எதிர்க்கட்சியினரைப் பழிவாங்குவதற்கான முயற்சி
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாள் மக்களையும் அவர்க ளின் பிரதிநிதிகளையும் ஆச்சரியப் படுத்தவும் அதிர்ச்சியடையவும் வைத்தது. மக்களின் அடிப்படை வாக்க ளிக்கும் உரிமையை பெரிய அளவில் கையாடல் செய்ததாக எழுந்த குற்றச் சாட்டுகள் தொடர்பாக புயலாக எழுந்த ஒரு கூட்டத்தொடருக்கு மத்தியில், மாலை யில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அரசமைப்பு திருத்தச் சட்டமுன்வடிவு ஒன்றை அறிமுகப்படுத்தினார். 2025ஆம் ஆண்டு அரசமைப்பு 130ஆவது திருத்தச் சட்டமுன்வடிவு, யூனியன் பிரதே சங்களில் நிலவும் குறிப்பிட்ட சூழ்நிலை யைப் பற்றிய சில பொதுவான அம்சங்க ளைக் கொண்டிருந்தது.
மூர்க்கத்தன முறையில்...
இந்தத் திருத்தச் சட்டமுன்வடிவால் ஏற்படக்கூடிய அரசமைப்புச்சட்ட கேள்வி கள் இவ்விதழில் வேறொரு கட்டுரையில் விரிவாகக் கையாளப்பட்டிருக்கிறது. சட்ட முன்வடிவை இவர்கள் கொண்டுவரு வதின் பின்னே ஒளிந்துள்ள அரசியலை ஆராய்வது மிகவும் முக்கியமாகும். ஏனெனில் அரசமைப்புத் திருத்தச் சட்டம் இயற்றுவதற்கான நடைமுறையை சிறிது ஆர்வத்துடன் உற்றுநோக்கினால், இதனை இவர்கள் எவ்வளவு மூர்க்கத்தன மான முறையில் கொண்டுவந்திருக்கி றார்கள் என்பதைக் காண முடியும். இந்தச் சட்டமுன்வடிவை ஆளும் கட்சியினர் நிறைவேற்ற வேண்டுமானால் அதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாதிக்கும் மேற்பட்ட உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும். இப்போது அவர்க ளுக்குள்ள எண்ணிக்கையை ஆய்வு செய்துபார்த்தோமானால், இந்தச் சட்ட முன்வடிவை அவர்கள் நிறைவேற்றுவது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்பதை உறுதியாகக் கூற முடியும். இந்த நிலையில் இயற்கையாகவே எழக்கூடிய கேள்வி என்னவென்றால், ஒருபோதும் நிறைவேற்ற முடியாத ஒரு சட்டத்தை இயற்றுவதற்கு ஏன் இவ்வ ளவு அவசரம்? இதற்கு அரசாங்கம் அதன் சொந்த பதிலைக் கொடுத்துள் ளது. ‘பொது நலன், நலன் மற்றும் நல்லாட்சி’ ஆகியவற்றை சிறப்பாகப் பாது காப்பதற்காக இவ்வாறு கொண்டுவரப் பட்டிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இந்தக் கூற்று மிகவும் வினோதமானது. எனவே அரசின் இத்தகைய கூற்றுக்க ளை ஆராய வேண்டியது கட்டாயமா கிறது.
