world

ரஃபாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அது ரத்த ஆறையே உருவாக்கும்

காசாவின் தெற்கு பகுதி நக ரமான ரஃபாவில் இஸ் ரேல் ராணுவத்தின் தாக்குதல் ரத்த ஆறையே உருவாக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. 

இஸ்ரேல் ஏழு மாதகாலமாக நடத்தி வரும் இனப்படுகொலை போர் காசாவின் பெரும்பாலான மக்களை  ரஃபா பகுதிக்கு துரத்தி யுள்ளது. தற்போது அப்பகுதியில் ஹமாஸ் குழுவினரை அழிக்கப் போவதாக இஸ்ரேல்  பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறி அங்கு தரை வழியாகவும் வான்வழி யாகவும் தாக்குதல் நடத்த திட்ட மிட்டு வருகிறார்.

இந்த தாக்குதல் நடத்தப் பட்டால்  ரஃபாவில் தஞ்சம் புகுந்துள்ள 12 லட்சம் மக்களுக்கும்  பயங்கர மான பாதிப்புகள்  ஏற்படக்கூடும் என்றும் அங்கு ரத்த ஆறு தான் ஓடும் என்றும் காசாவில் ஏற்க னவே அழிக்கப்பட்டு வரும் சுகா தாரக்  கட்டமைப்பு முற்றிலும் அழிக் கப்படலாம் என்றும்  என்றும் உலக சுகாதார நிறுவன  இயக்குநர்  டெட்ரோஸ் அதானோம் கெப்ரே யஸ் எச்சரித்துள்ளார். 

தற்போது காசாவின் 36 மருத்துவமனைகளில் 12 மருத்துவ மனைகள் மற்றும் அதன் 88 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 22 மட்டுமே “ஓரளவு செயல் பாட்டில் உள்ளன” என்று ஐநா சுகாதார நிறுவனம் தெரிவித்துள் ளது.

இந்நிலையில் ரஃபாவில் நடத்தப்படும் தாக்குதலால் பாதிக் கப்படும் மக்களுக்கு மருத்துவ உத விகளை செய்ய முடியாமல் போகும் என உலக சுகாதார நிறு வனம் கூறியுள்ளது.

;