articles

img

ஸ்கேன் இந்தியா

போட்டியில்லை  

சொந்தக் கார் கூட இல்லாத வரை ஆம் ஆத்மி மாநிலங்க ளவை உறுப்பினருக்கான வேட்பாளராக நிறுத்தியுள்ளது. சொந்தக்கார்தான் இல்லை... ஆனால், அவருடைய குடும்பச் சொத்தின் மதிப்பு 5 ஆயிரத்து 53 கோடி ரூபாயாம். டிரைடென்ட் குழுமத்தின் நிறுவன ரான ராஜிந்தர் குப்தா தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். ஏகப்பட்ட நிதி அவ ரிடமிருந்து கிடைப்பதால்தான் அவருக்கு சீட் தந்துள்ளனர். ஒருவேளை அவருடைய மனு நிராகரிக்கப்பட்டால் என்ன செய்வது..? அதனால் மாற்று வேட்பாளராக அவரது துணைவியாரையே நிறுத்தி விட்டார்கள். பேச்சுக்குக்கூட, அவருக்கு எதிராக நிற்பது பற்றி காங்கிரஸ், அகாலிதளம், பாஜக கட்சிகள் எதுவும் சொல்லவில்லை. யாரும் அவரை எதிர்த்துப் போட்டியிடவில்லை. போட்டியின்றித் தேர்வாகிறார்.  

பொறுப்பு

 சமூகப் பொறுப்புப் பணிகளில் இருந்து நீங்கள் செய்யலாமே என்று ஒரு கர்நாடக அமைச்சர், தனியார் நிறுவனத் தலைவர் ஒருவரைப் பார்த்துக் கேட்டு விட்டாராம். உடனே நிறுவனத் தலை வர்கள் கொந்தளித்து விட்டனர். அரசு தன்னு டைய பொறுப்பில் இருந்து விலகுவதா என்று கேள்வி கேட்கிறார்கள். இதில் சிலரோ, தங்கள் சொந்தப்பணத்தில் இருந்து செலவு செய்வது போலப் பேசுகிறார்கள். நிறுவனச் சட்டம், 2013இல் 135ஆவது விதியின்படி ஒவ்வொரு நிறுவனத்திற்கும் சமூகப்  பொறுப்பு உள்ளது. இந்தப் பொறுப்புப் பணிகளை செய்யலாமே என்று அமைச்சர் கேட்டதில் என்ன தவறு என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசுகிறார்கள். நிறுவனங்கள் தங்களுக்கு வேண்டிய இடங்களில் பணத்தைச் செலவழித்துக் கொள்கின்றன என்ற குற்றச்சாட்டுகள் எழுவதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

 பாகுபலி..!

 கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்கும்போது அதில் பெண்கள், தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் இவ்வளவு பேர் என்று எண்ணிக்கையை ஊடகங்கள் போடுவது வழக்கம். தற்போது அதில் பாகுபலிகள் என்று சேர்க்கிறார்கள். பாகுபலிகள் என் றால் ரவுடிகளாம். அதுவும் வலுவான கூலிப்படையை வைத்திருப்பவர்களைத் தான் அப்படிச் சொல்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பாக நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்  வெளியிட்ட பட்டியலில் மூன்று பாகுபலிகள் இடம் பெற்றிருக்கிறார்கள் என்று ஊடகங்கள் பட்டியல் போட்டுள்ளன. பீகாரில் இடதுசாரிக் கட்சிகளைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிக ளிலும் பாகுபலிகள் இருக்கிறார்கள் என்றும், தேர்தல் களத்தில் அவர்களின் “படைகள்” பெரும் பங்களிப்பைச் செலுத்தும் என்றும் தகவல்கள் வெளியாகின்றன. பெண் பாகுபலிகளும் உள்ளனர். அதாவது, பாகுபலிகளின் துணைவியார்கள்.  

காதல்..?  

யாரோ தங்களைப் பார்ப்பது போல் இருக்கிறது என்ற சந்தேகத்துடன் பதறியிருக்கிறார்கள், நிகழ்ச்சிக்காகத் தங்கள் ஆடைகளை மாற்றிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கள். யாரோ அங்கிருந்து வேகமாக நகர்வது போல் தோன்றியதால் கல்லூரி முதல்வரிடமும் புகார் கூறினர். அந்தத் தளத்தில் சிசிடிவி காட்சிகளைப் பரிசோதித்த போது, நான்கு மாணவர்கள் படம் பிடிப்பது தெரிய வந்திருக்கிறது. உடனடியாக அந்த நான்கு பேரையும் காவல்துறை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பியுள்ளது. அவர்களின் அலைபேசிகள் காவல்துறை வசம் உள்ளது. விசாரித்ததில் அந்த நான்கு பேரும் பாஜகவின் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் என்பது தெரிய வந்திருக் கிறது. இந்தக்கும்பல்தான் காதலை நிராகரிப்பவர்கள் என்ற கிண்டலும் எழுந்துள்ளது.