tamilnadu

img

நான்காம் ஆண்டில் திமுக அரசு நாடும் மாநிலமும் பயனுற எந்நாளும் உழைப்பேன்!

சென்னை, மே 7- தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்து 4ஆம்  ஆண்டில் அடியெடுத்து வைத்திருக் கிறது.

கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களை மக்கள் வர வேற்று வருகின்றனர். குறிப்பாக மக ளிர்க்கான கட்டணமில்லா ‘விடியல் பேருந்துப் பயணத் திட்டம்’, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம், கல்லூரி யில் படிக்கும் மாணவ - மாணவியருக்கு மாதம் ரூ. ஆயிரம் உதவித் தொகை வழங்கும் ‘புதுமைப் பெண்’ மற்றும் ‘தவப்புதல்வன்’ திட்டம், உயர்கல்விக்கு உதவித்தொகை வழங்கும் ‘நான் முதல்வன்’ திட்டம், சுய  உதவிக் குழுவில் மகளிர் முன்னேற்றம் பெறுவதற்கான கடன், பெண்களுக் கான தோழி தங்கும் விடுதி, பள்ளி மாண வர்களுக்கான காலை உணவுத் திட்டம், திருநங்கையர்க்கு 3 செண்ட் நிலம் ஒதுக்கி வீடு கட்டித்தரும் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, மருத்துவம் என பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.

இந்நிலையில், முதல்வராக 3 ஆண்டுகால ஆட்சி முடிந்து 4 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்தத் திட்டங்களை எல்லாம் குறிப்பிட்டு, மக்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

“முத்துவேல் கருணாநிதி ஸ்டா லின் எனும் நான் - உங்கள் நல்லாதரவை யும், நம்பிக்கையையும் பெற்று, நம்மு டைய மாநிலத்திற்கு முதலமைச்ச ராகப் பொறுப்பேற்று மூன்றாண்டுகள் நிறைவுப் பெற்று நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாள் மே-7.

இந்த மூன்றாண்டு காலத்தில் நான் செய்து கொடுத்த சாதனைகள் - திட்டங்கள் - நன்மைகள் என்னென்ன என்பதை தினந்தோறும், பயனடைந்த மக்களின் முகங்களில் இருக்கும் மகிழ்ச்சியே சாட்சி. அரசு செய்து கொடுத்த திட்டங்களை நான் சொல்வதைவிட, பயனடைந்த மக்கள் சொல்வது தான் உண்மையான பாராட்டு!

ஸ்டாலின் என்றால் உழைப்பு - உழைப்பு - உழைப்பு! என்றார், கலைஞர்! இந்த மூன்றாண்டு காலத்தில்  ஸ்டாலின் என்றால் செயல் - செயல் - செயல் என நிரூபித்துக்காட்டியுள் ளேன்!

எப்பொழுதும் நான் சொல்வது இது எனது அரசு அல்ல. நமது அரசு. அந்த வகையில் நமது அரசு  நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நாடும் மாநிலமும் பயனுற எந்நாளும் நான் உழைப்பேன் என உறுதியேற்று ஆட்சிப் பயணத்தை உங்கள் வாழ்த்துகளுடன் தொடர் கிறேன்! நன்றி, வணக்கம்!” என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை கடற்கரை சாலையில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி யின் நினைவிடத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு, க. பொன்முடி, எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்டோருடன் மரியாதை செலுத்தி னார்.

;