states

img

கேரள வாக்குப் பதிவு: கவலையில் யுடிஎப் மனோரமா அலசலில் அம்பலமாகும் உண்மை

கேரளத்தில் மக்களவைத் தேர்த லில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்துள்ளதால் யுடிஎப் கவலையடைந்துள்ளதாக யுடிஎப்-க்கு ஆதரவான முன்னணி ஊடகமான மனோ ரமா ஆங்கில இணைய இதழில் பகுப்  பாய்வு செய்தி வெளி வந்தது. ஆனால்  அதன் மலையாளப் பதிப்பான மலை யாள மனோரமா, செய்தித்தாள் அல்லது  மனோரமா சேனலில் இந்த பகுப்பாய்வுச் செய்தி வெளியிடப்படவில்லை. ‘வாக்குப்பதிவில் குறைவு யுடிஎப் புக்கு அச்சமூட்டும் கனவு’ என்ற தலைப்  பில் ஆங்கிலத்தில் அந்த செய்தி வெளி யாகி உள்ளது. கடந்த முறை 77.84 சதவிகி தம் வாக்குப்பதிவு நடந்தபோது யுடிஎப் 19 இடங்களில் வெற்றி பெற்றது. இம்முறை இதில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 20  தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்  என்று கூறிய யுடிஎப்-பின் ஆவேசத்தை  வாக்குப்பதிவு விகிதம் குறைத்துவிட் டது என அந்த செய்தியில் தெரிவிக்கப் பட்டுள்ளது. கேரள மாநில அரசுக்கு எதிரான  உணர்வுகளை உருவாக்கி ஆதாயம்  அடையலாம் என யுடிஎப் நினைத்தது. வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்ததன் மூலம் அது போதுமான அளவு பிரதி பலிக்கவில்லை எனக் குறிப்பிடுகிறது அந்த பகுப்பாய்வு. காங்கிரஸின் நம்பிக்  கைகள் வாக்குகளாக மாறவில்லை என் பதை அந்த செய்தி குறிப்பிடுகிறது.  பகுப்பாய்வின்படி, 75 சதவிகிதத்திற்  கும் அதிகமான வாக்குகள் பதிவாகி யிருந்த போது, அது யுடிஎப்-க்கு சாதக மாகவும், 70 சதவிகிதத்தை நெருங்கி வந்த போது, எல்டிஎப்-க்கு ஆதரவாகவும் இருந்தது. மலையாளத்தில் பேசத் தயங்கி ஆங்கிலத்தில் அலசும் யுடிஎப்  ஆதரவு நாளிதழ் செய்தி, சமூக வலை தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்படு கிறது.

;