articles

img

மருத்துவமும் முதலாளித்துவமும் - டாக்டர் அனுஷ்வர் இறையன்பு

மருத்துவமும்  முதலாளித்துவமும் - டாக்டர் அனுஷ்வர் இறையன்பு

2024 டிசம்பர் 4-ஆம் நாள், அமெரிக்காவின் யுனை டெட் ஹெல்த்கேர் நிறு வனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரையன் தாம்ஸனை 27 வயது இளைஞர் லுயிஜி மான்ஜோனி நியூயார்க்கின் மான் ஹாட்டனில் சுட்டுக்கொன்றார். கைதான மான்ஜோனி யிடம் கிடைத்த கடிதத்தில், “இதை நான் தனியா கத்தான் செய்தேன். உலகில் அமெரிக்காவின் மருத்து வச் செலவுகள்தான் அதிகம். ஆனால் நாமோ சராசரி ஆயுளில் 42-ஆம் இடத்தில்தான் உள்ளோம். கார்ப்பரேட்டுகளின் அதிகாரம் அளவுகடந்து விட்டது. ஏனெனில் அமெரிக்கப் பொதுமக்கள் இவர்களைத் தப்பிக்க விடுகிறார்கள்” என்று எழுதியிருந்தார். உல கெங்கும் மக்கள் மான்ஜோனியின் பக்கம் நின்றனர். இதற்குக் காரணம், மருத்துவம் என்னும் பெயரில் முதலாளித்துவம் செலுத்தும் ஆதிக்கமேயாகும். மருத்துவத் துறையின் வளர்ச்சி மருத்துவத்துறையின் வளர்ச்சி மக்களின் நோய்க ளை விரைவில் கண்டறியவும் சிகிச்சையை ஆற்ற லோடு செலுத்துவதற்கும் பல்வேறு முறைகளை வடிவமைக்கிறது.

இருபதாம் நூற்றாண்டில் புதிய தடுப்பூசிகள், நுண்ணுயிர்க்கொல்லிகள், பரிசோதனை இயந்திரங்கள் போன்ற கண்டுபிடிப்புகளால் சராசரி ஆயுள் 30 ஆண்டுகளிலிருந்து 48 ஆண்டுகளாக உயர் ந்தது. 1950-1980 காலம்தான் மிகவும் வேகமான சராசரி ஆயுள் வளர்ச்சியை உலகம் கண்டது.  தொற்று நோய்களின் மீதிருந்த கவனம், இன்று நீரிழிவு, இரத்தக்கொதிப்பு போன்ற வாழ்வுமுறை தொடர்புடைய தொற்றாத நோய்களின் பக்கம் திரும்பியுள்ளது. எச்.ஐ.வி போன்ற கொடிய நோய்க ளுக்கும் தீர்வு காணும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். க்ரிஸ்பர் (CRISPR) தொழில்நுட்பம் கொண்டு சிசிஆர்5 (CCR5) மரபணு மாற்றத்தின் வாயிலாக எச்.ஐ.வி (HIV) எதிர்ப்பை உருவாக்க முடியும். வெள்ளை இரத்த அணுக்களில் ஏற்படும் புற்றுநோய்களை எதிர்க்க கார்-டி செல் சிகிச்சை (CAR-T Cell therapy) இன்று இந்தியாவிற்கும் வந்துள் ளது. ஆனால் கார்-டி செல் சிகிச்சைக்கு 25-50 லட்சம் ரூபாய் வரை செலவாகும். அதிநவீன சிகிச்சைகள் பல லட்சங்களை செலவழித்தால் மட்டுமே பெற முடியும். மருத்துவத்துறையில்  முதலாளிகளின் பங்கு பால் ஸ்டார் எழுதிய ‘அமெரிக்க மருத்துவமும் சமூக மாற்றமும்’ என்னும் நூலில், “அமெரிக்க மருத்து வம் இயற்கையாக வளரவில்லை, அது முதலா ளித்துவ சக்திகளால் உருவாக்கப்பட்டது” என்கிறார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பொது சேவையாக இருந்த மருத்துவம், இருபதாம் நூற்றாண்டில் இலாபத்தை நோக்கி நகரத் தொடங்கியது. அமெ ரிக்க மருத்துவக் கூட்டமைப்பு தொடங்கப்பட்டபின் அதிகாரம் சில கைகளில் குவிந்தது. இது மருத்து வத்தில் ஏகபோக உரிமைக்கு வழிவகுத்தது. மருத்துவ மனைகள் சேவை நிறுவனங்களிலிருந்து லாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாறின. மருத்துவக் காப்பீடும் முதலாளித்துவமும் மருத்துவக் காப்பீடு தனியார் சந்தையில் உருவானது; அரசினால் உருவாக்கப்படவில்லை. விசென்ட் நவாரோவின் ‘முதலாளித்துவத்தின் கீழ் மருத்துவம்’ என்ற நூல் குறிப்பிடுவதுபோல், காப்பீட் டாளர்கள் குறைந்த ஆபத்துள்ள ஆரோக்கியமான வர்களை மட்டும் சேர்க்க விரும்புகிறார்கள். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு காப்பீடு, வேலை யுடன் இணைக்கப்பட்டது. இதனால் முறைசாரா தொ ழிலாளர்கள், வேலையில்லா மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் பாதிப்படைந்தனர். மருத்துவப் பாதுகாப்பு என்பது, ஒரு உரிமை என்பதில் இருந்து வாங்கு பொருளாக மாறிவிட்டது. இவையனைத்தும் காச ளிக்கும் திறனை மட்டுமே கருத்திற்கொண்டவையே தவிர மக்களின் தேவைகளைக் கருதவில்லை. மருத்துவமே வர்க்கப் பிரிவினையை வலுப்படுத்தி யது. மேல்தட்டு மக்கள் உலகத்தர மருத்துவ வச திகளை அனுபவிக்கும்போது, ஏழைத் தொழிலா ளர்களுக்கு அந்த வாய்ப்பு அமைவதில்லை. சோஷலிச நாடுகளில் மருத்துவம் அனைவருக்கும் இலவசம். ஆனால் முதலாளித்துவ நாடுகளில் இலாபமீட்டும் கருவியாகவும், வர்க்க ஆதிக்கத்தின் உந்துசக்தியாகவும் இருக்கிறது.

