சாணிப்பால் சவுக்கடி கொடுமைக்கு முடிவுகட்டிய மண்ணில் கூடுவோம்
சாதியைக் குறித்துப் பேசுவ தற்கு அச்சப்பட்டு மௌன மாய்க் கடந்து செல்வது பாதுகாப்பானது என்று பல அரசியல் இயக்கங்கள் கருதுகின்றன. திருநெல்வேலி யில் சாதி ஆணவப் படுகொலை செய்யப் பட்ட பொறியாளர் கவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட அதே நாளில் தூத்துக்குடியில் தேர்தல் பரப்புரைக்கு வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒரு எட்டு சென்று கவின் பெற்றோர்களுக்கு ஆறுதல் தெரிவித்திருக்க வேண்டும். அவரது கவனத்திலேயே அது இல்லை என்பதற்கு வாக்குகளைப் பற்றிய அவரது கவனமே காரணம். இதை இங்கே குறிப்பிடுவதற்கு காரணம் சாதியைப் பற்றிய அரசியல் கட்சிகளின் அணுகுமுறைக்கு இது ஒரு உதா ரணமாக இருக்கிறது என்பதால் தான். இங்கே சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதற்கு மட்டுமல்ல, புல்லட் ஓட்டியதற்காக, நன்றாகப் படித்ததற்காக, நல்ல வீடு கட்டிக் கொண்டதற்காக, டிஜிட்டல் பேனர் வைத்ததற்காக, டீ சுவையாக இருக்கிறது என்றதற்காக, ஸ்பீடு பிரேக்கர் அமைத்துக்கொண்டதற்காக - இப்படி காரணமே இல்லாமல் எத்தனையோ தாக்கு தல்களும், வன்கொடுமைகளும் ஏன் வன்கொலைகளும் கூட நடக்கின்றன. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பங்களிப்பு இந்நிலையில்தான் தமிழ்நாடு தீண்டா மை ஒழிப்பு முன்னணி ஈடு இணையற்ற களப்பணிகளையும், கருத்தியல் பணிக ளையும் செய்து வருகிறது. வன்கொடுமைக ளுக்கு எதிராக களத்திலும் வழக்காடு மன்றத்திலும் போராடுவது தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பிரதானப் பணியாக இருக்கிறது. இந்த உழைப்பும், அக்கறை யும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வை யும், நீதியையும் உறுதிப்படுத்தி வரு கின்றன. மறுபுறத்தில் சாதிய அமைப்பு குறித்த உரையாடல்களை சமகாலத்தில் சமரச மின்றி நடத்துகிற பிரதானமான பணியை தீண்டாமை ஒழிப்பு முன்னணி செய்து வருகிறது. கருத்தரங்குகள், கட்டுரைகள், உரையாடல் வடிவங்கள் என்று சாத்தியமான அனைத்து வடிவங்களிலும் மக்களோடு உரையாடல்களை தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்துகிறது. 2010-இல் துவங்கி 15 ஆண்டு கால பயணத்தை தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் கருத்தியல் ஆயுதமான ‘அணையா வெண்மணி’ நிறைவு செய்திருக்கிறது. மேலும் கம்பீரமாக களத்தில் நிற்கிறது. கட்டுரைகள், நேர்காணல்கள் என இக்கா லத்தின் கருத்துக் கருவூலமாக அணையா வெண்மணி மக்களிடம் சென்றடைகிறது. இது இன்று மட்டுமல்ல, என்றுமே நிச்சய மாக ஒரு வரலாற்றுச் சாதனை தான். தூய்மைப் பொறியியல் துறை உருவாக்குங்கள் சமீப நாட்களில் தூய்மைப் பணியாளர் கள் பிரச்சனை கூர்மையான விவாதப் பொருளாகி வருகிறது. இவ்விவாதங்கள் தீர்வை நோக்கி பயணிக்க வேண்டும். இப்பிரச்சனையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரலாற்றுப் பங்களிப்புகளை செய்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு வந்துவிட்ட மகத்தான அறிவியல் யுகத்தி லும் கையால் கழிவு அகற்றுதல் என்கிற