states

img

நிர்மலா சீதாராமன் பேச்சால் பாஜகவிற்கும் சிக்கல்

பாஜக கூட்டணி கட்சியான மதச்சார்  பற்ற ஜனதா தளத்தின் (ஜேடிஎஸ்) தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் மகன் ஹெச்.டி.ரேவண்ணாவின் மகன்  பிரஜ்வல் ரேவண்ணா சுமார் 300 பெண் களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பாக 3000க்கும்  மேற்பட்ட ஆபாச வீடியோ வெளியாகி நாட்  டையே உலுக்கிய நிலையில், இந்த சம்ப வம் கசிந்த பின்பு பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பி ஓடிவிட்டார். அவரை கைது செய்ய கர்நாடக சிறப்பு புலனாய்வு போலீசார் தீவிரமாக களமிறங்கியுள்ள நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா மற்றும்  அவரது தந்தை ஹெச்.டி.ரேவண்ணா மீதும்  பாலியல் புகார் அளித்த பெண்ணை கடத் திய விவகாரத்தில், ஹெச்.டி.ரேவண்ணா உட்பட 3 பேரை சனியன்று கே.ஆர்.நகர்  போலீசார் கைது செய்து சிறையில் அடைத்  தனர்.

இந்நிலையில், பிரஜ்வலின் பாலியல் வன்முறை விவகாரம் ஒருவருடத்திற்கு முன்பே தெரிந்தும் ஏன் கர்நாடக காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை? என  கேள்வி எழுப்பி, பாஜக மற்றும் மோடி அர சுக்கு அடுத்தகட்ட சிக்கலை துவக்கி வைத்  துள்ளார் ஒன்றிய பாஜக அமைச்சர் நிர்மலா  சீதாராமன். இதுகுறித்து நிர்மலா சீதா ராமன் மேலும் கூறுகையில்,”பிரஜ்வலின் பென் டிரைவ்வில் என்ன இருந்தது என்பது  கர்நாடகா மாநில அமைச்சர்களுக்கு ஒரு வருடத்திற்கு முன்பே தெரியும். ஒக்கலிகா சமூக ஓட்டுகள் தங்களது கையை விட்டுப் போய்விடும் என்பதற்காகவே முதல் கட்ட  தேர்தல் முடிவடைந்த பின்னர் பிரஜ்வல்  ரேவண்ணா மீது நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. மற்றபடி கர்நாடக பெண்களின் பாதுகாப்பு பற்றி காங்கிரஸ் அரசுக்கு எந்த  அக்கறையும் இல்லை” எனக் கூறியுள் ளார்.

மோடி அரசுக்கு முன்கூட்டியே தெரியுமா?
பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வன்முறை விவகாரம் தனக்கும், மோடி அர சுக்கும் ஒரு வருடத்திற்கு முன்பே தெரிந்துள்  ளது போன்ற தோனியில் நிர்மலா சீதா ராமன் பேசியுள்ளார். கர்நாடக காங்கிரஸ் தாமதமாக பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலி யல் வன்முறை விவகாரத்தை கையிலெ டுத்துள்ளது ஒரு விஷயம் என்றாலும், முன்கூட்டியே இந்த விவகாரத்தை தெரிந்து  வைத்துள்ள மோடி அரசு ஏன் நடவடிக்கை  மேற்கொள்ளவில்லை? பாலியல் குற்ற வாளிகளை கொண்ட கட்சி என்று தெரிந்தும் ஜேடிஎஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தது ஏன்? பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆதர வாக பிரதமர் மோடி “முதுகில் தட்டிக் கொடுத்து” பிரச்சாரம் மேற்கொண்டார்?” என பல்வேறு கேள்விகள் கிளம்பியுள் ளன. ஏற்கெனவே பிரஜ்வல் ரேவண்ணா வின் பாலியல் வன்முறை விவகாரத்தில்  பாஜகவும் கடுமையான விமர்சனங்களுடன் கண்டனத்தை எதிர்கொண்டு வரும் நிலை யில், தற்போது நிர்மலா சீதாராமனின் கருத்தால் கடுமையான சிக்கலை எதிர்  கொள்ளும் சூழ்நிலைக்கு பாஜக தள்ளப் பட்டுள்ளது.

“எல்லாம் பொய்”

சாதியைக் கூறி பாலியல் பிரச்சனையை திசை திருப்பும் நிர்மலா சீதாராமன்
பாலியல் வன்முறை குற்றவாளிகளான பிரஜ்  வல் ரேவண்ணா ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவர். காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக துணை  முதல்வருமான டி.கே.சிவக் குமாரும் இதே சமூகத்தைச்  சேர்ந்தவர் என்ற நிலையில், “ஒக்  கலிகா சாதி ஓட்டுகள் தங்களது  கையை விட்டுப் போய்விடும் என்பதற்காகவே முதல் கட்ட தேர்தல் முடிவடைந்த பின்னர் பிரஜ்வல் ரேவண்  ணாவின் பாலியல் வன்முறை விவகாரம் மீது  கர்நாடக காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்துள்  ளது” என ஒன்றிய பாஜக அமைச்சர் நிர்மலா சீதா ராமன் பாலியல் பிரச்சனையை திசை திருப்பும் நோக்கத்தில் களமிறங்கியுள்ளார். அதாவது தனது  சாதியைச் சேர்ந்தவரை காப்பாற்றவே டி.கே.சிவக்  குமார் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவுபெற்றப் பின் பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ விவகாரம் வெளியிடப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

என்ன நடந்தது என  நிர்மலாவுக்கே தெரியவில்லை
பிரஜ்வல் ரேவண்ணாவின் 3000 ஆபாச வீடி யோக்கள் முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு முன்னரே  (ஏப்ரல் 25 அன்று) வெளியானது. ஆனால் நிர்மலா சீதாராமன் முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு பிறகே  பிரஜ்வல் ரேவண்ணாவின் விவகாரம் கசிந்ததாக கூறியுள்ளார். நடந்தது என்னவென்று விபரம் தெரி யாமல் நிர்மலா சீதாராமன் பேசி சர்ச்சை கிளப்பி யுள்ளார். நிர்மலா மட்டுமின்றி பிரதமர் மோடி உள்  ளிட்ட பாஜகவினர் விபரம் தெரியாமல் பேசுவது சகஜமானது தானே.

;