tamilnadu

img

பெரும்பான்மை இருப்பதற்காக அச்சுறுத்தும் அரசியல் செய்யாதீர்கள்... பாஜக தலைமைக்கு நேதாஜி பேரன் எச்சரிக்கை

கொல்கத்தா:
பெரும்பான்மை பலம் இருப்பதற்காக, நாட்டு மக்களிடம் அச்சுறுத்தும்அரசியலை பிரயோகிக்கக் கூடாது என்று பாஜக-வுக்கு அக்கட்சியின் மேற்குவங்க மாநிலத் துணைத் தலைவரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பேரனுமாகிய சந்திரகுமார் போஸ் எச்சரிக்கை செய்துள்ளார்.

பாஜக தலைவராகவே இருந்த போதிலும், இஸ்லாமியர்களுக்கு எதிரான, மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்தத்தை, சந்திரகுமார் போஸ் தொடர்ந்து எதிர்த்து வருகிறார். “குடியுரிமைத் திருத்தச் சட்டம்- 2019 எந்த ஒரு தனிப்பட்ட மதத்தையும் குறிவைப்பதாக இல்லை என்றால், பின்னர் எதற்காக இந்து, சீக்கியர், பவுத்தர்,கிறிஸ்தவர், பார்சி, ஜெயின் என்று பட்டியலிட வேண்டும்? ஏன் அந்தப் பட்டியலில் முஸ்லிம்களைச் சேர்க்கக் கூடாது?”என்று கடந்த டிசம்பர் மாதமே சந்திர
குமார் போஸ் கேள்வி எழுப்பினார். அது பாஜகவுக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், மீண்டும் இவ்விவகாரத்தில் சந்திரகுமார் போஸ் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். போஸ், ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத் துக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் “சிஏஏ-வில் மதத்தையே குறிப்பிட்டிருக்கக் கூடாது; ‘துன்புறுத்தப் படும் சிறுபான்மையினர்’ என்று பொதுப்படையாகவே குறிப்பிட்டிருக்க வேண் டும்” என்று கூறியுள்ள சந்திரகுமார் போஸ், “நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம்நிறைவேற்றப்பட்டால் அது மாநில அரசுகளை கட்டுப்படுத்தும் என்பது, ஒரு சட்டரீதியான நடைமுறை மட்டும்தான்.ஆனால், ஜனநாயக ரீதியாக எந்த ஒருசட்டமுமே இந்த நாட்டு மக்களின் நம் பிக்கையைப் பெற வேண்டியது அவசியம் என்பதை மறந்துவிட வேண்டாம்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், “சிஏஏ சரியானது எனில் மக்களிடம் சென்று விளக்கம் தர வேண்டும். சிஏஏ-வின் இந்த அம்சங்கள் சரியானவை; நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் கருத்துகள் தவறானவை என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்; அதைவிடுத்து, போராடுவோரை அவதூறாகப் பேசக் கூடாது. பெரும் பான்மை இருப்பதற்காக அச்சுறுத்தும் அரசியலை கையாளக் கூடாது” என்றும் போஸ் கண்டித்துள்ளார்.

;