tamilnadu

img

‘நானே ராமரின் வம்சாவளி’ உச்சநீதிமன்றத்திலும் நிரூபிக்கத் தயார்

ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவரும், பாஜக பெண் எம்.பி.யுமான தியா குமாரி, தன்னை “ராமரின் வம்சாவளி” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.அயோத்தியில் பாபர் மசூதி இருந்தஇடம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான மேல்முறையீட்டு மனுவைஉச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, நாள் தோறும் விசாரித்து வருகிறது. 

அந்தவகையில், கடந்த வெள்ளிக் கிழமையன்று நடைபெற்ற விசாரணையின்போது, “ராமரின் (ரகுவம்சம்) வம்சாவளிகள் இன்னும் அயோத்தியில் வசித்து வருகிறார்களா?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது, “இதைப் பற்றிய தகவல் என்னிடம் இல்லை; ஆனால் ராமரின் வம்சாவளிகள் தொடர்பாக அறிவதற்கு முயற்சி செய்வேன்” என்று மூத்த வழக்கறிஞர் கே. பராசரன் கூறியிருந்தார்.இந்நிலையில்தான், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அரச குடும்பத்தைச்சேர்ந்தவரும், ராஜ்சமந்த் தொகுதி பாஜக பெண் எம்.பி.யுமான தியா குமாரி,தன்னை “ராமரின் வம்சாவளி” என்று அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:

“ராமரின் வம்சாவளியினர் இன்னும்இருக்கிறார்களா? என்று நீதிமன்றம் கேட்டிருக்கிறது. ராமரின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் உலகம் முழுக்கபரந்து இருக்கிறார்கள். என் குடும்பம்,ராமரின் மகன் குஷாவின் பரம்பரையை சேர்ந்தது. இதற்கான கையெழுத்துப் பிரதிகள், மரபணு ஆதாரங்கள், ஆவணங்கள், அரச குடும்பத்திடம் இருக்கின்றன. தேவைப்பட்டால், அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் கொடுத்து, இதை நிரூபிப்பேன் ஆனால், நீதிமன்ற விசாரணையில் தலையிட மாட்டேன். இந்த வழக்கில் விசாரணையை விரைவாக நடத்தி, தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்.” இவ்வாறு தியா குமாரி கூறியுள்ளார்.

;