம் தருகிறார்களாம்
ஏப்ரல் 22, 2024 அன்று பாஜக தலைவ ரும், மாநில அமைச்சருமான ரத்தன் லால் நாத் கோவாய் சட்டமன்ற தொகுதியில் நடை பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், “அதிக வாக்குகள் பதிவாகும் வாக்குச்சாவ டிக்கு இரண்டு லட்சம் ரூபாய் பரிசு தரு வேன்” என பேசினார். இது கள்ள ஒட்டு  மூலம் வாக்களிப்பதற்கான வெளிப்படை யான தூண்டுதலாகும். முக்கியமாக முதல்கட்ட வாக்குப்பதிவை எதிர்கொண்ட திரிபுரா மேற்கு மக்களவை தொகுதிக்கு உட்பட்ட மோகன்பூர் சட்டமன்ற தொகுதி யில் 109% அளவில் வாக்குப்பதிவு நிகழ்ந் துள்ளது. மோகன்பூர் ரத்தன் லால் நாத்தின் சொந்த தொகுதி என்ற நிலையில், அந்த தொகுதியில் கள்ளஓட்டு மூலமே 109% அள வில் வாக்குப் பதிவாகியுள்ளதாக சந்தேகம் வலுத்துள்ளது. இரண்டாம் கட்ட  தேர்தலிலும் கள்ள ஓட்டுக்களை ஊக்கு விக்க ரத்தன் லால் நாத் பிரச்சாரம் மேற் கொண்டுள்ளார்.

சீத்தாராம் யெச்சூரியும் வலியுறுத்தல்

திரிபுராவில் நடைபெற்ற தேர்தல் முறைகேடு, கள்ள ஒட்டு மற்றும் வெறுப்புப் பேச்சு தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில தேர்தல் ஆணையம் மற்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சிபிஎம் திரிபுரா மாநிலக் குழு மூன்று முறை கடிதம் எழுதியுள்ளது. இந்த மூன்று கடிதத்திற்கும் மாநில மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் இன்னும் எவ்வித பதிலும் அளிக்கவில்லை. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி திரிபுரா தேர்தல் சர்ச்சை விவகாரங்கள் தொடர்பாக விரைந்து நடவடிக்கைக் கோரி கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். அந்த கடிதத்துடன் இரண்டு நகல்கள் இணைக்கப்பட்டுள்ளன. முதலாவதாக திரிபுரா மேற்கு நாடாளுமன்ற தொகுதியில் உள்ள சில வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகளுக்கும் மொத்த வாக்குகளுக்கும் இடையே பொருத்தமின்மை உள்ளது. இரண்டாவதாக திரிபுரா மேற்கு நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக இருக்கும் பாஜகவின் பிப்லப் குமார் தேப்பின் அருவருப்பான மற்றும் நயவஞ்சகமான பேச்சுக்கள் பற்றியது. இந்த இரண்டு புகார்களையும் தீவிரமாக எடுத்து இந்திய தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் சீத்தாராம் யெச்சூரி குறிப்பிட்டுள்ளார்.

;