articles

img

முன்கூட்டியே முதுமையடையும் மனித குலம் - சிதம்பரம் இரவிச்சந்திரன்

முன்கூட்டியே  முதுமையடையும் மனித குலம்

44 மற்றும் 60 வயதாகும்போது மனிதர்கள் திடீரென்று அதிக முதுமையடைகின்றனர். வயதாவது என்பது மெதுவாக அல்லது படிப்படியாக நிகழும் ஒரு சம்பவம் இல்லை என்று சமீபத்தில் நடந்த அமெரிக்க ஆய்வு கூறுகிறது. குறிப்பிட்ட வயதில் திடீரென்று ஆரோக்கியப் பிரச்சனைகள் ஏற்படுவது ஏன் என்பதற்கு இந்த ஆய்வு விடை சொல்கிறது.

ஒரு நாளில் வருவதில்லை முதுமை உடலில் திடீரென்று சுருக்கங்கள் தோன்றுவது, முன்பு  வந்திராத வலிகளை, வேதனைகளை அனுபவிப்பது மற்றும் ஒரு நாள் இரவிலேயே வயதாகிவிட்டது போன்ற  பொதுவான உணர்வு ஏற்பட்டால் அறிவியல் இந்த  ஆய்வின் மூலம் அதற்கு பதில் சொல்கிறது. மெதுவாக, படிப்படியாக மாற்றமடைவது என்பதற்கு பதில் முதுமை  என்பது ஒருவர் வாழ்வில் தூண்டப்பட்ட இரண்டு நிலை களில் துரிதமாக நிகழ்கிறது. இதற்காக 25 முதல் 75 வயது வரை உள்ளவர்கள் பலரின்  ஆயிரக்கணக்கான மூலக்கூறுகள் ஆராயப்பட்டபோது வயதுடன் தொடர்புடைய பல முக்கிய மாற்றங்கள் உடலில்  44 மற்றும் 60 வயதில் ஏற்படுவது கண்டறியப்பட்டது. எலும்பு கள், மூட்டுகள், தசைகள், தசை நார்களில் ஏற்படும் வலி  (Musculoskeletal), இதய நோய் போன்றவை திடீரென்று  ஒரு குறிப்பிட்ட வயதில் மட்டும் அதிகமாகத் தோன்று வதை இந்த ஆய்வு தெளிவாக விவரிக்கிறது. “நாம் திடீரென்று ஒரு நாளிலேயே முதுமையடைந்து விடுவதில்லை. இதற்குக் காரணம் நம் உடலில்  சில திடீர்  மாற்றங்கள் ஏற்படுவதே” என்று ஸ்டான்போர்டு பல்கலைக் கழக மரபணுவியல் மற்றும் தனிநபர் மருத்துவப்  பிரிவு இயக்குனரும் ஆய்வுக் கட்டுரையின் மூத்த ஆசி ரியருமான பேராசிரியர் மைக்கெல் ஸ்நைடர் (Prof  Michael Snyder) கூறுகிறார். நாற்பதுகளின் நடுப்பகுதி யில் இந்த மாற்றங்கள் வேகமாக நிகழ ஆரம்பிக்கின்றன. “108 தன்னார்வலர்கள் தங்கள் இரத்தம், மலம், தோல்,  வாய், சுவாசம் தொடர்பான மாதிரிகளை ஒன்று முதல்  ஏழு ஆண்டுகளுக்கு ஒரு சில குறிப்பிட்ட மாத இடை வேளைகளில் ஆய்வாளர்களுக்கு வழங்கினர். வேறுபட்ட 135,000 ஆர் என் ஏ மூலக்கூறுகள், புரதங்கள்,  வளர்சிதை மாற்றிகள், பங்கேற்பாளர்களின் குடல் மற்றும் தோலில் வாழும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும்  பூஞ்சைகள் போன்ற நுண்ணுயிரிகளை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். அபரிமிதமாக உள்ள பெரும்பாலான மூலக்கூறு கள், நுண்ணுயிரிகள் படிப்படியாக வரிசைப்படியான முறை யில் மாற்றமடையவில்லை.  