world

img

தீக்கதிர் உலக செய்திகள்

காலநிலை மாற்றம் : ஆசியாவில் அதிக பாதிப்புகள் 

2023 ஆம் ஆண்டு காலநிலை மாற்றங் களால் அதிகப் பேரிடர்களை யும், அழிவுகளையும் சந்தித்த கண்டமாக ஆசி யக் கண்டம் உள்ளது என  ஐ.நா சபை தெரிவித் துள்ளது. மேலும் ஆசியா மிக வேகமாக வெப்ப மடைந்து வருவதாகவும் ஐநாவின் வானிலை மற்றும் காலநிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.வெள்ளம் மற்றும் புயல்களால் இந்தியா, பாகிஸ் தான், ஆப்கானிஸ்தான்  சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் அதிக உயிரிழப்புகளும் பொருளாதார இழப்புகளும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

அகதிகளை மாற்றும் திட்டத்தை  பரிசீலனை செய்ய வேண்டுகோள்

இங்கிலாந்திற்கு புகலிடம் தேடி அக திகளாக வரும் மக்களை ருவாண்டா விற்கு அனுப்ப அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அகதி களை அங்கு அனுப்பும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் ஐ.நா  சபையின் இரண்டு உயர் அதிகாரிகள் இந்த நடவடிக்கை மனித உரிமைகள் மற்றும் அகதிகள் பாதுகாப்புக்கு தீங்கு விளை விக்கும் என்று எச்சரித்ததோடு இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு இங்கிலாந்து அர சுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆயுதங்களுக்கான  உலக செலவினம் அதிகரிப்பு 

உலகளாவிய ராணுவச் செலவு 2,440 கோடி டாலர்களுக்கு மேல் அதிகரித்துள் ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது. 2022-2023 க்கு இடையில் மட்டும் 6.8 சதவீதம் வரை ஆயுதங்களுக்கான செலவுகள் அதிகரித்துள் ளன. 2009 க்குப் பிறகு தான் ஆயுதங்களுக் காண செலவில் செங்குத்தான  உயர்வு உரு வாகியுள்ளது எனவும் கடந்த  60 ஆண்டு வர லாற்றில் பதிவு செய்த அதிகபட்ச செல வினங்களும் இதுதான் எனவும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்  தெரி வித்துள்ளது.

ஹெலிகாப்டர்கள்  நேருக்கு நேர் மோதல்

மலேசியாவில் சாகச நிகழ்ச்சி ஒத்தி கையின்போது இரண்டு ஹெலி காப்டர்கள் நடுவானில் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 10 பேர் உயிரிழந்துள்ள னர். மலேசிய கடற்படையின் 90 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு  கோலா லம்பூரில் இருந்து  210 கிலோ மீட்டர் தொலை வில் உள்ளலுமுட் பகுதியில் நடந்த  ஒத்திகை நிகழ்ச்சியில்  காலை 9.30 மணியளவில் இந்த  விபத்து நடந்ததாக மலேசிய கடற்படை தெரிவித்துள்ளது.

சீனாவில் ஏற்பட்டுள்ள  வெள்ளத்தில் 4 பேர் பலி

சீனாவில் பெய்த வரலாறு காணாத மழையில்   நான்கு பேர் உயிரிழந்துள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குவாங்டாங் மாகாணத்தில்  இந்த இறப்புகள் பதிவாகி யுள்ளது.  தற்போது 1 லட்சத்து 10 ஆயிரத்துக் கும் அதிகமான மக்கள் வெள்ளம் ஏற்பட்ட பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள னர்.  சுமார் 25,800 பேர் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

;