tamilnadu

டி.கே.ரங்கராஜன் நூல் வெளியீடு ... 1ஆம் பக்கத் தொடர்ச்சி....

1ஆம் பக்கத் தொடர்ச்சி..... 

செய்யப்படுகிறது. ஆதார் மசோதா உள்படபல முக்கியமான மசோதாக்கள் மாநிலங்களவையில் நிதி மசோதாக்களாக தாக்கல் செய்யப்பட்டது. இதனால் அந்த மசோதாக்கள் மீது விவாதம் முடிந்த பின்னர் வாக்குரிமை கோரமுடியாது.  எனவே மாநிலங்களவையின் முக்கியத்துவத்தை மோடி அரசு திட்டமிட்டு குறைத்து வருகிறது.  மாநிலங்களவையின் செயல்பாடுகளை முடக்கும் வகையிலான அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகடி.கே.ரங்கராஜன்  வலுவான கண்டனத்தை பதிவு செய்தார்.

ஜனநாயக முறைப்படியான விவாதம் இல்லை
2019ஆம் ஆண்டு முக்கியமான மசோதாக்களை மோடி அரசு எப்படி நிறைவேற்றியது என்பதை அனைவரும் அறிவர். குடியுரிமை திருத்தச்சட்டம், அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு நீக்கம், ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்தை நீக்கி யூனியன் பிரதேசமாக மாற்ற வகை செய்யும் மாசோதாக்களை மோடி அரசு அராஜக போக்கில் நிறைவேற்றிக்கொண்டது.  நாடாளுமன்றத்தில் ஜனநாயக முறைப்படியான விவாதங்களை அரசு அனுமதிக்கவில்லை. மாநிலங்களவையில்  டிகே.ரங்கராஜன் உறுப்பினராக இருந்தபோது நாடாளுமன்ற ஜனநாயகத்தைபாதுகாக்க  தொடர்ந்து குரல் எழுப்பினார்.ஜனநாயக அமைப்புகள் மீதும்அரசமைப்பு சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு அமைப்புகள் மீதும் மோடிஅரசு தொடர்ந்து தாக்குதலை தொடுத்துக்கொண்டே இருக்கிறது. கடந்தாண்டு நாடாளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்கள்நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில்  இந்த மசோதாக்கள் விவாதத்திற்கு வந்தபோது அவையின் தெரிவுக்குழுவுக்கு (செலக்ட் கமிட்டி) அனுப்ப அரசு மறுத்துவிட்டது.அதன் மீதான ஓட்டெடுப்பும் மறுக்கப்பட்டது. மசோதா மீதான  வாக்கெடுப்பின் போது அவையில் பிரிவு வாரியாக (டிவிஷன்)வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்ற  எதிர்க்கட்சிகளின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

முடக்கப்பட்ட நாடாளுமன்ற செயல்பாடு
திமுக மாநிலங்களவை  உறுப்பினர் திருச்சி சிவா இதற்கான தீர்மானத்தை முன்மொழிந்தபோது வாக்கெடுப்புக்கு அனுமதிக்கப்படவில்லை. பிரிவுவாரியாக வாக்கெடுப்பு கோரியபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  உறுப்பினர்கள் இருவர் உள்பட8 உறுப்பினர்கள் அவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.   நாடாளுமன்றம்தற்போது இப்படித்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

