states

img

பாஜக ஆட்சியில் பத்திரிகைச் சுதந்திரம் படும்பாடு!

உலகெங்கிலும் உள்ள தொழிலாளர் களின் உரிமைப் பிரகடனம் மே தினம். பத்திரிகையாளர்களை பொருத்தமட்டில் மே 3 மிக முக்கிய நாள். அது தான் உலக பத்திரிகை சுதந்திர தினம்.

எது ஜனநாயகம்? 

ஒரு நாட்டில் ஜனநாயகம் தழைக்க நான்கு தூண்களும் வலுவாக இருக்க வேண்டும். அதிலும் நான்காவது தூணாக போற்றப்படும் பத்திரிகைகள் சுதந்திரமாகச் செயல்பட வேண்டியது முக்கியமானதாகும். ஜனநாயகத்தை கட்டிக் காப்பாற்றுவதில் எங்களை மிஞ்சிக் கொள்ள உலகில் ஒருவரும் இல்லை என்று மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்காவிலும் பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக வாழ முடியவில்லை. அதேபோன்று, உலகின் மிகப் பெரிய ஜன நாயக நாடு என்று கூறப்படும் இந்தியாவில் ‘வல்லான் வகுத்ததே’ சட்டம் என்று செயல் பட்டுக் கொண்டிருக்கும் பாஜக ஆட்சியில் ஜனநாயகம் படும் பாடு சொல்லி மாளாது. 1998 ஆம் ஆண்டு பிரிட்டன் அரசாங்கமே தேசத் துரோகச் சட்டத்தை ரத்து செய்த நிலை யில், மோடியின் ஆட்சியில் ஸ்டான் சுவாமி போன்ற மனித உரிமைப் போராளிகள், செயற் பாட்டாளர்கள் மற்றும் ஊடகத்துறையினர் தேசத் துரோக குற்றச்சாட்டில் கைது செய்வது மூன்றில் ஒரு பங்கு அதிகரித்திருக்கிறது. இது வெட்கக்கேடானது. 

உண்மைகளை விழுங்கும் போலிகள்! 

அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தா னிலும் “ஊடகச் சுதந்திரம்” மறுக்கப்பட்டுள்ளது. உண்மைச் செய்திகளை மக்களுக்கு தெரியப் படுத்த முற்படும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல், மிரட்டல், கொலைக்கு உள்ளாகி வருகின்றனர். மறுபக்கம் இந்தியாவில் கைது, காணாமல் போதல் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது.  உதாரணம், கர்நாடக மாநிலத்தின் முழு நேர பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், சமூ கத்தில் நிலவும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பத்திரிகை நடத்தி வந்த நரேந்திர தபோல்கர்‌, சமூக ஆர்வலர்கள் எம்.எம்.கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, ரைசிங் காஷ்மீர் பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புகாரி என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. கடந்த காலங்களில் செய்தி நிறுவனங்கள், செய்தித்தாள்கள் மக்களின் நன்மதிப்பை பெற்றன. இதற்கு ஒரு காரணம் உண்டு. நாட்டின்  மிகப்பெரிய ஊழல், மோசடி, அராஜகங்களை அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து வெளியிட்டுக் கொண்டிருந்தன. புலனாய்வுச் செய்திகளும் தவறாமல் இடம்பெற்று வந்தன. இதனால் தினம் காலையில் பத்திரிகை படிக்கும் வழக்கம் அதிகரித்தது.  செய்தித்தாள்கள் வெளியிடும் ஊழல் செய்திகளை படிக்க மக்கள் ஆர்வத்துடன் எதிர் நோக்கி இருந்தனர். இந்த செய்தி முக்கியமாக வருமா, அந்தக் கொலை மற்றும்  அரசியல் கட்சியின் செய்திகள் வராதா என ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் இவை அனைத்தும் மலையேறிவிட்டது. பாஜக ஆட்சியில் எல்லாமே நன்றாக இருப்பது போன்ற ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல், பீதியையும் வன்முறையையும் தூண்டுவதற்கு ஒரே ஒரு பொய்ச் செய்தி மட்டுமே போதுமானதாக உள்ளது.‌இத்தகைய போலிச் செய்திகள் என்பது துரித உணவு போன் றது. விரைவானது மட்டுமல்ல, சுவையானதும் கூட. இது உலக அளவில் சமூக வீழ்ச்சிக்குக் காரணமாக உள்ளது. 

