tamilnadu

img

கணக்கோடு கை கோர்க்கலாம் - மொ.பாண்டியராஜன்

முந்தைய பகுதியில் சொன்னது போல பல அறிஞர்கள் சீனாவில் தன்னுடைய ஞாபகத்தில் உள்ள கணிதங்களை தொகுத்தனர். அதற்கு காம்போடேஷன் பிரிஸ்கிரிப்சன்ஸ் இன் நைன் சாப்டர்ஸ் (Computational pressscriptions in Nine Chapers) என்று பெயரிட்டனர். இந்த புத்தகத்தில் பல்வேறு கணக்குகளை எந்தவிதமாக தீர்க்க வேண்டும் என்ற வழிமுறைகளையும். விதிகளையும் கொடுக்கிறது. குறிப்பாக ஒரு வட்ட வடிவ வயலின் பரப்பளவை எவ்வாறு கண்டுபிடிப்பது. அதற்கு அவர்கள் சொல்லியிருக்கும் வழிகாட்டல் • சுற்றளவின் பாதியை விட்டத்தின் பாதியால் பெருக்கிட வட்டத்தின்பரப்பளவு கிடைத்திடும். • விட்டத்தை விட்டத்தால் பெருக்கிட வேண்டும். கிடைக்கும் விடையைமூன்றால் பெருக்கிட வேண்டும். இப்போது கிடைக்கும் விடையை நான்கால் வகுத்திட பரப்பளவு கிடைத்திடும் • சுற்றளவை, சுற்றளவுடன் பெருக்கிட வேண்டும். கிடைக்கம் விடையை பனிரெண்டால் வகுக்க பரப்பளவு கிடைத்திடும். வடிவகணிதத்தில் பெரிய சிந்தனை இல்லை என்றாலும். சீனர்களுக்கு இயற்கணிதத்தில் சிறந்து விளங்கினர். ஒரு சமன்பாட்டை உருவாக்குவதற்கும் தீர்ப்பதற்கும் அவர்கள் அறிந்திருந்தனர்.  நைன் சேப்படர் புத்தகத்தில் செங்கோண முக்கோணம், பிதக்கராஸ் தேற்றம் குறித்த 24 கணக்குகள் இருக்கின்றன. இந்த 24 கணக்குகளில் சில வற்றில் இருபடிச் சமன்பாட்டினைத் தீர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றன. அதனால் அவர்களுக்கு வர்கமூலம் குறித்த அறிவும் செரிவாக இருந்ததை பார்க்கமுடிகிறது. அவர்கள் மேலிருந்து கீழாக எழுதும் வழக்கம் கொண்டவர்கள். இதனால்அவர்களுக்குகணிதத்தைமேல்கீழாக எழுதி தீர்க்கும் முறையை கொண்டிருந்தனர். குறிப்பாக நிரல் மற்றும் நிரையை கொண்டு கணிதம் செய்யும் முறையை சீனர்கள் கொண்டிருந்தனர் என்பதை நாம் பார்க்க முடிகிறது. அதன் வழியாக சமன்பாடுகளை உருவாக்கவும் தீர்க்கவும் அறிந்திருந்தனர். மேலும் மாய சதுரத்துக்கு சொந்தகாரர்கள் சீனர்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு நம்ம வீடுகளுக்கு ஒரு விளம்பரம் வரும். ஒரு கட்டத்தில் சில இடங்கள் விடுபட்டு இருக்கும். அதை நிரப்பினால் பரிசு கிடைக்கும் என்று ஒரு விளம்பரம் வரும். அப்படி நிரப்பி அனுப்பினால் கொஞ்சம் காசு பின்னர் கட்டச் சொல்லுவார்கள். இப்படியான விளம்பரம் 90களில் போஸ்ட்களில் வருவதை நாம் பார்த்திருக்கலாம். அந்த கட்டத்தையும், புதிரையும் ஆமையின் ஓட்டு வடிவில் கண்டறிந்தவர்கள் சீன கணித அறிஞர்கள் என கூறப்படுகிறது. எப்படி கூட்டினாலும் ஒரே விடை வரும் வகையில் எண்களை நிரப்புவது. தொடர்ந்து கணக்கோடு கைகோர்த்து நடக்கும் நாம்இதுபோன்ற ஒரு புதிரைநாமே உருவாக்கலாமா? உருவாக்கி ஒரு போஸ்ட்கார்டில்அனுப்புங்கள்.

;