பண மோசடி சட்டமும், 2 முதல்வர்கள் கைதும்
கடந்த காலத்தில், இந்த அரசாங்கமே பணமோசடி தடுப்புச் சட்டத்தில் (PMLA-Prevention of Money Laundering Act) ஒரு திருத்தத்தை இயற்றியது, இது நடைமுறையில் அமலாக்கத் துறையி னரை ஆயுதபாணியாக்கியது. இந்தப் புதிய திருத்தத்தின் கீழ் குற்றம் சாட்டப் பட்டவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் இந்தப் புதிய வடிவம் நிறைவேற்றப்பட்ட பின்னர், முதலமைச்சர்கள் உட்பட முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய் யப்பட்டு ஆறு மாதங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டனர். தில்லி யின் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்க் கண்டின் ஹேமந்த் சோரன் ஆகிய முதல மைச்சர்கள் இவ்வாறு கைது செய்யப் பட்டார்கள். பின்னர் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றங்களால் இவர்கள் விடுவிக் கப்பட்டனர். இப்போது முன்மொழியப் பட்டுள்ள 130ஆவது அரசமைப்புத் திருத்தம் அமலில் இருந்திருந்தால், இந்த இருவரும் நிச்சயமாக தங்கள் பதவியை இழந்திருப்பார்கள். ஆனால், அரசாங்கம் எதிர்க்கட்சி முதலமைச்சர்களை மட்டுமல்ல, எதிர்க் கட்சித் தலைவர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை சரணடைய வைக்கும் விதத்திலும் அவர்களை மிரட்டும் பல்வேறு காரியங்களிலும் இறங்கியது.
பாஜகவில் இணைந்தால் அவர்கள் பாதுகாக்கப்படுவர்
2024 ஏப்ரலில், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை, இவர்களின் வழிமுறையை விவரிக்கும் ஓர் அறிக்கையை முதல் பக் கத்தில் வெளியிட்டது. மேற்கு வங்காளத் தின் திரிணாமுல் காங்கிரஸின் முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரி, இப்போது பாஜகவின் எதிர்க்கட்சித் தலைவராகி விட்டார். காங்கிரஸைச் சேர்ந்த மகா ராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் அசோக் சவான் மற்றும் தற்போதைய பாஜக உயர்மட்டத் தலைவர் ஹேமந்த பிஸ்வா சர்மாவின் பையன் என அனை வரும் முன்பு அமலாக்கத்துறையினரால் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள். இவர்கள் பாஜக-விற்கு வந்தபின்னர் உடனடியாக சுத்தசுயம்பிரகாசமானவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டார்கள். இந்த அருவருப்பான வழிமுறையின் மோசமான உதாரணம் மகாராஷ்டிராவில் நிகழ்த்தப்பட்டது, அங்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாதி அரசாங்கம் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டையும் பிரித்து அகற்றப்பட்டது. இந்தச் செயல் மிகவும் வெட்கக்கேடானது. சிவசேனாவிலிருந்து வந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான புதிய அர சாங்கத்தின் ஒன்பது அமைச்சரவை அமைச்சர்கள் மீது அமலாக்கத் துறை குற்றம் சாட்டி இருந்தது. இந்த நபர்கள் பாஜக-விற்கு வந்தபின்னர் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சுத்திக ரிக்கப்பட்டுவிட்டது. இது பாஜக-விற்கு ஒரு நல்ல ‘சலவை எந்திரம்’ (‘washing machine’) என்ற பெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை.
பாஜகவினரே நகைப்பார்கள்
எனவே, இன்று அமித் ஷா முன்மொ ழிந்த திருத்தம் அரசியல் அல்லது தேர்த லைப் பற்றியது அல்ல என்று கூறி புனி தராகக் காட்டிக்கொள்ள முயற்சிக்கும் போது, அவரது சொந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூட இதுபோன்ற அபத்த மான கூற்றுகளைப் பார்த்து தனிப்பட்ட முறையில் சிரிப்பார்கள்! தேர்தல் பத்திரங்கள் (Electoral Bonds) திட்டத்தை உச்ச நீதிமன்றம் அரச மைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்று அறிவித்ததன் மூலம், ஊழல் குறித்த பாஜகவின் மிகப்பெரிய அம்பலப் படுத்தல் இப்போது நன்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் திட்டம் என்பது பாஜகவிற்கும் கார்ப்பரேட்டு களின் ஒரு பகுதியினருக்கும் இடையே ஒரு பிரதிபலனை உருவாக்குவதற்கான மிகவும் அப்பட்டமான செயலாகும்.
