குறுவை நெல்லை உடனடியாக ஏற்றுமதி செய்ய ஏற்பாடு நாகை மாலி கேள்விக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்
சென்னை, அக்.17 - தமிழ்நாடு சட்டப் பேர வையில் துணைக் கேள்வி எழுப்பிய சிபிஎம் உறுப்பினர் நாகைமாலி, டெல்டா மாவட்டத்தில் இந்த ஆண்டு குறுவை விவசாயம் கடந்த ஆண்டை விட நான்கு பங்கு கூடுதலாகச் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நேரடிக் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. உணவுத்துறை அமைச்சர் கொள்முதல் நிலையங்களுக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். அப்போது, உடனடியாக அனைத்து நெல் மூட்டை களையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். இவ்வளவு இருந்தும் நேரடிக் கொள்முதல் நிலையங்களில் விவ சாயிகளிடமிருந்து ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் செய் யாமல் உள்ளதாகத் தகவல்கள் வந்து கொண்டிருப்பதாக நாகைமாலி சுட்டிக் காட்டினார். தற்போது மழை பெய்து கொண்டிருப்பதால் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் தெரி வித்தார். கொள்முதல் நிலையங்களுக்கு வரும் நெல்லைக் கொள்முதல் செய்த தும், உடனுக்குடன் லாரிகளில் ஏற்றிச் செல்வதற்கான ஏற்பாடுகளை அரசு செய்து கொடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதற்கு விரிவாகப் பதிலளித்துப் பேசிய உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, “நாகை மாவட்டம் மட்டுமின்றி டெல்டா, டெல்டா அல்லாத பிற மாவட்டங்களிலும் குறுவை சாகு படி அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார். இதற்கு முக்கியக் காரணம் மேட்டூர் அணையில் இருந்து குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் திறந்து விட்டது என்றும், ஆறு, வாய்க்கால்கள் அனைத்தும் முன்கூட்டியே தூர்வாரப் பட்டது” என்றும் அவர் குறிப்பிட்டார். “கடந்த ஆண்டைக் காட்டிலும் 50 சதவீதம் இந்த ஆண்டில் சாகுபடி அதி கரித்துள்ளதாகவும், இது வரைக்கும் இல்லாத வரலாற்றுச் சாதனை என்றும் அமைச்சர் சக்கரபாணி பெருமிதத்து டன் தெரிவித்தார். விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகளை உடனுக்கு டன் ஏற்றுமதி செய்து எடுத்துச் செல்ல, கூடுதல் லாரி கள் ஏற்பாடு செய்து கொடுக் கவும், விவசாயிகள் கொண்டு வரும் அனைத்து நெல்லை யும் முழுமையாகக் கொள்முதல் செய்யவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
எடப்பாடியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதிலடி
வெள்ளிக்கிழமை கேள்வி நேரத் திற்கு பின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த எதிர்க்கட்சித் தலை வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நெல் அறு வடை மற்றும் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி தொடங்கியுள்ளது என்று கூறினார். இந்நிலையில் விவ சாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வ தில் அரசு பல்வேறு குளறுபடிகளை செய்து வருகிறது என அவர் குற்றம் சாட்டினார். போதுமான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லை என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சி காலத்தில் ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் தினசரி ஆயிரம் மூட்டைகள் கொள் முதல் செய்யப்படும் என்றார். ஆனால் தற்போது ஒரு நாளைக்கு 600 மூட்டை கள் மட்டுமே கொள்முதல் செய்யப் படுவதாக விவசாயிகள் புகார் தெரி விக்கின்றனர் என்று அவர் குறிப்பிட் டார். தமிழக அரசு நேரடி நெல் கொள் முதலுக்கான முறையில் ஈரப்பதம் 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். நெல் மூட்டைகளை பாதுகாக்க தேவை யான தார்பாய்கள் இல்லை என்றும், சாலைகளின் இரு புறங்களிலும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு நெல் மூட்டைகளை கொட்டி வைக்கும் அவ லம் நிலவுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். இதற்கு விளக்கம் அளித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கர பாணி, “பொதுவாக அக்டோபர் மாதத் தில்தான் நெல் கொள்முதல் தொடங் கும். ஆனால் திமுக அரசு பொறுப் பேற்றதில் இருந்து செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது” என்று அவர் தெரி வித்தார். முன்னதாக 3.5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்ட இடத்தில், தற்போது 6.5 லட்சம் ஏக்கருக்கு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது என்று கூறிய அமைச்சர், நாளொன்றுக்கு 1,000 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது என்றார். 3 கோடி எண்ணிக்கையில் சாக்குப் பைகள் கைவசம் உள்ளதாகவும், சணல், தார்ப்பாய் போன்றவையும் கைவசம் உள்ளதாகவும் அவர் தெரி வித்தார். மாலை 6 மணி வரை மட்டுமே கொள்முதல் என்ற நிலையை மாற்றி, இரவு 8 மணி வரை கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று கூறிய அமைச்சர், ஞாயிற்றுக் கிழமைகளிலும் கொள்முதல் செய்து வருவதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் 25 இடங்களில் திறந்த வெளி சேமிப்பு கிடங்குகள் திறக்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், வாங்கிய நெல்லை 4,000 லாரிகள் மூலம் வெளி மாவட்டங் களுக்கு கொண்டு செல்வதாக தெரி வித்தார். தினசரி வெளி மாவட்டங் களுக்கு 25,000 நெல் மூட்டைகளை கொண்டு செல்வதாகவும், சுமார் 10 வேகன் ரயில்கள் மூலமும் நெல் மூட்டைகளை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார். வாங்கிய நெல்லை உடனடியாக அரைக்க வேண்டும் என்றும், அரைத் தால் அதில் செறிவூட்டப்பட்ட அரிசியை கலக்க வேண்டும் என்றும் கூறிய அமைச்சர், இதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கவில்லை என்று தெரிவித்தார். நாமக்கல் மாவட்டங் களில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 13 மடங்கு நெல் கொள்முதல் அதிகரித்துள்ளதாகவும், செறிவூட்டப் பட்ட அரிசிக்கு ஒன்றிய அரசிடம் அனு மதி கேட்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.