states

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

ஆந்திரப்பிரதேசத்தில் அரக்கு தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் அப்பாலா நரசாவுக்கு ஆதரவாகவும் ராம் பச்சோதாவரம் சட்டமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் லோதா ராமாராவுக்கு ஆதரவாகவும் பல்வேறு பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று பேசினேன். பழங்குடி தொகுதிகளான இவ்விரண்டிலும் பெருவாரியான மக்கள் பிரச்சாரக் கூட்டங்களில் அணிதிரண்டனர். ஆந்திராவில் மோடி தலைமையிலான பாஜகவைவும் அதன் கூட்டாளிகளான சந்தர்ப்பவாத கட்சிகளான தெலுங்குதேசம், ஜனசேனா மற்றும் பாஜக ஆதரவு கட்சியான ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகியவற்றை வீழ்த்த வேண்டியதன் அவசியத்தை ஆந்திர மக்கள் உணர்ந்துள்ளனர். ஆந்திரா முழுவதும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இணைந்துள்ள இந்தியா கூட்டணி பெரும் உற்சாகத்துடன் நடைபோடுகிறது. மக்கள் பேராதரவை எங்கும் காண முடிகிறது.

;