புதிய ஜி.எஸ்.டி சலுகைகளின் கீழ் காப்பீட்டிற் கான ஜி.எஸ்.டி 0% ஆகக் குறைந்துள்ளது. ஆனால் தனியார் நிறுவனங்கள் அடிப்படைத் தொகையை உயர்த்தி இலாபம் ஈட்டுகின்றன. இதை அரசு கண்கா ணிக்க வேண்டும். 0% ஜி.எஸ்.டி சலுகையின் கீழ் உள்வரிச் சலுகைகள் (உள்ளீட்டு வரிக் கடன்)  கிடையாது. எனவே அந்தச் செலவுகளும் மக்களிடமி ருந்தே வசூலிக்கப்படும். ஏற்றுமதிப் பொருட்களுக்கு வழங்கப்படும் பூஜ்ய விகித வழங்கலில் (பூஜ்ய விகித வழங்கீடு) காப்பீடு வருவதில்லை. காப்பீடு ‘வரி விலக்கின் கீழ்’ (வரி விலக்கு) உள்ளதால், இச்சலு கைக்குக் கால அளவு உண்டு. கியூபாவின் சுகாதாரத்துறை கியூபாவில் மருத்துவமும் சுகாதாரத்துறையும் முழுமையாக அரசால் நடத்தப்படுகின்றன. அனைத்து மக்களுக்கும் இலவச மருத்துவம் என்பதே கியூபாவின் தாரக மந்திரம். மருத்துவப் பாது காப்பு அடிப்படை உரிமையாகும்; வர்த்தகமயமான வாங்குபொருளல்ல. உலகத்தின் தலைசிறந்த மருத்துவர்களை உருவாக்கும் நாடுகளில் ஒன்று கியூபா. உலகமெங்கும் கியூபாவின் மருத்துவர்கள் பல பேரிடர்களில் மக்களுக்கு மருத்துவ உதவிய ளிக்கும் உயரிய தொண்டினை ஆற்றுகின்றனர். கியூப குடிமக்களின் சராசரி ஆயுள் 79 ஆண்டு கள். குழந்தை இறப்பு ஆயிரம் பிறப்புகளில் நான்கு மட்டுமே - இலத்தீன் அமெரிக்காவிலேயே மிகக்குறைந்த எண்ணிக்கை. உள்நாட்டிலேயே பல தடுப்பூசிகளையும் மருத்துவ தொழில்நுட்பத்தையும் கியூபா தயாரிக்கின்றது. மருத்துவர்-நோயாளி விகிதம் மிக உயர்வானது (150 குடிமக்களுக்கு ஒரு மருத்து வர்). ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குடும்ப மருத்து வரையும் செவிலியரையும் அரசு அளிக்கின்றது. இந்தியாவில் இரு முகங்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சோஷலிச கொள்கைகள் அடங்கியுள்ளன.

