tamilnadu

img

ஊரடங்கிலிருந்து நாடு வெளியே வந்து கொண்டிருக்கிறது

திருவனந்தபுரம்:
ஜுன் 8 முதல் வழிபாட்டுத்தலங்களை யும், மதநிறுவனங்களையும் திறக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதற்கான வழிகாட்டல்கள் வழங்கப்பட  வில்லை. அதற்காக காத்திருக்கிறோம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.
திருவனந்தபுரத்தில் கோவிட் குறித்து நடந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகுசெய்தியாளர்களிடம் பினராயி விஜயன்மேலும் கூறியதாவது: கூட்டமாக ஒன்றிணைவதை மத்திய அரசு தடை செய்துள்ளது. அரசியல் சமூக ஒன்று கூடுதலும், வழிபாட்டுத் தலங்களில் கூடுவதும் இதில் அடங்கும். நோய் பரவலை தடுத்தாக வேண்டும். ஊரடங்கில் இருந்து நாடு வெளியே வந்துகொண்டிருக்கிறது. இந்த  நிலையில் அதிக தளர்வு கூடாது. உற்பத்தியும் விநியோகமும் நிறுத்தப்பட்ட நிலையில் அதிக காலம் முன்செல்ல முடியாது.

வழிபாட்டுத் தலங்களை திறக்கலாம் என கூறினாலும் பெரிய அளவில் மக்களது ஒன்றுகூடுதல் கூடாது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. வழிகாட்டுதல்கள் வரும்போது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் வழிபாட்டுத்தலங்களை திறப்பது தொடர்பாகவும் மத தலைவர்கள், மத நிறுவனங்களின் தலைவர்களுடன் விவாதிக்கப்பட்டது. வழிபாட்டுத் தலங்களை சாதாரண நிலைக்கு கொண்டு வந்தால் அதிக அளவில் மக்கள் கூடு வார்கள். இது நோயை பரப்பும் என்ற அரசின் நிலைப்பாட்டை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.  இந்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் சமூகங்களுடன் தனித்தனியாக கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்க வேண்டும் என்று அனைவரும் சொன்னார்கள். முதியோர் மற்றும் பிற நோய்கள் உள்ளவர்கள் சன்னதிக்கு வருவார்கள். அது ஆபத்தானது. இவர்கள்எளிதாக கோவிட்டின் பிடிக்கு உள்ளாக லாம். அவர்களை குணப்படுத்துவதும், மீட்பதும்கூட கடினம். வயதானவர்களிலும் பிற நோயாளிகளிலும் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. அதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பகுதியினர் மீது தனி கட்டுப்பாட்டைக் கொண்டுவர மதத் தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டிரு ப்பது  நம்பிக்கையாளர்களுக்கு பெரிய பிரச்சனை. ஆனால் சமூக நலன் கருதிஏற்படுத்திய கட்டுப்பாடுகளுக்கு அனைத்து மதத்தினரும் இணங்கினர். இதில் பெரும் ஒற்றுமை உள்ளது. ஊரடங்கின்போது ஒத்த கருத்துடன் செயல்பட்டனர். சம்பந்தப்பட்டவர்களுக்கு நன்றி. தொட ர்ந்து ஒத்துழைப்பு இருக்க வேண்டும்.     

வழிபாட்டுத் தலங்களை மூட வேண்டியகட்டாயம் ஏற்பட்டபோதும்கூட அரசு மதத் தலைவர்களுடன் கலந்துரையாடியது. ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களது நம்பிக்கையை பெற்றும் அவர்களின் கருத்தைகணக்கில் எடுத்துக்கொண்டும் அரசு செயல்பட்டது. கொட்டியூர் திருவிழா நிகழ்வுகள் தொடங்கியுள்ளன. கூட்டத்தை தவிர்க்க சடங்குகளை மட்டுமே செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேரளத்தை அவமதிக்கும் மேனகா காந்தி
யானை இறந்த சம்பவத்தில் கேரளத்துக்கும், மலப்புறத்துக்கும் எதிராக அமைப்புரீதியான பிரச்சாரம் நடந்து வருகிறது. பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு பகுதியில்தான் யானை இறந்தது. ஆனால், மத்திய அமைச்சர் உட்பட உண்மைக்கு மாறான பிரச்சாரம் நடத்தி வருகின்றனர். கேரளா மற்றும் மலப்புறத்தை அவதூறு செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இது சரியான முறை அல்ல.கேரளாவின் கவுரவத்தை கேள்விக்கு உள்ளாக்கும் முயற்சிகளை ஏற்றுக்கொள்ள முடியாது.
இயற்கை என்பது மனிதர்கள், விலங்குகள், மரங்கள் மற்றும் நீர்நிலைகளின் கலவையாகும்.  அதன் சமநிலையை உறுதி செய்வதற்காக, மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான மோதலைக் குறைக்க என்ன செய்ய முடியும் என்பதைப் பார்ப்போம். ஆனால்கோவிட்டை எதிர்கொள்வதில் கேர ளத்திற்கு கிடைத்துள்ள  நற்பெயரை கெடுத்துவிடலாம் எனவும், வெறுப்பை விதைக்க முடியும் என்றும் யாராவது நினைத்தால் அது மாயை என்றே கூறவேண்டும். தவறான புரிதலில் கூறப்பட்டதாக இருந்தால் மேனகா காந்தி தனது கருத்தை திருத்தியிருப்பார். திருத்த தயாராகாதது, உளப்பூர்வமாக கூறினார் என்பதையே காட்டுகிறது.இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.

;