tamilnadu

img

அனைவரும் ஒற்றுமையாக இருப்போம் : முதல்வரிடம் வாழ்த்து பெற்ற மாணவர் சின்னதுரை பேட்டி

சென்னை, மே 7 - “எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்; என்னைத் தாக்கிய மாணவர்களும் நன்றாக படித்து மேலே வரவேண்டும்” என முதலமைச்சரை சந்தித்த பின், நாங்குநேரி மாணவர் சின்னத்துரை தெரிவித்தார்.

நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் சாதி ஆதிக்க எண்ணம் கொண்ட சக மாணவர்களால் கொடூர தாக்குதலுக்குள்ளான சின்னதுரை பொதுத் தேர்வை ஆசிரியர் ஒருவரின் உதவி யுடன் எழுதினார். தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில், 600-க்கு 469 மதிப்பெண்கள் பெற்று சின்னத்துரை தேர்ச்சியடைந்துள்ளார்.

மோசமான சூழலிலும், மருத்துவமனை யில் நீண்ட சிகிச்சையில் இருந்த நிலையிலும் மாணவர் சின்னத்துரை பெற்ற இந்த மதிப் பெண்கள், கல்வி மீதான அவருக்கு இருந்த ஆர்வத்திற்கு சாட்சியாக அமைந்துள்ளது. 

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாணவர் சின்னத்துரையை தொடர்பு கொண்டு தனது வாழ்த்தை தெரிவித்தார்.

இந்நிலையில், மாணவர் சின்னதுரை செவ்வாயன்று முதல்வர் மு.க.  ஸ்டாலினை சென்னையில் சந்தித்து பாராட்டுப் பெற்றார். சின்னத்துரைக்கு திருக்குறள் நூலை யும், பேனாவையும் முதல்வர் பரிசளித்தார். பின்னர் மாணவர் சின்னதுரை செய்தி யாளர்களிடம் பேசினார். 

அப்போது, “கொடூரமான தாக்குதலில் இருந்து நான் மீண்டு வருவதற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரே காரணம். தாக்குதல்  சம்பவம் நடக்காமல் இருந்தால் கூடுதல் மதிப்பெண் பெற்றிருப்பேன். பிளஸ் 2-வுக்கு அடுத்து பி.காம் முடித்து சி.ஏ. படிக்க விரும்பு கிறேன். எனது உயர் கல்விச் செலவை அர சாங்கமே ஏற்றுக்கொள்ளும் என முத லமைச்சர் தெரிவித்துள்ளார்” என்றார்.  மேலும், “எல்லாரும் ஒற்றுமையாக இருக்கணும். என்னை தாக்கிய மாணவர்களும் நன்றாக படித்து மேலே வர வேண்டும்” என்று குறிப்பிட்டார். 

திருநங்கை நிவேதா
சென்னை, திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்ற திருநங்கை நிவேதாவும் முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவரும் செய்தி யாளர்களைச் சந்தித்தார். அப்போது, “பொரு ளாதார வசதி இல்லை. ஆனால் மருத்துவம் படிக்க ஆசையாக இருக்கிறது. உயர் கல்விக்கு தேவையான உதவிகளை செய்வதாக முதலமைச்சர் உறுதியளித்திருக்கிறார்” என்று மகிழ்ச்சி தெரிவித்தார். திருநங்கை நிவேதா, நீட் தேர்வையும் எழுதியிருக்கிறார்.

;