tamilnadu

img

‘இந்தியாவின் ஜிடிபி 7-ஐ தாண்டாது’

புதுதில்லி:
2019 - 2020 நிதியாண்டில், இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 7.5 சதவிகிதமாக அதிகரிக்கும் என்று, ஐஎம்எப் எனப்படும் பன்னாட்டு நாணய நிதியம், கடந்த 2019 ஜனவரியில் கணித்திருந்தது.பின்னர் அதே ஐஎம்எப், 2019 ஏப்ரலில் 0.2 சதவிகிதம் குறைத்து, 2019 - 20 நிதியாண்டில், இந்தியாவின் ஜிடிபி 7.3 சதவிகிதமாகவே இGDPருக்கும் என்று கூறியது. தற்போது 2019 ஜூலையில், மேலும் 0.3 புள்ளிகள் குறைத்து, 2020 மார்ச் 31-இல் இந்தியாவின் ஜிடிபி 7 சதவிகிதம் என்ற அளவிலேயே இருக்கும் என்று கூறியுள்ளது.

பன்னாட்டு நாணய நிதியமானது, உலக பொருளாதார கண்ணோட்ட அறிக்கையை (World Economic Outlook Report) தற்போது வெளியிட்டுள்ளது. அதில்தான், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சிக் கணிப்பை, முந்தைய கணிப்புகளை விட மிகவும் குறைத்து மதிப்பிட்டிருக்கிறது. அதோடு 2020 - 2021 நிதியாண்டுக்கான இந்திய பொருளாதார வளர்ச்சியையும் 7.2 சதவிகிதம் என்று மறு கணிப்பு செய்திருக்கிறது. இதற்கு முன்பு, 2019 ஏப்ரல் மாதக் கணிப்பில் 7.3 சதவிகிதமாக இருக்கும் எனவும், 2020 - 21 நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவிகிதமாக இருக்கும் எனவும் கூறி இருந்தது. இப்போது தனது ஏப்ரல்மாதக் கணிப்பை விட 2019 - 20 மற்றும் 2020 - 21 நிதியாண்டிற்கு 0.3 சதவிகிதத்தை குறைத்துள்ளது.இந்தியாவில் குறைந்து வரும் உள்நாட்டுத்தேவை, சரியும் நுகர்வுகள், சரிந்து வரும் முதட்டுத் தேவைகள் பல்வேறு இந்திய தொழில்துறைகள் எதிர் கொண்டு போராடிக் கொண்டிருக்கும் மந்த நிலை, குறிப்பாக சரிந்து வரும் இந்திய ஆட்டோமொபைல் விற்பனை ஆகியவையே, இந்திய பொருளாதார வளர்ச்சிக் குறைவுக்கு காரணம் என்றும் ஐஎம்எப் கூறியுள்ளது.கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் ஜிடிபி மார்ச் 2019 காலாண்டில் 5.8 சதவிகிதமாக சரிந்தது. 2018 -19 நிதி ஆண்டுக்கான இந்தியாவின் ஜிடிபி 6.8 சதவிகிதமாக இருந்தது. ஆனால் இதுவேஅதற்கு முந்தைய 2017 - 18 நிதியாண்டில் ஜிடிபி 7.2 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

;