Of Land Lives snd Lores’, போராட்ட வாழ்க்கையின் கதைகள். விவசாயிகள் அமைப்புக்கும் கட்சிக்குமாக இந்தியா முழுவதும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடத்திய பயணங்கள். ஒவ்வொரு பயணத்தின்போதும் முதலில் கண்ணிலும் பின்னர் கேமராவிலும் பதிவான மனிதர்கள், மண், இயற்கை, வாழ்க்கை முறைகள் கதைகளாக மாறும் காட்சி படிமங்கள். அவற்றை அறிமுகம் செய்துள்ளார் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச் செயலாளருமான விஜு கிருஷ்ணன். ஆகஸ்ட் 28 வெள்ளியன்று கோழிக்கோடு கலைமன்றத்தில் (ஆர்ட் கேலரி) அவற்றை காட்சிக்கு வைத்துள்ளார்.
புகைப்படத்தின் மூலம் உருவாக வேண்டியது அதை படம்பிடிக்கும் தருணத்தின் மனித நேயம் அல்லது மனிதா பிமானம் என தெரிவித்தவர் பிரபல புகைப்பட நிபுணரான ராபர்ட் பிராங்க். அவரது ‘தி அமெரிக்கன்ஸ்’ போன்ற புகைப்படத் தொகுப்பில் ஏகாதிபத்தியத்தின் பிடியில் துய ரத்துக்குள்ளான கறுப்பினத்தவர்களையும் தொழிலாளர் களையும் பார்க்கலாம் என்றார். விஜுவின் புகைப்படங்க ளில் காணப்படுவது பெரும்பாலும் தொழிலாளிகளும் விவ சாயிகளும் வறுமையை அனுபவிக்கும் மனிதர்களும்தான். ஓடிக்கொண்டிருக்கும் ரயிலிலோ காரிலோ பயணித்த படி எடுத்த வெளிக்காட்சிகள் என்பதால் பலதும் அரியவை யாகவும் உள்ளன. இதே அரியவகைகள் பிராங்கின் புகைப் படங்களிலும் உள்ளன. புகைப்படங்களுடனான தனது பயண அனுபவங்களை அவர் இங்கே பகிர்ந்துள்ளார். பணத்தில் துணை வர்த்தக கப்பலில் பணியாற்றிய தாய்மாமன் முதல் முறையாக விஜூ சிறுவனாக இருந்தபோது ஒரு கேமராவை பரிசளித்தார். ஒரு பக்கம் கேமராவும் மற்றொருபக்கம் வானொலியும் கொண்ட பானாசோனிக்கின் சிறப்பான வடிவமைப்பைக் கொண்ட பிலிம் கேமரா அது. தொடக்க கால கிளிக்குகள் அனைத்தும் அதில்தான். பின்னர் சகோத ரியும் தோழர்களும் நண்பர்களும் சேர்ந்து மற்றொரு கேமரா பரிசளித்தனர். வட இந்தியாவிலும் பிற நாடுகளிலும் மேற்கொண்ட பயணங்களின்போதுதான் அதிகமாக கேமரா பயன்படுத்தப்பட்டது. அவை அல்லாத மற்ற புகைப்படங்கள் அனைத்தும் மொபைல் போன் கேமராவில் எடுத்தவை. விவசாயிகளின் பிரச்சனைகளைக் கேட்கவும் அவர் களை அணிதிரட்டவுமான பயணங்கள் பெரும்பாலும் தனி யாகத்தான். புத்தகங்களும் திரைப்படங்களும் புகைப்படக் கலையுமே துணை. திடீரென மனதுக்கு நெருக்கமாகும் காட்சிகளை படம்பிடிக்க செல்போன் கேமராவே வசதி. வாகனங்களில் இருந்து புறக்காட்சிகளை படம்பிடிக்க கைகளை நடுக்கமின்றி பயன்படுத்துவதால் குலுங்காமல் இருக்கும். மனிதர்களை படம்பிடிப்பதே கூடுதல் விருப்பம். ஆனால் பல்வேறு தருணங்களில் அவர்களது விருப்பம் கேள்விக்குறியாகி புறக்கணிக்கப்படும். மோனோகிராமும் ஸால்காடோயும் பிரபல பிரேசில் புகைப்படக் கலைஞரான ஸெபாஸ்டோ ஸால்காடோ, சேகுவேராவின் பிரபலமான புகைப்படங் களை எடுத்த ஆல்பர்டோ கோல்டா, சுனில் ஜானாப் ஆகி யோரே முன்னோடிகள். புகைப்படங்களில் பெரும்பாலும் கருப்பு வெள்ளையில் எடுப்பதும் இவர்களின் புகைப் படங்களோடு உள்ள விருப்பமே ஆகும். சுனில் ஜானாப்பின் கய்யூர், தேபாகா, தெலுங்கானா போராட்டக் காட்சிகள் மிக அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி உள்ளன. ஸால்காடோ வெறும் ஒரு புகைப்படக்கலைஞர் என்பதற்கு மேல் மனித நேயம் மிக்க கதைகளுக்கு சொந்தக்காரர். பல்லாண்டு