tamilnadu

img

பணத்தை சுருட்டிய நிர்வாகிகள்; பாஜகவுக்குள் குத்து வெட்டு

சென்னை, ஏப். 28- பாஜகவில் மக்களவை தேர்தல் நேரத்தின் போது நடந்த பணம் வினியோகம் பிரச்சனை, போஸ்டர் யுத்தம், காவல் நிலையத்தில் எப்ஐஆர் புகார் எதிரொலியாக சென்னையில் அண்ணாமலை தலைமையில் திங்களன்று நடைபெற இருந்த பாஜக ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்த லில் 23 தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நயினார் நாகேந்திரனின் உதவியாளரிடம் 4 கோடி பணம் சிக்கியது முதல் பல மோசடிக ளில்  பாஜக ஈடுபட்டது அம்பலமானது. மத்திய சென்னை தொகுதியில் 18 கோடி, வடசென்னை யில் 12 கோடி, தென் சென்னையில் 15 கோடி, கோவைக்கு 25 கோடி என்று வேட்பாளர்களு க்கு ஏற்றார் போல் செலவுக்காக பணம் வழங்கப்பட்டது.  இந்தப் பணத்தை முறையாக பயன்படுத்த வில்லை என்ற குற்றச்சாட்டு தேர்தல் முடிந்ததும் எதிரொலிக்க தொடங்கியது. நிர்வாகி கள் பெருமளவில் சுருட்டிக் கொண்டதாக பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர். பாஜகவில் 90 சதவீதம் பேர், சொத்துக்களை பாதுகாப்பதற்காகவும்,

கொலை, கொள்ளை குற்றச்சாட்டில் இருந்து தப்பிப்பதற்காக வும்தான் இணைந்துள்ளனர். இந்நிலையில், கட்சி மேலிடம் வழங்கிய பணம் கீழ்மட்ட நிர்வாகி களுக்கும் செல்லவில்லை என்பது அக்கட்சி யில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.  இந்நிலையில் பாஜக வாட்ஸ் அப் குரூப்க ளில் அந்த கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஆடியோ பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். பல பதிவுகளில் கட்சிக்காக பல ஆண்டு உழைத்து உள்ளோம்; ஆனால் ‘மண்டல்’ தலைவர்கள், மேலிடம் கொடுத்த பணத்தை மொத்தமாக சுருட்டிக் கொண்டனர்; கட்சிக்காக பாடுபட்ட எங்களுக்கு பணம் வந்து சேரவில்லை என்ற ரீதியில் ஆதங்கத்தை வெளிப்படுத்த தொடங்கி உள்ளனர். வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட பெரம்பூர் தெற்கு மண்டல் தலைவர் பிரபா, பெரம்பூர் மத்திய மண்டல தலைவர் கஸ்தூரி, திரு.வி.க நகர் மண்டல தலைவர் முரளி ஆகியோ ருக்கு எதிராக பல்வேறு ஆடியோ மெசேஜ்கள் தொடர்ந்து வாட்ஸ் அப் குரூப்புகளில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அந்த ஆடியோ வில் ஒரு பூத்துக்கு மேலிடம் ரூ.8000 வழங்கி யது, அதில் ரூ.5000 மட்டுமே மண்டல் தலை வர்கள் செலவு செய்தார்கள், மீதியை சுருட்டி விட்டார்கள், ஒரு மண்டல தலைவருக்கு குறைந்தபட்சம் 70 பூத்துகள் வரை வருகிறது.  ஆக, ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்துள் ளார்கள் என அம்பலப்படுத்தியுள்ளனர். பெரம்பூர் தெற்கு மண்டல பகுதியை சேர்ந்த பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பி னர் வேல்ராஜ் என்ற கடம்பூர் வேல்ராஜ் பதி விட்டுள்ள ஆடியோ மெசேஜில், ‘எங்களுக்கு முறையான உணவு வழங்கவில்லை. பிரியாணி சரியில்லை என மண்டல் தலைவரிடம் சொன்னால், சிரித்து கொண்டே அப்படியா… சந்தோஷம் என்கிறார். பிரச்சாரத்திற்கு வந்த வர்களுக்கு பணம் கொடுத்தீர்களா என கேட்டால் பேச மறுக்கிறார். கட்சியில் உழைத்த வர்களுக்கு எதுவும் வரவில்லை. மண்டல தலைவர்கள் பணத்தை கையாடல் செய்துள் ளார்கள் என்ற ரீதியில் பேசியுள்ளனர். இந்த ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. சில தினங்களுக்கு முன்பு, நடிகை ராதிகா போட்டியிட்ட விருதுநகர் தொகுதியில் தேர்தல் செலவுக்கு வழங்கப்பட்ட ₹40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக சொந்த கட்சியினரே போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.  சில தினங்களுக்கு முன்னர் தென்சென்னை கிழக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் முத்துமாணிக்கம், கடந்த 20ம் தேதி, துரைப்பாக்கம் அடுத்த மேட்டுக்குப்பத்தில் நிர்வாகிகளுடன் பேசிக் கொண்டிருந்தபோது,  அங்கு வந்த துரைப்பாக்கம் பாஜக துணை தலைவர் வாசு (46) உள்ளிட்டோர் ‘பூத் ஏஜென்ட்டுக்கு பணம் ஏன் கொடுக்கவில்லை’ என கேட்டு வாக்குவாதம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக முத்துமாணிக்கம், துரைப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து வாசு, வெங்கட், ஜெயகுமார் ஆகியோரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சென்னை அமைந்தகரையில் பாஜகவினருக்குள் அடிதடி சம்பவம் அரங்கேறியுள்ளது. மத்திய சென்னை தொகுதி பாஜக தலைமை பணி மனையில் அண்ணாநகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாரை மத்திய வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்தி என்பவர் பளார் என கன்னத்தில் அறைந்துள்ளார். இருவரும் மாறி, மாறி தாக்கிக் கொண்டு கடும் மோதலில் ஈடு பட்டனர். தகவலறிந்து அமைந்தகரை இன்ஸ் பெக்டர் கிருபாநிதி தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து வந்து சமாதா னப்படுத்தினர்.  இப்படி தேர்தலில் பணம் விநியோக பிரச்சனை தொடர்பாக பாஜக தலைமைக்கு தொடர்ந்து புகார் மேல் புகார் வந்து கொண்டி ருக்கிறது. தேர்தல் முடிவுகள் வருவதற்குள் கட்சிக்குள் இப்படி புகார் வருவது தலைமை க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் திங்களன்று நடைபெற இருந்த மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

;