மாநில உரிமைகள் பறிப்பு
இந்த சூழ்நிலையில் கடந்த 12 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக செயல்பட்டு தோழர் டிகே.ரங்கராஜன் ஆற்றிய உரைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். ஏனென்றால் அவர் எழுப்பிய பல பிரச்சனைகள் இன்றும் முன்னுக்கும் வரும் முக்கியமான பிரச்சனைகளாக உள்ளன. மாநிலங்களின் மன்றமாக உள்ளமாநிலங்களவை தற்போது தனது சுதந்திரமான செயல்பாடுகளை மேற்கொள்ளமுடியாத நிலையில் உள்ளது. சமீப காலமாக மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுவது அதிகரித்துள்ளது. அதற்கு எதிராக இந்த அவையில் வலுவாக குரல் எழுப்ப அரசு அனுமதிப்பதில்லை. மாநில அரசுகளுக்கு உள்ள உரிமைகளை மத்திய அரசு படிப்படியாக பறித்துக்கொண்டிருக்கிறது.  வேளாண் விளைபொருட்களை கொள்முதல் செய்தல், சந்தையில் விற்பனை செய்தல் உள்ளிட்ட அனைத்தும் மாநிலங்களின் அதிகாரத்திற்கு உள்பட்டதாகும். இவை மத்திய மாநில அரசுகளின் பொதுப்பட்டியலில் வராது. ஆனால் மத்திய அரசு வேளாண் மசோதாவை கொண்டு வந்துஅனைத்து உரிமைகளையும் பறித்துக்கொண்டது.  மாநிலங்களுக்கான நிதி வெட்டு, வளத்தை பகிர்ந்தளித்தல், மாநில அரசுகளின் அதிகாரம், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்தல் உள்ளிட்ட அரசின் நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களவையில்தான் விரிவாக பேசமுடியும்.

பொதுத்துறை மருந்து நிறுவனங்கள் உள்பட பல  நிறுவனங்களை தனியார் மயமாக்க அரசு முடிவு செய்தபோது காங்கிரஸ்தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போதும் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின்போதும்  மாநிலங்களவையில் டிகே.ரங்கராஜன்  தொடர்ச்சியாக  தனது எதிர்ப்புகளை பதிவு செய்தார்.

கம்யூனிஸ்டுகளின் அனுபவ அறிவு
வரும் காலத்தில் பல இளைஞர்கள் நாடாளுமன்றத்தில் இடம்பெறுவார்கள். கம்யூனிஸ்டுகளை பொறுத்தவரை அவர்கள்போதிய படிப்பறிவு இல்லாத போதிலும் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்படும்போது மக்கள் இயக்கங்களில் பங்கெடுத்து கிடைத்த அனுபவ அறிவை கொண்டு மக்களின் பிரச்சனைகளை வலுவாக எடுத்துரைப்பார்கள். பொருள் என்ன என்பதை  கம்யூனிஸ்டுகள் தெரிந்துகொண்டிருப்பதால்  நாடாளுமன்றமானாலும் சட்டமன்றமானாலும் எந்தஒரு விஷயம் குறித்தும் தெளிவாக பேசமுடிகிறது.

இளையதலைமுறையினருக்கு வழிகாட்டும் உரை 
நாடாளுமன்றத்தில் ஆழமான விஷயங்களை தெளிவான புரிதலோடு  பேச வேண்டும்என்ற நிலையை டிகே.ரங்கராஜன் உருவாக்கியுள்ளார். வரும் காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயல்படபோகும் கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த எதிர்காலதலைமுறையினருக்கு நிச்சயம் பயன்படும். தோழர் டி.கே.ரங்கராஜனின் உரைகள் சிறந்தமுறையில் தமிழாக்கம் செய்யப்பட்டு பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த உரைகள்எளிமையான மொழியில் உள்ளதால் இதைபரவலாக மக்களிடம் கொண்டு செல்லவேண்டும்.இவ்வாறு பிரகாஷ் காரத் பேசினார். டி.கே.ரங்கராஜன் ஏற்புரை நிகழ்த்தினார்.முன்னதாக திமுக மாநிலங்களவைக்குழு தலைவர் திருச்சி சிவா,  சிபிஎம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,  மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாநிலச் செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன்,  திமுகமாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் ரயில்வே துறைஅமைச்சர் ஆர்.வேலு, அதிமுக மாநிலங்களவைத் தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன், முன்னாள் டிஜிபி பஞ்சாபகேசன் , காங்கிரஸ் சார்பில் ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். பாரதி புத்தகாலயம் நாகராஜன் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

மொழியாக்கம் செய்து தொகுத்து வழங்கிய வீரமணிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது, பிழைதிருத்தம் செய்த ராஜசேகர்,டி.ஆர்.ரங்கராஜன் உதவியாளர் கே.ராமசுப்பிரமணியம் ஆகியோர் மேடையில் கவுரவிக்கப்பட்டனர். நிறைவாக சிபிஎம் வடசென்னை மாவட்டசெயற்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.
 

;