காலம் வறியவர்கள், தொழிலாளர்கள், குடியுரிமை மறுக்கப்பட்டோரின் வாழ்க்கையை அவர் படம்பிடித்தார். இயற்கையும், பறவைகளும், படைப்புகளும் விருப்ப மான காட்சிகளாயின. இந்தியாவில் வறுமையில் வாடு வோரை, குடியுரிமை மறுக்கப்படும் சிறுபான்மையினரை, தொழிலாளர்களைப் படம்பிடிக்கும்போது அவர்கள் தான் உள்ளத்தில் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் போராட்டக்களம் கண்டவர்கள்தான். ஆனால் என்னைப் பொறுத்தவரை போராட்டமே வாழ்க்கையானது. அதற்குள் புகைப்படக்கலை புகுந்துகொண்டது. செனகலில் பெண்மணி சர்வதேச தொழிற்சங்க மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆப்பிரிக்காவின் செனகலுக்குச் சென்றேன். அங்கு ஆப்பிரிக்க மறுமலர்ச்சி நினைவுச்சின்னத்தின் முன்பு நின்ற போது ஒரு பெண் புகைப்படம் எடுத்துத் தரும்படி கூறினார். அந்த பெண்மணிதான் கண்காட்சியில் மிகவும் கவனம் பெற்ற புகைப்படம். இதுபோன்று பெரும்பாலான புகைப் படங்களும் நாடி வந்தவையாகும். ஆப்பிரிக்கா அல்லாது துபாய், பாரிஸ், ஜப்பானின் குரூட்டோ, ஹிரோசிமா ஆகிய இடங்கில் எடுத்த புகைப்படங்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. மனிதர்கள் அல்லாத பழைய சுவர் களில் ஏதேனும் பழமை மாறாத எச்சங்கள், பறவைகள், பூக்கள், கட்டிட உருவாக்கம் இவை அனைத்தும் புகைப் படமாக்கப்பட்டன. செனகலில் ஸ்லேவ் தீவில் உள்ள பாவூபாப் மரம், துபாய் அருங்காட்சியத்தில் உள்ள கி.மு 2000 க்கு முந்தைய சிற்பம், மகாராஷ்டிராவில் (அவுரங்காபாத்) உள்ள பிபி க மக்பரா இவை அனைத்தும் விருப்பமானவை. இவற்றை அகோரா, ஒற்றைத்தீவு போன்ற சர்வதேச புகைப்படக் கலைப் பக்கங்களின் ஆன்லைன் காலரியில் காட்சிப்படுத்த முடிந்ததில் மகிழ்ச்சி. கண்ணூரில் இருந்து எடுத்த புறாவின் படம் ‘ஒன் ஐலேண்ட்’ மொபைல் புகைப்படக்கலையில் இந்தியாவின் மிகச்சிறந்த புகைப்படங்களில் ஒன்றாக தேர்வானது. படங்களை திருத்தம் (எடிட்) செய்வதும் சுயமாகத்தான். அசாமில் குடியுரிமை மறுக்கப்பட்டோர் இந்திய குடிமக்களை முஸ்லீம் என்பதால் குடியுரிமை மறுக்கும் அரசே அசாமில் உள்ளது. அங்கு இரண்டு விவ சாயிகள் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். அவர் களது சடலங்களுக்கு மேல் நின்று ஒரு புகைப்படக்காரர் ஆவேசக்கூச்சலிடும் கொடிய சம்பவம் நடந்தது. அசாமில் குடியுரிமை மறுக்கப்பட்டோருக்கான நிவாரணங்களுடன் அவர்களது முகாமுக்கு கட்சி மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் குழு சென்றது. அங்கு பார்த்த மக்களின் முகத்தோற்றம் வாழ்க்கையில் எப்போதும் மறக்க முடி யாதது. காந்தி திரைப்படத்தில் இந்தியப் பிரிவினையை காட்டும் காட்சிகளுக்கு இணையாக இருந்தது அந்த காட்சி. அன்றுவரை வாழ்ந்த ஊரில் இருந்து வங்காளிகள் என்று கூறி நாடுகடத்தப்படும் அவலம். அன்று நிவாரண முகாமில் இருந்த ஒரு குழந்தையின் படம் ஒரு மக்கள் திரளின் ஒட்டுமொத்த அச்சத்தை உலகத்துக்கு பறை சாற்றுவதாக தோன்றியது. அந்த புகைப்படமும் கண்காட்சி யில் இடம்பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் சுமைப்பணியாள ரான முருகன். நாகர்கோவில் மண்பாண்டத் தொழிலாளி கள், நீலகிரியில் நிலவெளியேற்ற அச்சுறுத்தலுக்கு உள் ளாகி இருப்போர், மணிப்பூரில் பெண்களுக்கு