tamilnadu

img

நெடுஞ்சாலைத்துறை இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அவிநாசி, ஜூன் 18- அவிநாசியில், நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி செவ்வாயன்று நடைபெற்றது. அவிநாசி ஒன்றியத்திற்குள்பட்ட பழங்கரை பிரிவிலிருந்து ஆட்டையாம் பாளையம் வரை நெடுஞ்சாலைத் துறை சொந்தமான இடத்தில் உள்ள  ஆக்கிரமிப்புகளை கடந்த 13 ஆம் தேதி   அகற்ற போவதாக  நெடுஞ்சாலைத்துறை சார்பில் அறிவித்திருந்தது. இந்நிலை யில் கைகாட்டி அருகாமையில் சிலர்  நெடுஞ் சாலை சொந்தமான இடத்தில் வீடு  கட்டியுள்ளனர். இதையடுத்து அங்குள்ள  பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறை யினரிடம் பாரபட்சமில்லாமல் அனைத் தையும் அகற்றப்பட வேண்டும் என தெரி வித்தனர்.  இந்நிலையில் அவிநாசி பகுதிகளில்  கடைகள் மற்றும் நெடுஞ்சாலையோரங் களில் உள்ள கோயில்களை அகற்ற முற் படும்போது சில அமைப்புக்கள்  தலை யிட்டதால்  அதிகாரிகள் தயங்குவதாக தெரி கின்றது. இந்தநிலையில் செவ்வாயன்று  சாலையோரத்தில் உள்ள கிணறு மற்றும்  கடைகளை அகற்றும் பணி தீவிரமாக நடை பெற்றது.   இதுகுறித்து அதிகாரியிடம் கேட்ட போது, நெடுஞ்சாலைத்துறை ஆக்கிரமிப்பு களை பழங்கரையிலிருந்து கைகாட்டி வரை  அகற்றி வருகின்றோம். சில குடியிருப்பு வாசிகள் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அவர்களுக்கு நான்கு நாட்கள் கால அவ காசம் வழங்கப்பட்டுள்ளது.   விசேஷ நாட் களில் போக்குவரத்து நெரிசல் காரண மாகவும்,  சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில்  அதிகப்படியாக பொதுமக்கள், வாகன  ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் நடைபாதைகள் செல் வோர்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர்.  இந்நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறைவடைந்த பிறகு நடைபாதைகள் செல்வோருக்கான  சாலை  அமைக்கப்படும். இதனால் பொது மக்கள், நடந்து செல்வோர் விபத்தி லிருந்து தவிர்க்கப்படுவர். வாகன நெரிசல் தவிர்க்கப்படலாம் என தெரிவித்தனர். 

;