states

img

பஞ்சாப்பில் பாஜக வேட்பாளர் விரட்டியடிப்பு பாஜகவினரின் தாக்குதலில் விவசாயி பலி

மக்களவை தேர்தல் பிரச்சாரம் மேற்  கொள்ள வரும் பாஜக வேட்பா ளர்களை ஹரியானா மாநில விவ சாயிகள் விரட்டியடித்து வருகின்றனர். இதனால் ஹரியானாவில் 10 மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளர்கள் பிரச்சாரம் மேற்கொள்ளாமல் அலுவல கத்திலேயே முடங்கியுள்ளனர். 

இந்நிலையில், ஹரியானா போல பஞ்சாப்பிலும் பாஜக வேட்பாளர்க;ளை விரட்டியடிக்கும் வேலையை விவசாயி கள் தொடங்கியுள்ளனர். பஞ்சாப் மாநி லத்தின் பாட்டியாலா தொகுதியின் பாஜக  வேட்பாளர் பிரணீத் கவுர், ராஜ்புரா பகுதி யில் பிரச்சாரத்துக்கு சென்றார். பிரணீத் கவு ரின் வாகனத்தை வழிமறித்து இங்கு பிரச்  சாரம் மேற்கொள்ளக்கூடாது என போராட்டம் நடத்தினர். விவசாயிகளின் எதிர்ப்பால் அந்த இடத்தை விட்டு பாஜக  வேட்பாளர் பிரணீத் கவுர் ஓட்டம் பிடித்தார். 

விவசாயி உயிரிழப்பு
பாஜக வேட்பாளர் பிரணீத் கவு ருக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக ராஜ் புரா பகுதியில் விவசாயிகளுக்கும்,  பாஜகவினருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இந்த தள்ளுமுள்ளுவில் சுரேந்திரபால் சிங் (45) என்ற விவசாயி சட்டென்று மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை  மீட்ட சக விவசாயிகள் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கே  அவரை பரிசோதனை செய்த மருத்து வர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்ட தாக தெரிவித்தனர். பாஜகவினரின் தாக்  குதலில் விவசாயி உயிரிழந்து இருக்க லாம் என தகவல் வெளியாகியுள்ளதால், இதற்கு விவசாய சங்கங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

;