பெரிய மாறுதலடையும் மூலக்கூறு கூட்டங்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்த போது அவை ஒருவரின் நாற்பதுகளின் நடுப்பகுதி மற்றும்  அறுபதுகளில் மாறுவதை கண்டுபிடித்தனர். நாற்பது களின் நடுப்பகுதியில் நிகழும் மாற்றங்கள் எதிர்பாராதவை. ஆண் பெண் உடலில் தோன்றும் முதுமை முன்பு இதற்கு பெண்களின் மாதவிடாய் நிறுத்தத்திற் கான காலகட்டமே (Perimenopause) காரணம் என்று கருதப்பட்டது. ஆனால் ஆண்களின் உடலிலும் நாற்பது களின் நடுப்பகுதியில் இந்த மாற்றங்கள் நிகழ்கின்றன. பெண்களில் மாதவிடாய் நிறுத்தத்திற்கான அல்லது மாத விடாய் காலம் இந்நிகழ்வுக்கு காரணமாக இருக்கலாம்.  ஆனால் தரவுகளின் அடிப்படையில் ஆராய்ந்தபோது  மாற்றங்கள் ஆண்களிலும் நிகழ்வது கண்டுபிடிக்கப்பட்டது. “இதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம்” என்று  ஸ்டான்போர்டு மருத்துவக் கல்லூரி முன்னாள் முனை வர் பட்ட ஆய்வாளரும் ஆய்வுக் கட்டுரையின் முதல் ஆசிரியரும் தற்போது சிங்கப்பூர் நன்யாங் (Nanyang) தொழில்நுட்பக் கல்லூரியில் விஞ்ஞானியாக பணி யாற்றுபவருமான டாக்டர் சியாவோடாவ் ஷென் (Dr Xiaotao Shen) கூறுகிறார். மாற்றங்களின் முதல் அலை  இதய நோய் மற்றும் காஃபின், ஆல்கஹால், லிப்பிடுகளை  வளர்சிதை மாற்றமடையச்செய்யும் ஆற்றலில் ஏற்படுகிறது. மாற்றத்தின் இரண்டாவது அலை நோய் எதிர்ப்பு  சக்தியை ஒழுங்குபடுத்துதல், கார்போ ஹைடிரேட்டு களை வளர்சிதைவடையச் செய்தல் மற்றும் சிறுநீரகச் செயல்பாடுகளில் ஏற்படுகிறது. தோல் மற்றும் தசைகள் முதுமையடைவது இரண்டு காலகட்டங்களிலும் நிகழ்கின்றன. வாழ்வின் பிற்பகுதியில் அதிகமாக முதுமை யடைவது 78 வயதை ஒட்டி நிகழ்கிறது என்று முந்தைய ஆய்வு கூறியது. ஆனால் இந்த புதிய ஆய்வில் பங்கேற்பா ளர்களில் சிலர் 75 வயதுடையவர்கள். இதனால் இந்தக் கூற்று விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்  படவில்லை. வயதுடன் தொடர்புடைய பல நோய்கள் முதுமையில் தவணை முறையில் அதிகரிக்கவில்லை என்று முந்தைய ஆய்வு கூறியது. இந்த ஆய்வு 60 வய தில் அல்சைமர்ஸ் (Alzheimer’s), இதய நோய்க்கான வாய்ப்புபோன்றவை அதிக அளவில்  தோன்றுகின்றன என்று கூறியது. முதுமையுடன் தொடர்புள்ள சில நோய்களுக்கான மாற்றங்கள் அதிக மன அழுத்தத்திற்குரிய நாற்பது களின் நடுப்பகுதியில் ஆல்கஹால் வளர்சிதை செயல்  பாட்டுடன் தொடர்புள்ள மாற்றம் போன்ற வாழ்க்கை முறை, நடத்தை பண்புகளாலும் ஏற்படலாம். மிக விரை வான தசை இழப்பு ஏற்படும் காலம் போன்ற சமயங்களில்  அதிகமாக உடற்பயிற்சி செய்தல் போன்ற செயல்பாடு களை மேற்கொள்ள இந்த ஆய்வு முடிவுகள் உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உடலில் நிகழும் மாற்றங்களை உணர்ந்தால் “நாம் உடல் நலத்துடன் இருக்கும்போதே நம் வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று ஸ்நைடர் கூறுகிறார். இது பற்றிய ஆய்வுக் கட்டுரை நேச்சர் ஏஜிங் (Nature Aging) என்ற இதழில் வெளிவந்துள்ளது. மனித மனம் போலவே உடலும் மகத்தான இரகசியங்களை தன்னுள்  ஆழமாக புதைத்துவைத்துள்ளது. இவற்றை ஆராய்ந்த றிந்து அதற்கேற்ப வாழ முயன்றால் நாம் நலமுடன் வாழ லாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.