tamilnadu

img

வீரகேரளம்புதூர் காவல்நிலையத்திற்கு விசாரணைக்குச் சென்றவர் மரணம் சிபிசிஐடி விசாரணை நடத்த சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை,  ஜூலை 8- தென்காசி மாவட்டம், வீரகேரளம் புதூர் காவல்நிலையத்திற்கு விசார ணைக்காக சென்ற குமரேசன் என்பவர் மரணமடைந்தது குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: தென்காசி மாவட்டம், வீரகேரளம் புதூரைச் சார்ந்த குமரேசன் (வயது 25) என்பவர் 27.6.2020 அன்று திரு நெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். அவரது இறப்புக்கு முழுக்க, முழுக்க வீரகேளம்புதூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சந்திரசேகர், காவலர் குமார் ஆகியோரின் மிருகத்தனமான தாக்குதலின் விளைவாக நடந்ததுள் ளது என உயிரிழந்த குமரேசனின் தந்தை நவநீதிகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார். அவர் கூறியுள்ள புகாரில், 8.5.2020 அன்று ஒரு இடப்பிரச்சனை சம்பந்த மாக வீரகேரளம்புதூர் காவல்நிலை யத்திற்கு வரச்சொன்னதன் பேரில் குமரேசனும், அவரது தந்தையும் காவல்நிலையம் சென்றதாகவும், விசாரணையின்போது காவல் உதவி  ஆய்வாளர் சந்திரசேகர் குமரேசனை  தாக்கியதாகவும் கூறியுள்ளார்.  

பின்னர் 10.5.2020 அன்று விசார ணைக்காக குமரேசன் தனியாகவே காவல்நிலையம் சென்றுள்ள போது, உதவி ஆய்வாளர் சந்திரசேகர், காவலர்  குமார் ஆகியோர் தன் மகன் கும ரேசனை மிருகத்தனமாக தாக்கியுள்ள தாகவும், 10.6.2020 அன்று கும ரேசனுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டதுடன், இரத்த வாந்தியும் எடுத்துள்ள நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு 27.6.2020 அன்று உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள் ளார். குமரேசனின் இறப்புக்கு காரண மான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்களும், உற வினர்களும் போராட்டத்தில் ஈடுபட்ட போது, அங்கு வந்த மாவட்ட கண்காணிப்பாளர் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய ப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.  ஆனால் 174(3) பிரிவின் கீழ் மட்டும் வழக்கு பதிவு செய்ததுடன், காவ லர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் சித்ர வதையால் கொல்லப்பட்ட சம்பவம் தமி ழகத்தையே உலுக்கியுள்ள நிலை யில் தென்காசியில் போலீஸ் விசார ணைக்காக சென்றவர், காவல்துறை யினரின் தாக்குதலால் உயிரிழந்துள் ளார் என்ற புகார் எழுந்துள்ளது.  எனவே, வீரகேளம்புதூர் போலீஸ்  சித்ரவதையால் குமரேசன் உயிரி ழந்துள்ளார் என அவரது தந்தை புகார்  அளித்துள்ள பின்னணியில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டு மெனவும், தவறிழைத்த காவல்துறை யினர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. மேற்கண்ட கோரிக்கையினை வலியுறுத்தி இன்று (08.07.2020)  தென்காசி மாவட்டம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெறுகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;