world

img

அதீத வெப்பத்தால் கற்றல் ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கும்

காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவ தும் அதிக வெப்பம் (வெப்ப அலை) வீசி வருகிறது. இந்த அதிக வெப்பத்தின் காரண மாக குறிப்பாக வெப்பமண்டலப் பகுதிகளில் உள்ள  வளரும் நாடுகள் மற்றும் வளர்ந்த நாடுக ளுக்கு இடையே ஏற்கனவே உள்ள கல்வி கற்றல் இடைவெளி மேலும் அதிகரிக்கக் கூடும்  என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.  இந்த இடைவெளி ஏழை நாடுகளுக்கும் பணக்கார நாடுகளுக்கும் இடையில் மட்டு மல்ல, நாடுகளில் உள்ள வளர்ந்த மற்றும் பின்தங்கிய மாவட்டங்களுக்கு இடையில் கூட அதிகமாகலாம் எனவும் எச்சரித்துள்ளனர்.  அதிக வெப்ப அலை வீசத் துவங்கிய பிறகு, பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்புவதால் அவர்களுக்கு கடுமையான உடல் நலப்பிரச்ச னைகளை உருவாக்கும்.  வங்கதேசத்தில் மின் விசிறிகள் இல்லாத, காற்றோட்டம் இல்லாத  பள்ளிகள் உள்ளன. மாணவர்களுக்கு வெயிலின் தாக்கத்தை எதிர் கொள்ள அடிப்படை வசதிகளை கூட பள்ளிக ளில் தர முடியாத சூழல் உள்ளதை ‘சேவ் தி சில்ட்ரன்’ அமைப்பின் வங்கதேச இயக்குநர் ஷுமோன் சென்குப்தா குறிப்பிட்டுள்ளார். வெயில் காலத்தில் மாணவர்கள் தொடர்ந்து வகுப்புகளுக்குச் சென்றால் அவர்களின் கல்வி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதாவது அதிக வெப்பநிலை மூளையின் அறிவாற்றல் செயல் பாடுகளை நிறுத்தி மந்தப்படுத்துகிறது. மேலும் இது  மாணவர்களின்  நினைவாற்றல் திறனையும் குறைக்கிறது.  2020 ஆம் ஆண்டு அமெரிக்க உயர் நிலைப் பள்ளி மாணவர்களிடையே அமெரிக் கன் எகனாமிக் ஜர்னல்  நடத்திய ஆய்வில், அதிக வெப்பநிலை தாக்கத்தால் தேர்வுகளால் மாணவர்களின் மதிப்பெண் மிக மோசமாக குறைந்தது தெரிய வந்தது.அதாவது 0.55 டிகிரி செல்ஸியஸ்  (1F) வெப்ப நிலை அதிகரித்ததால்  அந்தாண்டு  மாணவர்களிடையே 1 சதவிகிதம் கற்றல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.   அதே நேரத்தில் போதிய குளிரூட்டப்பட்ட காற்றோட்டம் உள்ள அந்த பள்ளிகளில் இவ் வாறான கற்றல் பாதிப்பு இல்லை என  பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் ஜோஷ் குட்மேன் கூறியுள்ளார். பல்வேறு ஆய்வுகளின்படி, 40 முதல் 60 சத வீதம் வரையிலான அமெரிக்கப் பள்ளிகள் குறைந்தபட்சம் பகுதியளவேனும் காற்றோட்ட வசதி கொண்டதாகக் கருதப்படுகிறது. இது இல்லாத பள்ளிகள் பெரும்பாலும் அமெரிக் காவில் உள்ள பின்தங்கிய மாவட்டங்களில் காணப்படுகின்றன.   இந்த காலநிலை மாற்றம் சூடான மற்றும் குளிர் நாடுகளுக்கு இடையேயும், ஒரே நாட்டிற் குள்ளும்  கற்றல் இடைவெளியை அதிகப்படுத் தும் என கூறப்படும் நிலையில் சில வளர்ந்த நாடுகள் மட்டுமே இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முயற்சி செய்கின்றன. 2026 ஆம் ஆண்டுக்குள் அதிக வெப்ப காலங்களில் மாணவர்களை பாதிக்காத வகை யில் குளிரூட்டப்பட்ட நல்ல காற்றோட்டமான வகுப்பறைகளுடன் கூடிய 30 வெப்ப - எதிர்ப்பு பள்ளிகளை ஜோர்டானில் கட்டப் போவதாக சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க நிறுவனம் கடந்த மார்ச் மாதம் அறிவித்தது குறிப்பிடத் தக்கது.

;