states

img

‘விஷ’ குருவான விஷ்வகுரு - ஆர்.பத்ரி

திருவாளர் மோடி அவர்களே,

“மரியாதைக்குரிய” என துவங்க வேண்டுமென்று தான் நினைக்கிறேன். ஆனால்  உலக அரங்கில் இந்தியாவின் மரியாதையை இழக்கச் செய்த தங்களை அப்படி அழைப்பது பொருத்தமாக இருக்காது என்பதால் அதை தவிர்க்கிறேன். எல்லோரும் தங்களை விஷ்வகுரு (உலகத்தின் தலைவன்) என்று அழைக்க வேண்டும் என ஆசைப்படுவீர்கள். ஆனால் அண்மைக்காலமாக நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை பார்த்தால் “விஷகுரு” என்பது தான் உங்களுக்கு பொருத்த மான பெயராக இருக்கும் என தோன்றுகிறது. வழக்கமாக நீங்கள் பேசும் பொய்யுடன் இப்போது வெறுப்பும் கலந்து பேசுவதால் உங்கள் பேச்சு மிகவும் அருவருப்பாக இருக்கிறது. 

o    முஸ்லிம்கள் பல திருமணங்களை செய்து கொண்டு அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்கள். வரிப்பணத்தில் கூடுதலாக அவர்களுக்கே போகிறது என அண்மையில் பேசியிருக்கிறீர்கள். ஆனால் உண்மை என்னவெனில் முஸ்லிம் மக்கள் தொகை விகிதம் 20 சதவீதத்திலிருந்து தற்போது 14 சதவீதம் ஆக குறைந்திருக்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளின் மக்கள் தொகை கணக்கெடுப்பை (1981 - 2011)  ஒப்பிட்டால் முஸ்லிம்கள் விகிதம் 8.1 சதவீதம் எனும் அளவில் குறைந்திருக்கிறது. அரசாங்கத் தரவுகளே இப்படி இருக்கும் போது நீங்கள்  ஏன் இப்படி பேச வேண்டும்? ஏனெனில் அதுதான் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி நிரல். “பாபு லேஷன் ஜிகாத்” என மோகன் பகவத் துவங்கி கீழ்மட்ட தொண்டர்கள் வரை தொடர்ச்சியாக பரப்பும் பொய்களையே தேர்தல் ஆதாயத்திற்காக இப்போது நீங்களும் கட்டவிழ்த்து விட துவங்கியிருக்கிறீர்கள் என்பதை மறுக்க முடியுமா..?

o    இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இந்து பெண்களின் தாலிக்கு கூட ஆபத்து வரும்  என தோல்வி பயத்தில் தமிழ் சினிமாவை மிஞ்சி தாலி சென்டிமெண்டை தூக்கிப் போடு கிறீர்களே. வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டுமென தில்லியில் விவசாயிகள் 555 நாட்களாக போராடியபோது ஒவ்வொரு 15 மணி நேரத்திற்கும் ஒரு விவசாயி என உயிரிழந்தார்களே. கோவிட் காலத்தில் ஆயிரக்கணக்கான ஏழைகள் நடந்து நடந்தே செத்துப் போனார்களே. அவர்கள் வீடுகளில் இருப்பதும் இந்துப் பெண்கள் தானே. அப்போதெல்லாம் எங்கே போனது தாலி குறித்த தங்களின் கவலை? 

o    எதிர்க்கட்சியினர் அனைவரும் கடவுள் ராமனுக்கு எதிரானவர்கள் என இப்போது புலம்ப ஆரம்பித்திருக்கிறீர்கள். நீங்கள் நம்பிய அளவிற்கு அயோத்தி கோவில் கை கொடுக்கவில்லை என்பதால் இத்தகைய அஸ்திரத்தை தூக்கிப் போடுகிறீர்களோ? பக்தர்களுக்கு ராமன் கடவுள். ஆனால் உங்களுக்கோ அவர் ஒரு அரசியல் பிராண்ட் மட்டுமே. நீங்கள் பிராண பிரதிஷ்டை செய்த பாலராமரின் சிலையைத் தானே எல்லோ ரும் பார்த்தார்கள். ஆனால் அந்த சிலைக்கான கல்லை எடுக்க நிலத்தையும் கொடுத்து தற்போது அந்த  நிலத்தை இழந்து தவிக்கும் தலித் விவசாயி ராம்தாஸ் பற்றியோ, கல்லை எடுத்துக் கொடுத்ததால் கனிம வளம் மற்றும் சுரங்கத்துறையால் விதிக்கப்பட்ட அபராதம் கட்டியதோடு,  சிலைக் கான கல்லை அயோத்திக்கு கொண்டு வந்து  கொடுத்து அதற்கான தொகையும் கிடைக்கா மல் ஏமாற்றப்பட்ட சீனிவாச நடராஜன் குறித்த உண்மைகளோ நாட்டு மக்கள் அறியாதது தானே!

