tamilnadu

img

பேரழிவைச் சந்திக்கும் பூமியின் நுரையீரலை அறிவோம் - எம்.ஜே.பிரபாகர்

காடு - தாவரங்கள் உயிரி னங்களின் வீடு. இன்றைக்கு பருவநிலை நெருக்கடியை நாம் சந்திக்க தொடங்கி விட்டோம்.  ஆம். பெரும் மழை கொட்டித் தீர்க்கிறது. ஒரே நாளில் 100 சென்டிமீட்டர் மழை பொழிவு. நாடெங்கும் வெள்ளம். மழை வெள்ளம் வடிய ஒரு வாரத்திற்கு மேல் கூட ஆகிறது. அதேபோன்று கடும் வெப்பம். வரலாறு காணாத வெயில் சுட்டெரிக்கிறது. வாக்குச்சா வடிக்கு சென்றவர்கள் ஓட்டு போட முடி யாது; அங்கே மரணத்தை தழுவிய சூழ லும் நிலவுகிறது. கடந்த சில ஆண்டுகளாக மழை,  வெயில் இரண்டுமே பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இனி பருவ காலங்கள், பனிகாலம், மழைக்காலம், வெயில் காலம், இளவேனிற்  காலம் இருக்குமா? என்பது கேள்விக்குறியே. இந்த நெருக்கடி நிலையை எப்படி தடுத்து நிறுத்தப் போகிறோம் என்பதே நம் முன் உள்ள சவாலாகும்!  நாம் வசிக்கும் பூமியின் நுரையீரல் பகுதி  தான் அமேசான் காடுகள்.   மழைக்காடு பெரும்பாலும் நிலநடுக்க கோடுகளுக்கு அருகே உள்ளது. மழைக் காடு குறிப்பாக இந்தியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா கண்டங்களில் மழைக்காடுகள் காணப்படுகிறது. இந்தியா வில் மேற்கு தொடர்ச்சி மலை தொடரில் உள்ள காடுகள் அனைத்தும் மழைக்காடு கள் ஆகும். இம்மலை காடுகளில் தான் மிக அதிக மான இயற்கை வளங்கள் கொண்டுள்ளன ஆயிரக்கணக்கான தாவரங்கள், உயிரினங் களின் வீடாக மழைக்காடுகள் இருக்கிறது.

மனிதர்களுக்கு தேவையான உணவுப்  பொருட்களையும் இயற்கை மருந்துகளை யும் இக்காடுகள் தான் தருகின்றன.  இங்குள்ள மரங்கள் 200 அடி உயரம் வளரும். இதனால் வெப்பம் அதிகம் இல்லாத சூழலில் இருக்கும் இக்காடுகள்.  இக்காடுகள் தான் உயிரினங்கள் வாழ பல்வேறு சூழல்களை உருவாக்குகிறது. மரத்தில் கிடைக்கும் பழத்தை குரங்கு, வவ்வால், பூச்சிகள், பறவைகள் உண்டு வாழ்கின்றன. அதுபோன்று யானை, தவளை, பாம்பு  போன்ற உயிரினங்கள் காட்டின் தரைப்பகுதி யில் கிடைப்பதை உண்டு வாழ்கின்றன. இக்காடுகளில் 25 லட்சம் பூச்சி வகைகள், 40 ஆயிரம் மர வகைகள், 3000-க்கும் மேற்பட்ட மீன் வகைகள், 1500-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள், 400-க்கும்  மேற்பட்ட பாலூட்டி வகைகள் ஆகியவற்று க்கு அமேசான் காடுகள்தான் வசிப்பிடமாக இருந்து வருகின்றன. அமேசான் காட்டில் பெய்யும் மழை நீர் மரங்களின் கீழே வடிந்து தரைப்பகுதியை வந்து சேர குறைந்தது பத்து நிமிடம் ஆகு மாம். அந்த அளவுக்கு மரங்கள் நெருக்க மாக இருப்பதே இதற்கு காரணம். எனவே தான் நாம் வசிக்கும் பூமியின் நுரையீரல் என அமேசான் காடுகளை அழைக்கிறோம். இப்படிப்பட்ட அமேசான் காடுகளில் உள்ள இயற்கை வளங்களை உலகப் பெரும் முதலாளிகள் கொள்ளையடித்து அழித்து வருகிறார்கள். ஆனால் பழங்குடிகள்தான் காடு அழிப்புக்கு காரணம் என பொய்ப்பிரச் சாரத்தை முதலாளிகள் பரப்புகிறார்கள்.

நம் நம்நாட்டு பெரும் முதலாளிகளான அம்பானி, அதானி தொடங்கி உலகப் பெரும் முதலாளிகளின் பெரும் நிறுவனங்கள் காடு களை அழித்து பெரும் செல்வத்தை குவித்து வருகிறார்கள். இதை ஊடகங்களும் உண்மைத்தன்மையை உலகுக்கு காட்டா மல் மறைத்து வருகின்றன. நவீன வர்த்தக நடைமுறைகளின் ஒரு  பகுதியாகவே அமேசான் காடுகள் அழிக்கப் பட்டு வருகிறது. காடுகளில் வசித்து  வரும் பழங்குடி மக்கள் மற்றும் உயிரினங்கள் இருப்பது தமது தொழிலுக்கு இடையூறாக இருப்ப தால் காடு அழிப்பை பெரும் முதலாளிகள் செய்து வருகிறார்கள். இந்த தீயில் நாமும் சாம்பலாகும் காலம் தொலைவில் இல்லை என்பதை நாம் உணர வேண்டிய நேரம் இது. நம் குழந்தைகள் அமேசான் காடுகள் பற்றி இனிமேல் அறிய மாட்டார்கள். இணை யத்தில் தேடினால் கூட அமேசான் நிறுவனம் தான் வரும். அமேசான் என்ற இணைய பல்பொருள் அங்காடிகள் தான் இருக்கும். ஒரு மழைக்காட்டின் பேரழிவை மிக அற்புதமாக வடித்து இருக்கிறார்நூலாசிரியர். சிறிய நூலானாலும் இதை வாசிப்ப வர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படு த்தும் என்பதில் ஐயமில்லை. இந்த நூலை வாசிப்பது மட்டுமல்ல இதை பெரும் இயக்க மாக கொண்டு சென்றால்தான் இது போன்ற காடு அழிப்பை நாம் தடுக்க முடியும்.

“ஓர் மழைக்காட்டின் பேரழிவு”
 நூலாசிரியர் : ஆதி வள்ளியப்பன்
 விலை: ரூ.20- வெளியீடு:
 காக்கைக்கூடு
 சென்னை - 600004.
 தொடர்பு எண் : 9043605144

;