articles

img

போக்குவரத்துத் தொழிலாளர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துக!

போக்குவரத்துத் தொழிலாளர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துக!

சென்னை, அக். 17 - தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான கூடுதல் செல விற்கான மானியக் கோரிக்கைகள் மீதான  விவாதத்தில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப் பினர் மா.சின்னதுரை உரையாற்றினார்.  அப்போது அவர் பேசியதாவது:

துணை முதலமைச்சர் அறிவிப்புக்கு பாராட்டு

இந்த முகாமில் குறிப்பாக இரண்டு முக்கிய விஷயங்கள் தொடர்பாக அதிக கோரிக்கை மனுக்கள் வந்ததாக அவர் தெரிவித்தார். முதலாவது, விடுபட்டு போன வர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கொடுக்கப்பட வேண்டும் என்பதாகும். இது குறித்து துணை முதலமைச்சர் அறி வித்திருக்கும் தகவல் தமிழகத்தின் மிக  முக்கியமான ஓர் அறிவிப்பாகும். வந்திருக் கின்ற 28 லட்சம் மனுக்களும் ஆய்வு செய்யப்பட்டு, டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி  விடுபட்டு போனவர்களுக்கும் மகளிர் உரி மைத் தொகை வழங்கப்படும் என்று அறி விக்கப்பட்டுள்ளது. இதை பாராட்டுகிறோம். முன்பு நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்களுக்கு இத்தொகை இல்லை என்கிற விதி இருந்தது. இப் போது அந்த விதியைத் தளர்த்தியிருப்பது மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்ப டுத்தியிருக்கிறது என்று உறுப்பினர் பாராட் டினார்.

59 நாளாக போராடும் போக்குவரத்து ஊழியர்கள்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழி லாளர்களுக்கு பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பண பலன் கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் வழங்கப்பட  வேண்டும் என்று அறிவிப்பு உள்ளது.  2024 ஜூன் வரை அவை வழங்கப்பட்டன.  அதற்குப் பிறகு 17 மாதங்கள் வழங்கப்படா மல் உள்ளன. ஓய்வு பெற்ற தொழிலா ளர்களின் நலனைப் பாதுகாத்திட தொழி லாளர்கள் தொடர்ந்து 59 நாட்களாக காத்தி ருப்புப் போராட்டங்களை நடத்திக் கொண்டு வருகிறார்கள்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், முதல மைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார். ஆனால், தொழிலாளர்கள் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் நுழை வாயில் முன்பாக 59 நாட்களாக காத்திருப்புப் போராட்டம் நடத்திக் கொண்டி ருக்கிறார்கள். தொழிலாளர்கள் தொடர்ந்து  போராடும் போது, அவர்களுடன் உடனுக் குடன் பேசி பிரச்சனைகளைத் தீர்ப்பது அரசின் மீதான நம்பிக்கையை மேலும் உயர்த்தும் என்று வலியுறுத்தினார். தீபா வளிக்கு முன்னதாக அவர்களுடைய கோரிக்கையை பேசி தீர்க்க வேண்டு மென்று கேட்டுக் கொண்டார்.

அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் பதில்  

இதற்கு பதிலளித்த அமைச்சர் சிவ சங்கர், “ஒன்றிய அரசினுடைய நிதிப் புறக் கணிப்புகளுக்கு மத்தியிலும்கூட தமிழ் நாட்டில் பல்வேறு நலத் திட்டங்களை நிறை வேற்றி வருவது, அதில் முன்னேற்றம்  அடைவது என்பது பாராட்டத்தக்கதாகும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுடைய மருத்துவக் காப்பீடு திட்டம் குறித்தும்கூட அதில் ஒரு கோரிக்கை இருக்கிறது. ஓய்வு  பெற்ற தொழிலாளர்களில் 4 சதவீதம்  பேர்தான் அதற்காக விண்ணப்பிக்கிறார் கள். மீதமிருப்பவர்கள் விண்ணப்பிக்க வில்லை. மீதி பேர் விண்ணப்பிக்காத நிலையில் 4 சதவீதம் பேருக்கு அதனை  நடைமுறைப்படுத்துவதற்கு காப்பீட்டு நிறு வனம் முன்வருவதற்கு தயங்குகிறது. இது போன்ற நடைமுறை சிக்கல்கள்தான் இருக்கிறது” என்று கூறினார். தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி  உள்ளிட்ட உள்ளாட்சி பகுதிகளில் பணி புரியும் தூய்மைப் பணியாளர்களுடைய பணி நிரந்தரம் குறித்து தமிழகம் முழுவ தும் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக் கிறது. அண்மையில் அமைச்சர்கள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, சுமூகமான தீர்வைக் கண்டார்கள். முத லமைச்சர் உத்தரவிட்டு, மாவட்டங்களில் ஓர் ஆய்வுக் கூட்டம் நடத்தி, தூய்மைப் பணியாளர்களுடைய கோரிக்கை என்ன என்பதை கேட்டறிந்ததே அவர்களுக்கு ஒரு பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. இரண்டு மாதத்திற்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை தூய்மைப் பணி யாளர்களுடைய கோரிக்கை குறை தீர்க்கும் கூட்டத்தை நடத்தினால், இந்த மாதிரியான பிரச்சனைகள் எழுவதற்கு வாய்ப்பளிக்காமல் உடனுக்குடன் பிரச்ச னையை தீர்க்க முடியும் என்று உறுப்பி னர் பரிந்துரைத்தார். தமிழகத்தை தூய்மையாக வைத்திருக் கும் தூய்மைப் பணியாளர்களை பணி  நிரந்தரம் செய்வதற்கு தமிழ்நாடு அரசு  முன்வர வேண்டும். பணிகளை தனியாரி டம் கொடுப்பதை, தொகுப்பூதியம், மதிப்பூதியம் என்கிற முறையை உருவாக்கு வதை தவிர்த்து, அவர்களுக்கு எல்லாம் பணி நிரந்தர அடிப்படையில் வேலை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். மின் வாரியத்தில் 13 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த முறையில் பணிபுரியும்  10,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர் களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.  இடைநிலை ஆசிரியர்கள், பகுதி நேர  செவிலியர்கள், அங்கன்வாடி, சத்துணவு,  அரசு மதுபான (டாஸ்மாக்) ஊழியர்கள், மருத்துவம், டெங்கு கொசு ஒழிப்புத் தொழிலாளர்கள், குடிநீர் வாரியத் தொழி லாளர்கள் ஆகியோரின் கோரிக்கை களையும் முன்வைத்தார்.

பஞ்சமி நிலங்கள், புறம்போக்கு நில பிரச்சனை

தமிழ்நாடு முழுவதும் பஞ்சமி நிலங்களை மீட்டு, உரியவர்களிடம் ஒப்ப டைக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உறுப்பினர் கோரினார். தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுப் தப்பட்டவர்கள், ஏழை-எளிய மக்கள், சொந்த நிலம் இல்லாமல் பல்வேறு வகை யான அரசு புறம்போக்கு நிலங்களில் வீடு களைக் கட்டி பல தலைமுறைகளாக குடி யிருந்து வருகிறார்கள். அவர்களுடைய வீடுகள் இடிக்கப்படுகிறது என்று கவலை தெரிவித்தார். ‘ஒன் டைம் ஸ்கீம்’ என்று புதிதாக அறி விப்பு செய்து, ஏற்கனவே கலைஞர் கருணாநிதி கொண்டு வந்த திட்டத்தைப் போல, அனைவருக்கும் வீடு கிடைப்பதற் கான ஒரு வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும். நீர்நிலை புறம்போக்குகளில் இருக்கும் வீடுகளை நீதிமன்றம் இடிக்கச் சொல்வதை தவிர, அவர்களுடைய வாழ்விடம் குறித்து எந்தவிதமான கவலை யும் தெரிவிக்காத அணுகுமுறை ஏற்புடை யதல்ல. அரசு அதனை கவனத்தில் கொள்ள  வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள்

பொருளாதார மந்த நிலை, பண வீக்கம் அதிகரித்துள்ள இந்த காலத்தில், கடன் பெறுவதில் பெரும் சிரமங்கள் ஏற்படுகிற இந்த நேரத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை பாது காப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சின்னதுரை வலி யுறுத்தினார்.