world

img

தீக்கதிர் உலக செய்திகள்

கஞ்சா விற்பனை  ஒழுங்குமுறை ஆணையம் - பாக் அரசு 

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பாகிஸ்தான் அரசு கஞ்சா விற்பனைக்கு தயாராகி வருகிறது. மருத்துவ மற்றும் தொழில்துறை நோக்கங்க ளுக்காக கஞ்சா சாகுபடி, சுத்திகரிப்பு மற்றும் விற்பனை ஆகியவற்றை ஒழுங்குபடுத்த கடந்த பிப்ரவரி மாதம் கஞ்சா கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தை (CCRA) பாக் உருவாக்கியது குறிப்பிடத் தக்கது. பாகிஸ்தானில் பணவீக்கம் 25 சத வீதமாக   உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் காணாமல் போன  தெலுங்கானா மாணவர் 

அமெரிக்கா சிகாகோ மாகாணத்தில் மே 2 அன்று காணா மல் போன இந்திய மாணவர் ரூபேஷ் சந்திர சிந்தா இன்னும் மீட்கப்படாமல் உள்ளார். 26 வயதான முதுநிலை மாணவரான ரூபேஷ் சந்திரா தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த வர்.  சிகாகோவில் உள்ள இந்திய துணைத் தூதரகமும் உள்ளூர் காவல்துறையும் சிந்தாகிண்டியைக் கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. 

பாலஸ்தீன ஆதரவாளர் வீட்டில்  குண்டு வைத்தவருக்கு சிறை 

பாலஸ்தீன ஆதரவாளர் வீட்டிற்கு வெடி குண்டு வைத்த நபருக்கு 12 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கடந்த ஜனவரி மாதம் டேவிட் மாரிஸ் வைஸ் என்ற 43 வயது நபர்  பாலஸ்தீன ஆதரவாளர் ஒருவரின் வீட்டிற்கு வெளியே வீட்டில் தயாரித்த வெடிகுண்டை காரில்   வைத்து கொலை முயற்சியில் ஈடுபட்டார். வெடி குண்டு நிபுணர்கள் மூலம் கண்டறி யப்பட்டு குண்டு செயலிழக்க செய்யப்பட்டது. குற்றத்தை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் தற்போது அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பெரிய துடுப்பு திமிங்கலங்கள்   வேட்டையாடும் பட்டியலில் இணைப்பு

வணிகத்திற்காக வேட்டையாடப்படும் திமிங்கலங்களின் பட்டியலில் பெரிய துடுப்பு திமிங்கலங்களை இணைத் துள்ளது ஜப்பான் அரசு. கடல் பாலூட்டிகளின் வணிக வேட்டையை ஒழுங்குபடுத்தும் சர்வ தேச அமைப்பிலிருந்து வெளியேறி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மே 9 அன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  2019 ஆம் ஆண்டில் இருந்தே ஜப்பானின் கடல் மற்றும் பிரத்யேக பொருளாதார மண்டலங்க ளில் வணிக ரீதியாக திமிங்கல வேட்டையை துவங்கியது குறிப்பிடத்தக்கது. 

கட்டாய ஹிஜாப் பெண்கள் மீதான போர் 

பெண்களை ஹிஜாப் அணிய கூறி ஈரான் அரசு  கட்டாயப்படுத்துவது “பெண்கள் மீதான போர்” என அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.  மேலும் அது  கொடூரமான ஒடுக்குமுறை எனவும் கூறியுள்ளது. ஹிஜாப் கட்டுப்பாடுகள் கொண்டு வந்ததில் இருந்து பெண்களை அடிப்பது, பாலியல் வன்முறை செய்வது, மின்சார அதிர்ச்சி கொ டுப்பது, தன்னிச்சையாக கைது செய்வது என ஈரான் பாதுகாப்புப் படைகள் அட்டூழியம் செய்வதாக மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
 

 

 

;