கொடுமை நம் தேசத்தில் நடைமுறையில் இருக்கிறது. ஒடுக்கப்பட்ட சாதியினர் மீதான குரூர ஒடுக்குமுறையாக ‘உடலால் கழிவகற்றுதல்’ அவர்கள் மீது திணிக்கப் பட்டுள்ளது. இதனை ஒழிப்பதற்கு ஏராளமான இயந்திரங்கள் கண்டு பிடிக்கப்பட வேண்டும். அதற்கான தொழில்நுட்பங்க ளை உருவாக்கிட அண்ணா தொழில் நுட்ப பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் துப்புரவுப் பொறி யியல் துறை என்கிற தனித்துறை உரு வாக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக எழுப்பி பெரும் பங்களிப்பை தீண்டாமை ஒழிப்பு முன்னணி நல்கி வருகிறது. அதே நேரத்தில் விஷவாயு தாக்கி மரணமடைகிற குடும்பத்தினருடன் நின்று மறுவாழ்வை உறுதி செய்து வருகிறது. வழக்குப் பதிவு முதல் நிவாரணம் பெறு வது வரை இரண்டு நாட்கள் வரை நீடித்த தொடர் போராட்டங்களை நடத்தியிருக்கி றது தீஒமு. சட்டப்படியான நிவாரணம் முப்பது லட்சம் ரூபாயை பெற்றுத் தருகிற வரை போராட்டக்களத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தோழர்கள் நிற்கி றார்கள். பட்டியலின ஊராட்சி மன்றத் தலை வர்கள் தேசியக் கொடி ஏற்றமுடியாத பிரச்ச னை தீஒமு ஆய்வில் முன்னுக்கு வந்த பிரச்சனை ஆகும். 2012 ஆகஸ்ட் 11 அன்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி தனது களஆய்வு முடிவுகளை வெளியிட்டது. இத னைத் தொடர்ந்து ஆகஸ்ட் 12 அன்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்க ளுக்கும் எழுதிய நேர்முக கடித எண் 2035 நாள் 12.08.2022 ன் படி ஆகஸ்ட் 15 அன்று அனைத்து பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் பாதுகாப்பு வழங்கி அவர்கள் கொடி ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த கடிதம் ஏற்படுத்திய தாக்கத்தை காலம் என்றும் மறவாது. சாதியம் தகர்ப்போம்; மனிதம் வளர்ப்போம் 2020 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் நடை பெற்ற தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 3ஆவது மாநில மாநாட்டின் போது தமிழ்நாடு முழுவதும் சாதியம் தகர்ப்போம் மனிதம் வளர்ப்போம் என்கிற முழக்கத்தை முன்வைத்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாபெரும் மக்கள் பரப்புரை இயக்கத்தை மேற்கொண்டது. இந்தப் பரப்புரை இயக்கத்தை விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என். சங்கரய்யா அவர்கள் துவக்கி வைத்தார். தோழர் ஆர். நல்ல கண்ணு முதலான இடதுசாரி இயக்கத் தலை வர்களும் மக்கள் இயக்கங்களின் தலை வர்களும் திரைப்படத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த ஆளுமை களும் சாதியம் தகர்ப்போம், மனிதம் வளர்ப்போம் என்கிற இந்தப் பரப்புரை இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டு ஆதரவளித்தார்கள். சாதி குறித்த அறிவியல்ப் பூர்வமான புரிதலும் அணுகுமுறையும் தான் சாதியி லிருந்து விலகி நிற்கும் மனவலிமையை மக்களுக்கு வழங்கிட முடியும். பல்லாயி ரக்கணக்கான ஆண்டுகளாக மனித குலத்தின் வரலாற்றுப் பாதையில், சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வலிந்து திணிக்கப்பட்டதே சாதி