மட்டுமான இமா மார்க்கெட், உத்தரகண்டில் கட்சி நிகழ்ச்சிக்கு திரண்டு வந்த விவசாயிகள் என நாட்டில் உழைக்கும் மக்களின் வாழக்கையை இதன்மூலம் பதிவு செய்ய முடிந்தது. நிவாரண முகாம் படங்கள் கேரளத்துக்கு வெளியே சென்றால் வறிய இந்தியாவின் உண்மை முகத்தைக் காண முடியும். சில புகைப்படங்கள் எடுக்கும்போது பெரும் மனக்கலக்கம் ஏற்படும். கிழிந்த ஆடையுடன் சாலையில் கிடக்கும் தொழிலாளியின் படம் கண்காட்சியில் இருந்து தவிர்க்க வேண்டியதாயிற்று. ஆனால் நாட்டு மக்களிடம் ஆட்சி அதிகாரம் செலுத்தும் கொடுமைகள் முழுவதையும் வெளிப்படுத்த ஒரேயொரு புகைப்படத்தால் சாத்தியமாகும் என்கிற நம்பிக்கை உள்ளது. நாஜிகளின் கொடுமையை வெளிக்கொணர புகைப் படங்கள் வகித்த பங்கு அளப்பரியது. நிவாரண முகாம் களில் துயரம் அனுபவிக்கும் மக்களின் புகைப்படங்கள் மன வருத்தம் தருவதாக இருந்தாலும் அது ஒரு வரலாற்று ஆவணமும் ஆகும். அரச பயங்கரவாதம் மட்டுமல்லாது, ஒடிசாவில் புயல், வயநாடு பேரழிவு போன்ற இயற்கை பேர ழிவுகளையும் படம்பிடிக்க முடிந்தது. 2002 குஜராத் கலவரத்தின் உண்மை அறியும் குழுவில் இடம்பெற்றி ருந்தேன். அந்த கலவரத்தின் துயரத்தை உணர்த்தும் எச்சங்களின் புகைப்படங்கள் பலவற்றை மீட்டெடுக்க முடி யாமல் போனதால் கண்காட்சியில் இடம்பெறவில்லை. மக்களில் ஒருவனாக… பாஜக அரச பயங்கரவாதத்துக்கு எதிராக பல்வேறு பழக்கவழக்கம் - மொழிகள் பேசும் மக்களை அணிதிரட்ட வேண்டிய பொறுப்பை நிறைவேற்றுவது கடுமையான பணி. அவர்களில் ஒருவனாக மாறுவது என்பதே அந்த பணியை மேற்கொள்ள மிகவும் எளிய வழி. அப்போது சிந்தித்துப் பார்க்க முடியாத உணவுகள் வரை நமக்கான தாகிவிடும். அவர்கள் உண்பதை நம்மாலும் உண்ண முடி யும் என்கிற மனநிலையோடு மாறுபட்ட பல உணவுகளை யும் உட்கொள்ள முடிந்தது. எட்டு மொழிகளை வாசிக்க வும் 11 மொழிகளில் பேசவும் கற்றுக்கொண்டேன். பெருந் தொற்று காலத்தில் ஸ்பானிஷ் மொழி படித்தேன். விவசாயிகள் போராட்டததின் பகுதியாக வடஇந்தி யாவில் நடத்தப்பட்ட பேரணிகளில் தொழிலாளிகள், விவ சாயிகளுடன் வெகுமக்களை திரட்ட முடிந்தது அவர்களு டன் கலந்ததால் ஏற்பட்ட விளைவாகும். 2014 க்கு பிந்தைய மோடி ஆட்சி காலத்தில் சுமார் ஐந்தரை லட்சம் விவசாயி கள் தற்கொலை அல்லது வெளியேற்றம் செய்யப்பட்டனர் என்பது அரசாங்கத்தின் புள்ளிவிவரம். தில்லி விவசாயி கள் போராட்டத்தின்போது 736 தோழர்கள் கொல்லப் பட்டனர். கடந்த பத்தாண்டுகளில் ஒடுக்குமுறைக்கு உள்ளான விவசாயிகளின் கோபாவேசம், பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன் நடந்த நெடும்பயணத்தில் ஓங்கி ஒலித்தது. கடல்மட்டத்தில் இருந்து 1451 மீட்டர் உயரத்தில் பனி படர்ந்த உத்தராகண்டின் கர்ணபிரயாகில் கடுமையான காலநிலையை எதிர்கொண்டு கட்சி மாநாட்டுக்கு வந்த பெண் பிரதிநிதிகளை அரங்கில் இருந்து படம்பிடித்ததும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. ஆகஸ்ட் 28 வியாழனன்று கோழிக்கோடு ஆர்ட் காலரி யில் கண்காட்சியை பிருந்தா காரத் திறந்து வைத்தார். நட்சத்திர கால்பந்து வீரரும் புகைப்படக் கலைஞருமான சி.கே.வினித், கட்சியின் மாவட்ட செயலாளர் மகபூப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். - தேசாபிமானி வாரப்பதிப்பில் அகிலா பாலகிருஷ்ணன் தமிழில் சி.முருகேசன்