அரசியல் சட்டப் பிரிவு 39 c & f, 47 போன்றவை மக்களின் உடல்நலம், பொது சுகாதாரம், ஊட்டச்சத்து ஆகியவற்றை மேம்படுத்த அரசு கடமைப்பட்டுள்ளது என்கின்றன. முதல் பெரும்  கம்யூனிஸ்ட் தலைவர்களுள் ஒருவரான எம்.என்.ராயின் மனிதநேய தத்துவம் பரிந்துரைத்த மக்க ளின் கண்ணியத்தையும், சுதந்திரத்தையும், சமூக நீதியையும் கருத்திற்கொண்டு சோஷலிச கருத்து களை அரசியலமைப்பு விவாதங்களில் நிபுணர்கள் வழங்கினர்.  இந்தியாவிலும் அரசு மருத்துவமனைகளில் அனைவருக்கும் இலவச மருத்துவம் அளிக்கப்படு கின்றது. கேரள அரசின் சாதனைகளால்தாம், இந்தி யாவிலேயே மருத்துவத்தில் தலைசிறந்த மாநில மாக அது திகழ்கின்றது. இந்தியாவிலேயே அதிக சராசரி ஆயுள், குறைந்த குழந்தை இறப்பு, மகப்பேறு இறப்பு விகிதம் கொண்ட மாநிலமாகக் கேரளா திகழ்கிறது. ஆனால் இந்தியாவில் தனியார் மருத்துவமனை கள் 63 சதவிகிதம். 80 சதவிகித மருத்துவர்கள் தனியார் துறையில் உள்ளனர். இந்திய தனியார் மருத்துவ சந்தையின் மதிப்பு 2022-இல் 31 லட்சம் கோடி  ரூபாய்; ஆண்டுக்கு 20 சதவிகித வளர்ச்சி. மக்களின் சொந்தச் செலவுகள் (சுய செலவுகள்) இன்னும் 40 சதவிகிதம். 54 சதவிகித தனியார் மருத்துவமனை கள் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டை ஏற்பதில்லை. ஏற்ப வர்களும் தேவையற்ற செலவுகளைக் கணக்கில் சேர்த்து அதிக லாபம் திரட்டுகின்றனர். அதிநவீன சிகிச்சைகள் ஏழை மக்களுக்குக் கிடைப்பதில்லை.

சிதைக்கும் மருத்துவச் செலவுகள் (பேரழிவுகரமான சுகாதார செலவுகள்) 26 சதவிகிதம். நிதி ஆயோக்கின் ஆய்வில், தனியார் மருத்துவமனைகளில் இந்தியக் குடும்பங்கள் 37 சதவிகிதம் அதிக சிதைக்கும் செலவுகளால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியா 140 கோடி மக்கள்தொகைக் கொண்ட நாடாகும். 2050-இல் 20 சதவிகித முதியவர்களைக் கொண்ட நாடாக மாறிவிடும். அமர்ந்த இடத்திலி ருந்தே வேலை புரியும் இன்றைய காலகட்டத்தில் வாழ்வாதார நோய்களும், சுற்றுச்சூழல் மாசால் ஏற்படும் நோய்களும் பன்மடங்காகும். இச்சூழலில் வலுவான எதிர்காலத்தை அமைக்க வலுவான மருத்து வத்துறையைக் கட்டமைக்க வேண்டும். இந்த நவீன  உலகில் கண்டுபிடிக்கப்படும் எண்ணற்ற மருத்துவ தொழில்நுட்பங்களின் கனிகளை அனைவரும் பெற வேண்டும். அதற்கு மருத்துவம் அனைவராலும் அடை யக்கூடியதாகவும், குறைந்த செலவு அளிக்கக்கூடிய தாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும் அமைய வேண்டும். அதற்குச் சோஷலிச சித்தாந்தத்தை இளைய மருத்துவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.