மிரட்டிப் பணம் பறிக்கும் திட்டம்
உண்மையில், இந்தத் திட்டத்தின் கீழ் பாஜக பெற்ற நன்கொடைகளின் விவ ரங்கள், 5,000 கோடி ரூபாய்க்கும் அதிகமா னது. பாஜக இவ்வாறு சட்டவிரோத பரி வர்த்தனைகளின் மூலம் பெற்றிருக்கிறது என்பதைத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டுகின்றன. மேலும் இவ்வளவு பெரிய நிதியை அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ ஆகியவற்றின் மூலம் மிக எளிதாகப் பெற முடிந்திருக்கிறது என்பதை ஊடகங்கள் பல வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தி ருக்கின்றன. தேர்தல் பத்திரங்கள் திட்டம் என்பது தன்னார்வத்துடன் கூடிய நன் கொடையல்ல மாறாக மிரட்டிப் பணம் பறித்திடும் ஒரு திட்டம் என்பதை ஊடகங் களின் புலனாய்வுகள் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கின்றன. ஆனால் பொதுமக்களின் நினை வாற்றல் அவ்வளவு குறுகியதல்ல என்றும், அரசியலமைப்பு ஒழுக்கம் பற்றிய அவரது குறிப்பை ஒருபோதும் ஜீரணிக்க முடியாது என்றும் அமித் ஷாவுக்கு யார் நினைவூட்ட முடியும்?
வெளிப்படைத் தன்மையின்றி...
குடியரசுத் துணைத் தலைவர் தேர்த லில் வெற்றி பெறுவதற்காக நீதிபதி சுதர்சன் ரெட்டி மீது குற்றம் சாட்ட உச்ச நீதிமன்ற உத்தரவை அவமதிப்பதில் உள்துறை அமைச்சர் எந்த எல்லைக்கும் செல்ல முடியும். முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கருக்கு அவர்கள் செய்தவற்றின் காரணமாக இது எழுந்துள்ளது. ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான முக்கிய கருவி, நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதாகும். பிரதமரின் கல்விப் பதிவுகளை தர மறுப்பது தொடர்பான சட்ட மோதல்கள், அரசாங்கத்தின் ஒளி புகா தன்மைக்கான விருப்பத்திற்கான மோசமான விளம்பரமாக இருக்க லாம்! அவரது கல்விப் பதிவின் உள்ள டக்கத்திற்கு எந்த பாரபட்சமும் இல்லா மல், இந்தச் செயல் பிரதமரின் அல்லது அவரது அரசாங்கத்தின் தார்மீகத் தரத்தை பொதுமக்கள் பார்வையில் உயர்த்துமா, என்ன?
பாஜகவை பாதுகாக்கவே வாக்குரிமை பறிப்பு
அரசாங்கத்தின் இந்த கொடூரமான பதிவின் மத்தியில், 2025ஆம் ஆண்டு அரசமைப்பு (130ஆவது திருத்தச்) சட்ட முன்வடிவில் கூறப்பட்டுள்ள நோக்கங்க ளை யாரும் பொருட்படுத்தப் போவ தில்லை. இந்த அருவருப்பான திருத் தத்தை முன்வைப்பதில் ஏன் இந்த விரக்தி என்ற கேள்வி தொடர்ந்து நம்மைத் தொந்தரவு செய்யும். இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் அரசியலமைப்பை யே சீர்குலைப்பதற்கான பெருகிவரும் ஆதாரங்களிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பவும், பாஜகவின் தேர்தல் நலன்களைப் பாதுகாப்பதற்காக மக்க ளின் வாக்களிக்கும் அரசமைப்புச்சட்ட உரிமையைப் பறிக்கவும் இது ஒரு முயற்சி என்றே வளர்ந்து வரும் மக்கள் பிரிவினர் இதைப் பார்க்கின்றனர். ஆகஸ்ட் 27, 2025 தமிழில் : ச.வீரமணி