world

img

தீக்கதிர் உலக செய்திகள்

உலகம் முழுவதும்  உணவு விலை உயர்வு 

உலகம் முழுவதும் தொடர்ந்து இரண் டாவது மாதமாக ஏப்ரல் மாதம் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித் துள்ளதாக ஐ.நா  உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.  இரண்டு ஆண்டு களுக்கும் மேலாக தொடர்ச்சியாக இரண்டு மாதம் விலை உயர்ந்து இருப்பது இதுவே முதல் முறை என குறிப்பிட்டுள்ளது. இறைச்சி, தானியங் கள், சமையலுக்கான எண்ணெய் என உணவுப் பொருட்களாயின் விலை கடந்த மார்ச் மாதத்தை விட  ஏப்ரல் மாதம் 0.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

பாக். வெளியுறவுத்துறை அமைச்சராகும் பிலாவல் புட்டோ 

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் புட்டோ-சர்தாரி மீண்டும்   வெளியுற வுத்துறை அமைச்சராக பதவி ஏற்க வாய்ப்பு  ஏற்பட்டுள்ளது. அங்கு பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. தற்போது இரு கட்சிகளும் அதிகாரப் பகிர்வுக்கான ஒப்பந்தத்தை இறுதி செய்து வரும் நிலையில் இந்த தகவல் வெளி யாகியுள்ளது.

தேர்தல் வெற்றிக்கு பயன்பட்ட  பாலஸ்தீன ஆதரவு பிரச்சாரம் 

இங்கிலாந்து நாட்டு கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற பாலஸ்தீன ஆதரவு பிரச்சா ரத்தை மேற்கொண்டவர்கள் வெற்றி பெற்றுள் ளனர். தங்கள் வெற்றியை உறுதி செய்யவும், போட்டியில் முன்னேறவும் பல வேட்பாளர் கள் பாலஸ்தீன ஆதரவு பிரச்சாரத்தை மேற் கொண்டனர்.  குறிப்பாக இங்கிலாந்தின் இஸ்ரேல் ஆதரவு போக்கை கண்டித்தும் பிரச்சாரம் செய்த னர். இவ்வாறு பாலஸ்தீன ஆதரவு பிரச்சாரம் செய்த  40 க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள்  இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். 

குழந்தைத் தொழிலாளர்களை பயன்படுத்திய  அமெரிக்க நிறுவனத்திற்கு அபராதம்

குழந்தைத் தொழிலாளர்களை பயன் படுத்தியதற்காக  அமெரிக்க துப்புரவு நிறுவனத்திற்கு  அபராதம் விதிக் கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அயோவா மற்றும் வர்ஜீனியாவில் உள்ள ஆபத்தான இறைச்சி பதப்படுத்தும் நிறுவனத்தில்  சுத்தம் செய்யும் பணியில் 20 க்கும் மேற்பட்ட   குழந்தை களை சட்டவிரோதமாக பணியமர்த்தியது கண்டறியப்பட்டது. இதையடுத்து டென்சியை  தளமாக கொண்ட அந்நிறுவனத்திற்கு  6 லட்சத்து 50 ஆயிரம் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  

5 ஆவது முறை ஜனாதிபதியாக  பதவி ஏற்றார் புடின் 

ரஷ்யா ஜனாதிபதியாக தொடர்ந்து 5 ஆவது முறையாக விளாடிமிர் புடின் பதவி ஏற்றுள்ளார். இந்த பதவி ஏற்பு விழாவை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் புறக்க ணித்துள்ளன. 1999 முதல் தொடர்ந்து ரஷ்ய ஜனாதிபதியாக இருந்து வரும் புடின் சீனா  மற்றும் வளரும் நாடுகளுடன் நெருங்கிய உற வுகளை பராமரித்து     அமெரிக்காவின் ஏகாதிபத்தி யத்தை  கடுமையாக எதிர்த்து வருகிறார். 5 ஆவது முறையாக ஜனாதிபதியாகியுள்ள புடின் 6 ஆண்டுகள் இப்பதவியை வகிப்பார்.

;