tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

நீட் தேர்வு: தமிழகத்தில் 1.5 லட்சம் பேர் எழுதினர்!

சென்னை, மே 5 - இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு ‘நீட்’ தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், ராணுவக் கல்லூரிகளில் இளங்கலை செவிலியர் (பிஎஸ்சி நர்சிங்) படிப்புக்கு  நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை நடத்தி வருகிறது.

அதன்படி 2024-25ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு இந்தியா முழுவதும் 557 நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 5.20 மணி வரை நடந்தது. நாடு முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் ‘நீட்’ தேர்வை எழுதினர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் 31 நகரங்களில் 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். சென்னை யில் 36 மையங்களில் 24 ஆயிரத்து 58  மாணவர்கள் நீட் தேர்வை எழுதி னார்கள். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் நீட் தேர்வு நடை பெற்றது. 

காவல்துறை சேவை! 

கோடை வெப்பம் வாட்டி வதைத்து வருவதால் தலைநகர் சென்னையில், நீட் தேர்வு மையத்திற்கு வெளியே கடும் வெயிலில் காத்திருந்த மாணவர்கள், பெற்றோருக்கு காவல்துறையினர் தண்ணீர் மற்றும் மோர் வழங்கி சேவையாற்றினர்.

போராட்டத்தில் பெண் விவசாயி உயிரிழப்பு

ஷம்பு, மே. 05- விவசாயிகள் தில்லியில் நடத்திய இரண்டாம் கட்ட போராட்டத்தின் மீது மோடி அரசு தாக்குதல் நடத்தியது. இதில் இளம் விவசாயி உட்பட 5 விவ சாயிகளும் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான விவசாயிகள் படுகாயமடைந்தனர். தற்போது ஹரியானா - தில்லி மாநில எல்லையில் 2 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் இடைநில்லா போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஹரியானா ஷம்பு எல்லை போராட்டக் களத்தில் இருந்த பஞ்சாப்பைச் சேர்ந்த பெண் விவசாயி பல்விந்தர் கவுர் (55)  ஞாயிறன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

;