பின்னோக்கிய முன்னேற்றம்

கடந்த 10 ஆண்டுகளாகவே இந்திய ஊட கங்கள் பலவும் அரசியல் ரீதியாகவும், லாப நோக்கத்திற்காகவும் தான் செயல்படுகின்றன. பெரும் லாபத்தை ஈட்டும் கார்ப்பரேட் நிறு வனங்களின் கைகளில் குவிந்துள்ளன. இதன் விளைவு! பத்திரிகை சுதந்திர ஊடகத்தின் மீது  முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒன்றிய பாஜக அரசின் தாக்குதல் மற்றும் அடக்குமுறை அதிகரித்துவிட்டது. பத்திரிகை நிறுவனங்கள் மற்றும் பத்திரிகை யாளர்கள் இடையே நிலவும் ஒற்றுமையின்மை யால்  “சுதந்திர குரல்” அரசியல் ரீதியாக சிறை பிடிக்கப்பட்டுள்ளன. ஊடக சுதந்திரத்தின் மோச மான இந்த நிலை குறித்து ஊடகங்களு க்குள்ளேயே மிகக் குறைவாகவே விவாதம் எழுகிறது. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பத்திரிகை யாளர்களை கொலை செய்வதில் முதல் 10 இடத்தில் இடம் பிடித்து இந்தியா, மிக மோசமான தேசமாக மாறியிருக்கிறது. இதுமட்டுமல்ல, பத்திரிகையாளர்களை சிறைப்படுத்துவதில் முதல் 20 இடத்திற்குள் உள்ளது. குறிப்பாக அர சுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் 93 விழுக் காடு பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள் ளனர்.

தீர்வுதான் என்ன?

இந்தியாவில் பத்திரிகைச் சுதந்திரம் ஒரு போதும் முழுமையானதாக இருந்ததில்லை. சிறிய நகரங்களில்கூட நிருபர்கள் அச்சுறுத் தப்படுகிறார்கள்; தாக்கப்படுகின்றனர். கொலை யும் செய்யப்படுகின்றனர். ஒன்றிய பாஜக அரசாங்கத்தின் அழுத்தத் தால், சுதந்திரச் சிந்தனை கொண்ட செய்தியா ளர்கள், ஆசிரியர்கள் மற்றும் நெறியாளர்கள், ஊடக உரிமையாளர்களால் பணிநீக்கம் செய்யப்படுவது, வேறு துறைகளுக்கு மாற்றி பந்தாடுவது சர்வ சாதாரணமாகிவிட்டது.   ஒன்றிய அரசாங்கத்தின் எடுபிடிகளாக மாறிவிட்ட பெரும்பாலான ஊடக நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு எதிராக செய்திகளை வெளி யிடாமல் மூடி மறைத்துப் பாதுகாத்து வருகின் றன. அதே நேரத்தில், அரசியல் விமர்சகர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் என்கிற பெயரில் ஊடுருவி, முஸ்லிம் சிறுபான்மை மக்களை பிளவுபடுத்தும் விமர்சகர்களின் வெறுப்புப் பேச்சுக்கான தளங்களை வழங்குகின்றன.

எஞ்சியிருக்கும் சில ஊடகங்கள் பெரும் பாலும் சிறிய நிறுவனங்களே இவை லாப நோக்கமற்ற செயல்பாட்டால் ஒன்றிய அரசாங்கத்தின் மறைமுகத் தொல்லைகளை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன. இதுதவிர ஊடகவியலாளர்கள் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவது அதிகரித்து விட்டது. ஏராளமான நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருப்பதால் பத்திரிகை சுதந்திரத்துக்கு ஏற்படும் சவால்களுக்கும் தீர்வுகாணப்பட வேண்டும். பாதுகாப்பற்ற பணிச்சூழல் ஒருபோதும் சுதந்திரமான பத்திரிகை செயல்பாடுகளுக்கு வழிவகுக்காது. சமூகப் பாதுகாப்பற்ற  வேலை, ஊதியம், பத்திரிகையாளர் குடும்பங்களை  பெரும் பின்னடைவுக்கு கொண்டு செல்கிறது.  இது ஒரு நல்ல சமூகத்தை கட்டமைப்பதற்கு உதவாது. இன்றைய சூழலில் அனைத்து வகை தொழில்களிலும்  தொழிலாளர்கள் பல்வேறு பட்ட  பின்னடைவை சந்திக்கக்கூடிய நிலை இருந்தாலும், பத்திரிகையாளர்கள் சந்திக்கக் கூடிய பணிச்சூழல், பணிப் பாதுகாப்பு, ஊதியம் அபாயகரமாகவே உள்ளது. இந்நிலையில் இருந்து மீண்டு தார்மீக உரிமைகளை, கருத்தாலும் கரத்தாலும் உழைக்கக்கூடிய தொழிலாளர்கள் என்ற முறை யில் பத்திரிகையாளர்கள் பெற்றிட, ஒரு ஒன்று பட்ட செயல்பாடும், இன்னும் பிற பாட்டாளி களோடு இணைந்த செயல்பாடும் காலத்தின் தேவை. அந்த முறையில் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துவது, பத்திரி கைகளின் சுதந்திரம், பத்திரிகையாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது போன்ற நோக்கங்களுக்காக உலக பத்திரிகையாளர்கள் சுதந்திர தினத்தில் சபதம் ஏற்போம்!

- சி. ஸ்ரீராமுலு

 


 

;