tamilnadu

பாலா சட்டமன்ற இடைத்தேர்தல் : மக்கள் அங்கீகாரம்

பாலா சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவு வரவிருக்கும் தேர்தல்களுக்கான மக்களின் செய்திஎன சிபிஎம் கேரள மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.பாலா சட்டமன்ற தேர்தல் முடிவு வெளியானதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கொடியேரி மேலும் கூறியதாவது: பாலாயில் கடந்த தேர்தல்கள் வரை மற்றவர்களுக்கு வாக்களித்தவர்கள் இம்முறை எல்டிஎப்புக்கு வாக்களித்துள்ளனர். மக்களவைத் தேர்தலில் 33 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இடத்தில், எல்டிஎப் சுமார் 3 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றிருக்கிறது. இதன் மூலம் மக்கள் இடது ஜனநாயக முன்னணிக்கு பெரும் அங்கீகாரத்தை அளித்துள்ளனர். மாணி சி காப்பன் அங்கு செயல்பட்டு வந்தவிதம் வெற்றிக்குஉதவியது. மக்களவை தேர்தலில் இருந்த அரசியல் சூழ்நிலை தற்போது கேரளத்தில் இல்லை என்பதை பாலா தேர்தல் முடிவு வெளிப்படுத்துகிறது என்றார். பாலா இடைத் தேர்தலில் எல்டிஎப் சார்பில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணி.சி.காப்பனுக்கு கிடைத்துள்ள வெற்றி பினராயி விஜயன் அரசுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் என எஸ்என்டிபி பொதுச் செயலாளர் வெள்ளாப்பள்ளி நடேசன் கூறினார்.செய்தியாளர்களிடம் தேர்தல் முடிவு குறித்து அவர் கூறியதாவது: தேர்தலுக்கு முன்பே எதிர்க்கட்சி எடுத்த நிலைப்பாட்டை முதல்வர் பினராயி விஜயன் சவாலாக ஏற்றுக்கொண்டார். பாலா வெற்றி அடுத்துவரும் 5 சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் எதிரொலிக்கும்.மிகவும் செயலூக்கமுள்ள பினராயி அரசை மக்கள் அங்கீகரித்துள்ளனர். தங்களுக்குள் மோதிக்கொள்பவர்களை மக்கள் புறக்கணிக்கவே செய்வார்கள். பாலா வெற்றி அனைத்துப் பகுதியினருக்கும் உரிமையுள்ளதாகும். பாலா பிஷப்கூட தனது நிலைப்பாட்டை மாற்றி ஆதரவளித்தார். பாஜக ஓட்டு மாற்றியதாக பாஜகவின் பாலா தொகுதி தலைவர் வெளிப்படையாகவே கூறினார். தமக்குள் சண்டையிடும் பாஜகவுக்கு கேரளத்தில் வாய்ப்பில்லை என வெள்ளாப்பள்ளி கூறினார்.

;