என்பதை மக்கள் உணர்ந்து கொள்வது அவசியம். இந்திய சமூகத்தில் சாதி எவ்வாறு உருக்கொண் டது? இந்த அநீதியான அமைப்பை கடவுளே உருவாக்கியதாக சொல்லப்படு வது உண்மையா? குறிப்பிட்ட ஒரு பகுதியினருக்கு அனைத்து வளங்களையும் எல்லையற்ற உரிமைகளையும் சாதி அமைப்பு வழங்கியதன் அடிப்படை என்ன? - என்கிற கேள்விகளுடன் மர்மப் பேழை யாகவே ‘சாதி’ இருக்கிறது. எனவே தான் நிறைய படித்தவர்களாலும் கூட சாதியைக் கடக்க முடிவதில்லை. 2025ஆம் ஆண்டு ஜனவரி 1 புத்தாண்டை வரவேற்கும் விதமாக ‘சாதியம் தகர்த்து மனிதம் வளர்த்திட 2025 புத்தாண்டே வருக’ என்ற தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பெரும் கனவை தாங்கிய வாசகங்களுடன் 25000க்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் அச்சிட்டு தமிழ்நாடு முழுவதும் ஒட்டப் பட்டன. சாதிச்சங்கங்களின் சாதிப் பெரு மிதங்களின் வாசகங்கள் மக்களுக்கு எளி தாக காட்சி தருகிறபோது, அதற்கு மாற்றான ஒரு சிந்தனையை ஏற்படுத்திட வேண்டும் என்பதே அந்த சுவரொட்டி இயக்கத்துக்கு காரணமாக அமைந்தது. ஐந்தாவது மாநில மாநாடு இத்தகைய பெருமிதமான பணிகளுடன் தீ.ஒ.முன்னணியின் 5ஆவது மாநில மாநாடு மயிலாடுதுறையில் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 தேதிகளில் நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் உழைக்கும் மக்களிடையே இச்செய்தியை எடுத்துச் செல்லவேண்டும் என்பதற்காக தீ.ஒ.மு, சென்னைக் கலைக் குழுவுடன் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை பத்து தினங்கள் கலைப்பயணத்தை நடத்தியது. இப்பயணம் சமூகப் பிரச்சனையான சாதியப் பாரபட்சங்களை முன்னிறுத்தியே நடத்தியிருக்கிறது. மக்களைத் திரட்டும் மகத்தான உரையாடல் இது. மிகப்பெரிய நம்பிக்கை தருகிற நகர்வாக அமைந்தது. இத்தகைய வரலாற்றுத் தடங்களோடு தீ.ஒ.முன்னணியின் 5ஆவது மாநில மாநாடு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் சாதியக் கொடுமைகளை எதிர்த்த போராட்டத்தில் மேலும் தீவிரமாக செயல்பட இம்மாநாடு பாதை அமைத்துக் கொடுக்கும். தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலே பழமைவாத சாதியப் பிற்போக்குத் தனங்களை - சாதியப் பெருமிதங்களை உயர்த்திப் பிடிக்கும் இந்துத்துவா மதவெறி சக்திகள் தீவிரமாக செயல்படுவது உழைக்கும் மக்களை மேலும் பிளவுபடுத்து கிறது. இந்தச் சவாலை தீரத்துடன் எதிர் கொள்ளும் செயல்வீரர்களை தீஒமுன்னணி யின் 5ஆவது மாநில மாநாடு உருவாக்கித் தரும். தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக் கணக்கான ஊழியர்கள் சாதியை மறுத்து இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பிறப்பால் வேறு வேறு சமூகத்தில் பிறக்க நேரிட்டவர்கள் ஒன்றிணைந்து சாதி தகர்ப்பை நோக்கி சமூகத்தை முன் நகர்த்து கிறார்கள் என்பது சமகாலத்தின் சரித்திரம் ஆகும். சாணிப்பால் சவுக்கடிக் கொடுமைக்கு நம் முன்னோர் முடிவுகட்டிய மண்ணில் கூடுவோம்! செப்டம்பர் 1 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் பேரணி பொதுக்கூட்டத்தில் சாதியை மறுத்து சங்க மிப்போம் தோழர்களே!