world

img

தீக்கதிர் உலக செய்திகள்

லண்டன் மேயர் தேர்தல்  மூன்றாவது முறையாக சாதிக் வெற்றி

லண்டன் மேயர் தேர்தலில் தொழிலாளர் கட்சியின் சாதிக் கான் 40.5 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இங்கிலாந்து நாட்டின் தலைநக ரான லண்டன் மாநகரின் மேயராக தொடர்ந்து மூன்றாவது முறையாக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் 2 லட்சத்து 76  ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சாதிக்கான் வெற்றி பெற்றுள்ளார். கானின் தொழிலாளர் கட்சி மொத்தம் உள்ள  14 இடங் களில் 9 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஆப்கன் தூதரக அதிகாரி மீது  கடத்தல் புகார் 

இந்தியாவில் உள்ள மூத்த ஆப்கானிஸ்தான் தூதரக அதிகாரி துபாயில் இருந்து தங்கம் கடத்த முயன்றதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரில் இருந்து ஜாகியா வார்டக் என்ற ஆப்கன் தூதரக அதிகாரி கடந்த மாதம் ரூ.18.6 கோடி மதிப்புள்ள 25 கிலோ தங்கத்தை மும்பை விமான நிலையத்தில்  கடத்த முயன்ற போது  பிடிபட்டதாகவும்  கூறப்படுகிறது.

பெண்ணுரிமை செயல்பாட்டாளருக்கு  சிறைத்  தண்டனை விதித்த சவூதி 

சமூக வலைத்தளங்களில் அரசு  மற்றும் அரசு அதிகாரிகளை விமர் சித்ததற்காக சமூக செயல்பாட்டாளர்களை குற்றவாளிகள் என கைது செய்து தண்டனை விதித்துள்ளது சவூதி அரசு. இதனை மனித உரிமைக் குழுக்கள் செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தி யுள்ளன. 29 வயதான பெண்ணுரிமை ஆர்வ லர் மனஹேல் அல்-ஓடைபிக்கு 11 ஆண்டு கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.  அவ ருக்கு உடனடியாக பிணை வழங்கப்பட வேண்டுமென மனித உரிமை குழுக்கள் குரலெழுப்பி வருகின்றன.

இலங்கையின்  ஏற்றுமதி அதிகரிப்பு 

இலங்கையின் வர்த்தக ஏற்றுமதி கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது  9.77 சதவீதம் அதிகரித்துள்ளது என அந்நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி  அமைப்பு   அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கடந்த  ஆண்டு  மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது  ஏற்றுமதி 7.51 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் மார்ச் மாதத்தில் வணிகப் பொருட்கள் மற்றும் சேவைகள் உட்பட மொத்த ஏற்றுமதி  140  கோடி அமெரிக்க  டாலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

வடக்கு காசா முழுமையான  பஞ்சத்தில் தள்ளப்பட்டுள்ளது 

வடக்கு காசா முழுமையான பஞ்ச த்தில் தள்ளப்பட்டுவிட்டது என  ஐ.நா.   உலக உணவுத் திட்டத்தின் அமெரிக்க இயக்குநரான சின்டி மெக்கெய்ன்  தெரி வித்துள்ளார். பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல்  ஆறு மாதங்களுக்கும் மேலாக நடந்தி வரும் இனப்படுகொலை போர்  துவங்கி யதில் இருந்து காசாவிற்குள் உணவு மற்றும்  குடிநீர் செல்வதை  இஸ்ரேல் தடுத்து வரு கிறது. குறிப்பாக வடக்கு காசா பகுதியில் எந்த உதவிகளும் சென்று விடாமல் இஸ்ரேல் தடுத்து வருகிறது. 

 

;