world

img

தீக்கதிர் உலக செய்திகள்

உலகளவில் அதிக வெப்பம்  ஏப்ரல் மாதம் பதிவு

உலகளவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாதம்  அதிக  வெப்பம் வீசியதாக கோபர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை  தெரிவித்துள்ளது.  ஏப்ரல் மாதம் சராசரியாக 15.03 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.  இது 1850-1900 ஆம் ஆண்டுக்கான மாத சராசரியை விட 1.58 டிகிரி செல்சியஸ் அதிகம் என ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை நிறுவனமான கோபர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை தெரிவித்துள்ளது.

இந்தியா வரும்  மாலத்தீவு அமைச்சர்

மாலத்தீவில் புதிய ஜனாதிபதியாக முகமது முய்சு  பதவியேற்ற 6 மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக மாலத்தீவு  வெளியுறவுத் துறை  அமைச்சர் மூசா ஜமீர் மே 9இல் ( இன்று) இந்திய வருகிறார். இந்திய கடற்படை வீரர்களை மாலத்தீவில் இருந்து வெளி யேற்றிய பிறகு இருநாட்டு உறவிலும் விரிசல் ஏற்பட்டது. மேலும் இந்தியப் பயணிகளின் சுற்றுலா வருகை அந்நாட்டில் குறைய துவங்கி யதைத் தொடர்ந்து இந்த பயணம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் போராட்டத்தை கலைக்க  புல்டோசர் பயன்படுத்திய நெதர்லாந்து

ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகப் போராடிய மாணவர்களின் போராட்டத்தை புல்டோசர் வைத்து கலைத்துள்ளது நெதர்லாந்து அரசு.  அமைதியாகப் போராடி வந்த மாணவர்களின் போராட்டத்தில் பதற்றத்தை உருவாக்கி, போராடும் இடத்தை  சுற்றி மாணவர்கள் அமைத்திருந்த தடுப்பு களை புல்டோசர் மூலம் இடித்துத் தள்ளி மாண வர்கள், சமூக ஆர்வலர்கள் என  125 பேரை அந்நாட்டு காவல்துறை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளது.

இம்ரான் கான் மனைவி  சிறைக்கு மாற்றம் 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். முன்னதாக பாதுகாப்புக் காரணங்களுக்காக பீபியை வீட்டுக்காவலில் இருந்து  சிறைக்கு மாற்றப்பட வேண்டும் என்று அவரது சார்பில் வழக்கறிஞர் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் நீதிமன்றம் அடியாலா சிறைக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளது. வீட்டுச் சிறையில் வழங்கப்பட்ட உணவின் காரணமாக உடல் பிரச்சனை ஏற்பட்டதை தொடர்ந்து அவரை சிறைக்கு மாற்றும் கோரிக்கையை அவர் வைத்துள்ளார்.

பிரேசில் வெள்ளத்தில்  1.5 லட்சம் பேர் வீடிழப்பு 

தெற்கு பிரேசிலில் உள்ள  ரியோ கிராண்டே டோ சுல்  மாநிலம்  முழுவதும் ஏற்பட்ட பேரழிவு  வெள்ளத்தால் 90 பேர் உயிரிழந்துள்ளனர்.131 நபர்கள் காணாமல் போயுள்ளனர். 1 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அரசு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

;