o    வழக்கமான நான் ஒரு ஏழைத்தாயின் மகன் என சொல்லிக் கொள்வதில் நீங்கள் பெருமைப்படுவீர்கள். ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் நீங்கள் அணிந்த உடையின் விலையைப் பார்த்தால் அது தில்லி மாநில அரசின் பட்ஜெட்டை விட அதிகமாக இருக் கிறது என சொல்கிறார்களே. உங்களுக் கான விளம்பர செலவு மட்டுமே 4400  கோடியை தாண்டி விட்டதாமே. உங்கள் உணவை தயாரிப்பதற்காக அரசால் அங்கீகரிக்கப்பட்ட நட்சத்திர ஹோட்டல் களின் பில் நாளொன்றுக்கு பல லட்சம் என்கிறார்களே.  ரூ.200க்கும் குறைவாக ஊதியம் பெறுகிற தொழிலாளர்கள் நிறைந் திருக்கிற நாட்டின் பிரதமரான நீங்கள் அரு வருக்கத்தக்க ஆடம்பரத்தில் திளைத்துக் கொண்டே எப்படி ஏழைத் தாயின் மகன் என கூச்சமேயில்லாமல் அழைத்துக் கொள்கிறீர்கள்?

o    அண்மையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் நீங்கள் பேசிய பேச்சுகளுக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 123 (3) படியும், தேர்தல் நடத்தை விதிமுறையின் படியும் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு பிரிவினருக்கிடையே பகை மையை தூண்டும் வகையில் பேசிய உங்கள் மீது 153 A. 153 B ஆகிய பிரிவுகளின் கீழ் கிரி மினல் நடவடிக்கை எடுக்க முடியும். இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 298, 504,  505 ஆகியவற்றின் படி நீங்கள் குற்ற மிழைத்திருக்கிறீர்கள். ஆனால் இவை குறித் தெல்லாம் நீங்கள் கிஞ்சித்தும் கவலை கொள்ளப் போவதில்லை என்பது தெரிந்த கதை தான். ஏனெனில் நீங்கள் முதல்வராக இருக்கும் போது பல்லாயிரக்கணக்கில் குஜ ராத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட போது, வேகமாக போகும் காரில் அடிபட்டு செத்துப் போன நாயைப் போன்றது தான் என ஒப்பிட்டு பேசிய கல்நெஞ்சக்காரர் தானே நீங்கள்?

o    எதிர்க்கட்சியினர் ஆட்சிக்கு வந்தால் தேசம் சிதறுண்டு போகும் என ஒப்பாரி வைக்கிறீர் கள். மணிப்பூரில் இரு பிரிவினரை தூண்டி விட்டு இன்றளவும் பற்றியெரிவதை வேடிக்கை பார்க்கிறீர்களே, குடியுரிமை திருத்த சட்டம் எனும் பெயரால் அசாமில் சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்களை நாடற்றவர்களாக மாற்றி முகாமில் தங்கள் வைத்திருக்கிறீர்களே? ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக உடைத்து அரசியல் உரிமையை பறித்து ராணுவத்தை நிறுத்தி அச்சுறுத்துகிறீர்களே? போராடினால் பஞ்சாப் விவசாயிகளை காலிஸ்தான் ஆதர வாளர்கள் எனவும், சிறுபான்மை முஸ்லிம் களை பாகிஸ்தான் கைகூலிகள் எனவும் விளிக்கும் உங்களுக்கு தேச ஒற்றுமை பற்றி பேச அருகதை இருக்கிறதா என்ன..?

எப்படியும் நீங்கள் மாறப்போவதில்லை. ஆனால் ஆட்சி மாற்றத்திற்கு நாடு தயாராகிக் கொண்டிருக்கிறது. நீங்கள் ஆண்டதும் மக்கள் மாண்டதும் போதும். விடை பெறுங்கள் மிஸ்டர் விஷகுரு.

இப்படிக்கு,
மாற்றத்தை விரும்பும் மக்கள்

 

;