tamilnadu

img

கூடங்குளத்தில் இந்தியாவின் முதல் அணுக்கழிவு சேமிப்பு மையம்?

திருநெல்வேலி:
இந்தியாவின் முதல் அணுக்கழிவு சேமிப்பு மையத்தை கூடங்குளம் அணு மின் நிலைய வளாகத்தில் அமைக்க, பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம்,ஜூலை 10ஆம் தேதி, நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் நடைபெறும் என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

அணுஉலைகளில் உருவாகும் அணுக்கழிவுகளை மண்ணுக்கு அடியில் மிக ஆழமாக நிரந்தரமாக சேமித்து வைக்கும் மையம் (Deep Geological Repository) அமைப்பதற்கான இடத்தை இந்திய அரசு இன்னும் கண்டறியவில்லை. இதனால், தற்காலிக சேமிப்பு மையங்களை அமைத்து அணுக்கழிவைக் கையாள முடிவு செய்யப்பட்டுள்ளது.உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, கூடங்குளத்தில் செயல்படும் 1 மற்றும் 2 ஆவது அணுஉலைகளுக்கு, கடந்த ஆண்டு மார்ச் மாதமே, தற்காலிக அணுக்
கழிவு சேமிப்பு மையம் கட்டி முடித்திருக்க nவேண்டும். இதைக் கட்டமைப்பதில் உள்ள தொழில்நுட்பம் முழுவதுமாக கைவராத நிலையில் அதை அமைப்பதில் சிக்கல் களை சந்தித்து வருவதாகவும், அதனால் மேலும் 5ஆண்டுகள் அவகாசம் வேண் டும் எனவும் மத்திய அரசு கூறியிருந்தது.

இதை ஏற்று 2022ஆம் ஆண்டு வரை உச்சநீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. இந்நிலையில், இந்தியாவின் முதல் அணுக்கழிவு சேமிப்பு மையத்தை கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் இந்திய அணுசக்தி கழகம் அமைக்க உள்ளது.இதற்காக பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. வரும் ஜூலை 10ஆம் தேதி ராதாபுரத்தில் இந்த கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு மாசுக் கட்டுப் பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

இந்த திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின் சாரம்,நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவல கம், பாளையங்கோட்டை மாவட்ட தொழில் மையம், ராதாபுரம் பஞ்சாயத்து ஒன்றிய ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கிடைக்கும் எனவும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

;